Skip to main content

MERCHANT OF VENICE ( in THAMIZH)


                                                       MERCHANT OF  VENICE
                                              PLAY  BY  SHAKESPEARE  ( 1600)
TALE     RETOLD    BY  MARY  LAMB ( 1800)
( Tales  from Shakespeare)
Adaptation/ Translation  in Thamizh  (  தமிழ்) by RSR
===============================
This  is  the  tenth  tale  in the  proposed  10  tales.
------------------------------------------------------------------------------------------------------INDEX TO THE OTHER TALES  IN THAMIZH AT
https://shakespeare4tamils.blogspot.com/p/index-page.html
original play by the BARD
http://www.opensourceshakespeare.com/views/plays/plays.php
http://www.opensourceshakespeare.com/views/plays/playmenu.php?WorkID=merchantvenice
-------------------------------------------
The  original  text  of  the  tale by Mary Lamb  is at
https://comediesmarylamb.blogspot.com/2020/02/merchant-of-venice.html?view=flipcard

-------------------------------------------------
Names  have  been  slightly  changed  for  Indian  students.

COPYRIGHT MATERIAL

========================================================
"and what's his reason?
 I am a Jew.
Hath not a Jew eyes?
hath not a Jew hands, organs,
dimensions, senses, affections, passions?
 fed with the same food, hurt with the same weapons,
 subject to the same diseases, healed by the same means,
warmed and cooled by the same winter and summer, as
a Christian is? If you prick us, do we not bleed?
if you tickle us, do we not laugh?
if you poison us, do we not die?
and if you wrong us, shall we not revenge?
 If we are like you in the rest, we will
resemble you in that. If a Jew wrong a Christian,
what is his humility? Revenge. If a Christian
wrong a Jew, what should his sufferance be by
Christian example? Why, revenge. The villany you
teach me, I will execute, and it shall go hard but I
will better the instruction."

( though  this  play  is almost  the  most  famous  of  the  incomparable  Bard,  it  apparently  has  anti-Jewish sentiments.  The  bard  himself  has  spoken  against  it through Shylock's  dialog.(see  the  quote above)
   Still,  every  nation, every  ethnic  group  and  every  caste/linguistic  group  has  its  share  of  good  and  bad  people.  To  stress  that  point,  Shylock,  in this adaptation,    is treated as  an individual  and not as a representative  of  any  group  or  class  and some liberties  have  been  taken  in the  tale.-- in the last  para). 

                                   வங்கதேச   வணிகன் 
----------------------------------------------------
   

     பண்டைய காலத்து வங்காள தேசத்தில் நீர் வழி வாணிபமும், கடல்  வணிகமும்  மிகவும்  சிறப்புற்று   இருந்தன..அதில்   சற்றும் வியப்பேதும்   இல்லை. இந்தியாவின்,  பிரம்மாண்டமான   நதிகள், கங்கையும், யமுனையும்,  சேர்ந்து, பின்னர்  அன்றைய  அங்கதேசம்   என்று    அறியப்பட்ட , இன்றைய பீஹார் மாநிலத்தின் தெற்கே இருந்தும் வடக்கிலிருந்தும்  சேரும்  பற்பல உபநதிகளை  எல்லாம்   சேர்த்துக்கொண்டு, பத்மா என்ற பெயரில்,  கங்கைத்  தாய் ,  ஆயிரம் ஆயிரம்    ஆண்டுகளாக    வங்காளப்   பகுதியில்,   பாய்ந்து,  மாநிலம்  முழுவதையும்  நீர்மயமான குட்டித்  தீவுகள்,  நிறைந்த டெல்டா  வடிகால்  நிலமாக   மாற்றுகிறாள்.   திபெத் வழியாக,   நமது   நாட்டின்,  வடகிழக்கு  மாநிலமான  அசாம்  வழியே பிரம்மபுத்ரா  நதியும் சீறிப் பாய்ந்து,    வங்காளத்தில்,  கங்கையுடன் சேர்ந்து  கொள்கிறது!  

கேரளத்தின்  ஆலப்புழை பகுதியில்,   சின்னஞ்சிறு  நதிகள் பாய்ந்து,  'குட்டநாடு'  பகுதி  முழுவதையும் ,   கேரளத்தின் நெற்களஞ்சியம்  ஆக்கியுள்ளது . அங்கு ,   ஏராளமான  கிராமங்கள்,   இன்றளவும்  படகு  வழிப்  போக்குவரத்து மட்டுமே  கொண்டுள்ளன.   கேரளமே இவ்வாறென்றால், வங்கத்திற்கு  கேட்கவா  வேண்டும்!..  
=====================_)=============================
   அன்றைய வங்க தேசத்தில்,  சந்திரபுரம் மிகவும்   முக்கியமான நதி  மற்றும், கடல் வியாபார   கேந்திரமாக இருந்தது.   அந்த   நகரில், அதுல்ய மகாஜன் என்ற  கடல்   வணிகன், பெயருக்கு  ஏற்றபடியே   இணையற்ற  நாணயமும்,  அன்புள்ளமும் கொண்டவனாகத் திகழ்ந்தான்.   அவனுக்கு ஏராளமான    செல்வமும், மிகவும்   சிறந்த நண்பர்களும்    இருந்தார்கள்.  அதி  அற்புதமான  வங்காள   தேசத்தின்,  இயற்கை உற்பத்திப்   பொருள்கள், போலவே  உலகப் புகழ்   பெற்ற   தாக்கா  மஸ்லின்  என்ற  மிகவும்   வேலைப்பாடு  பொருந்திய  மெல்லிய  ஆடைகள் பலவற்றையும்   கீழை   நாடுகளான,  ஸ்வர்ண  த்வீபம் என்ற  இன்றைய   பர்மா , மலயம், காம்போஜம்,  சுமத்ரா,ஜாவா  போன்ற  நாடுகளுக்கு ஏற்றுமதி  செய்து,  அங்கிருந்து   தனது  நாட்டிற்குத்  தேவையான  பொருட்களை இறக்குமதி  செய்து   நாணயமாக வாணிபம்  செய்து    வாழ்ந்துவந்தான் .   ஏழை   எளியவர்கள்,  எப்போது   வேண்டுமானாலும், அவசரத் தேவைக்கு   அவனிடம் நிதி   உதவி   பெறமுடியும்.   அவர்களால் திருப்பித் தர   முடிந்தாலும்,   முடியாவிட்டாலும்,  அவன் அது பற்றி    என்றுமே கவலைப்பட்டதில்லை.
வட்டிக்குப்  பணம்  கடன்  கொடுத்து,   அதன்  மூலம்  வாழ்க்கை    நடத்துவதை, அவன்  மிகவும்    வெறுத்தான். 

     அதே  நகரத்தில்,  சைலகன்  என்ற   ஒரு  கொடூர மனம்   கொண்ட வட்டிக்கடைக  கஞ்சனும்  இருந்தான்.  கந்துவட்டிச்   சைலகன்    என்றே அவனுக்குப்  பெயர்.  அவனிடம்  கடன்   வாங்கினால்,  ஒவ்வொரு மாதமும்   அந்தக்  கடனுக்கு   பத்தில்  ஒரு  பங்கு  வட்டி  தரவேண்டும்.    தராவிட்டால்,  நீதிமன்றம்    சென்று, கடன்   பட்டவனின்   சொத்து அனைத்தையும்   கபளீகரம்   செய்துவிடுவான்!   என்ன   செய்வது! பெரும்பாலும்  அவனிடம்  கடன்    வாங்குவோர்,   எழுத்தறிவில்லாத ஏழை விவசாயி  மக்கள். எனவே  அவர்களின்  நிலம் அனைத்தையும்  சைலகன்   தனதாக்குவது மிகவும்   எளிதாகப்  போய்விட்டது.    சைலகன்  வங்க தேசத்தவன்  அல்ல .  வெளிநாட்டுக்காரன்.  பிழைப்பு   தேடி  வரண்ட  ஒரு நாட்டில் இருந்து வங்கத்தில் குடியேறி  வட்டித் தொழில் செய்து வாழ்ந்தவர்களில்  அவனும்  .ஒருவன்.   ஒரு லட்சத்திற்கும்  மேலான ஜனங்கள் கொண்ட  சந்திரபுர நகரில்,   அவனைப்போன்ற வெளிநாட்டு தன வணிகர்கள்  நூறு  பேர்கள்  தான்  இருந்தார்கள்.  கடனாகத் தரும்  தொகைக்கு  ஆண்டுக்கு  பத்து  சதவீதம்  வட்டி வாங்குவதுதான்  அவர்களது  குழுவின்  வழக்கம்.    ,ஆனால் சைலகன் ஒரு மாததிற்கு    பத்து  சதவீதம்  வட்டி வாங்குவதை  அவனது  குழுவில்  இருந்த  மற்றவர்கள் கூட  ஏற்கவில்லை.    
   
 சைலகன்  அவர்களிடம் '  இதோ பாருங்கள்  நண்பர்களே!   நான்  என்ன  எவனையும்  என்னிடம்தான்  கடன் வாங்கவேண்டும்    என்று தெருமுனையில்   நின்றுகொண்டு  கூவிக்  கூவி  அழைக்கிறேனா?  அவர்களாகத் தானே  வருகிறார்கள்!   ஏன்? அவர்களுடைய  அவசரத் தேவைக்கு பெரும் தொகை  தேவைப்படும்போது  என்னிடம்   வருகிறார்கள். !
 அடமானம் இல்லாமல்  கடன்  கொடுத்தால்,   நாம்   சில மாதங்களில்   பிச்சைக்காரர்களாக    மாறிவிடுவோம். 
இன்னும் கேளுங்கள். நம்மிடம்  கடன்  வாங்குபவர்கள்,   சாதாரண  விவசாயிகள்  மட்டுமல்ல.  அரசாங்கமே  கடன்  கேட்கிறது.  திருப்பித்தர    அரசாங்கத்தை எப்படி   வலியுறுத்த முடியும்?   நம்மை உடனேயே  நாடு    கடத்தி  வெளியேற்றி விடுவார்கள்.    
   இந்த மாதிரி  ஆண்டுக்கு  பத்து  சதவீதம்  வட்டி    வாங்கினால், எதோ நாம்   உண்டு உயிர்வாழமுடியும்.  அவ்வளவுதான்.   கந்து வட்டி  என்று    கேலி   பேசுபவன், அரசருக்கும்,  அரசாங்கத்திற்கும்,  பிரபுக்களும்  வாராக்கடன்களைக்   கொடுத்து  காப்பாற்றுகிறானா?   நாம்தான்  இந்தப் பிரபுக்களுக்கு   அக்ஷய பாத்திரம்  போல  அள்ளி     வழங்குகிறோம். அதை  சரிக்கட்ட  கூடுதல்   வட்டியை விவசாயிகளிடம்  வாங்குகிறோம்.   நன்றி கெட்ட  அரசகுலம்,  நம்மை  இழிவாகப்  பேசுகிறது .  இங்கு  நான்    வந்தபோது, செல்வந்தனாகவா வந்தேன்?  இல்லை.!   எனது சிக்கனத்தாலும்,  திறமையினாலும்,  இப்போது  அரசருக்கு   நிகரான  செல்வம்  கொண்டு திகழ்கிறேன்.  நாம்   நடத்துவது  வாணிபம். ! தர்ம  சத்திரம்  அல்ல. ! நீங்கள்   எல்லோரும் குறைந்த  வட்டி கொடுத்து   நல்ல  பெயரும்   ஸ்வர்கத்தில் நல்ல  இடமும்  பெற்றுக் கொள்ளுங்கள்.   எனக்கு அது பற்றி  கவலை  இல்லை.  ' என்று கூறி  , தனது  பண பலத்தால், அவர்களது  சங்கத்தில்,  முக்கிய  தலைவனாக  பதவியைக்  கைப்பற்றிக்கொண்டான்.


        அந்தத்  துறைமுக நகரின்,  பணமாற்ற  சந்தையில்,  அவனுக்கும்,    அதுல்யனுக்கும்,  அநேகம்  சொற்போர்கள்   நடந்தன.  நேர்மையாகத்  தொழில்  ஏதும்   செய்யாமல்,  இவ்வாறு,  பணத்தை  வைத்து பணம்   செய்வதை மிகவும்   இழிவான  நாய்களின்  செயல்  என்று   அதுல்யன்  ,  சைலகனை  இடித்துரைப்பான்.  உள்ளூரப்     பொருமினாலும், சைலகன்    வேற்று நாட்டுக்   குழுவைச்  சேர்ந்தவன்.    அதனால்,  அவனால்  எதிர்த்து எதுவும்  பேச முடியாது.  ' என்றாவது  ஒருநாள்  சமயம் வரட்டும்.   இவனது  கௌரவத்தையம்,   முடிந்தால் இவனது  உயிரையும்   கண்டிப்பாகக்   காவு வாங்குவேன். !  காசு என்ன மரத்திலா  காய்த்துத் தொங்குகிறது ?   அவசரத் தேவைக்கு  கடன்  கொடுத்து  அதற்கு  வட்டி  வாங்குவதில்  என்ன    தவறு?  அதுவும் ஒரு    தொழில் தானே!   நான்  என்றைக்காவது  முதலைத் திருப்பித் தர   எவனிடமாவது  கேட்டிருப்பேனா? (    திருப்பிவிட்டால், அப்புறம்  அவனிடம்  வட்டி   வாங்க  முடியுமா? பத்து  மாதத்திலேயே   கொடுத்த  பணம்  திரும்பி   வந்துவிட்டது!   இதுவல்லவா, கெட்டிக்கார வியாபாரம்!  )  கண்டவனுக்கெல்லாம்,பணம்  கொடுத்து,   விரயம் செய்து,   செல்வத்தை இழப்பவன், முட்டாள்.  .அதன்   பலனை ஒருநாள்,  அவன்    அனுபவிப்பான்'  .என்று    மனதிற்குள்   அவன்   தினமும்  பொருமிக்கொண்டே இருந்தான்.

      இத்தகைய   நீச   ஜென்மத்துக்கு,  கிளி போன்ற  ஒரு   அழகு   மகள்.   அவள் பெயர்    சந்திரிகா.  பெயருக்கேற்ப  சந்திரன் போன்ற  முகம்  கொண்ட   அற்புதப்   பெண்.    தனது   தந்தையின்  வியாபார  முறைகளை அவள்   முற்றிலும் வெறுத்தாள்   பல தடவை  தனது  தந்தை   சைலகனிடம்  விவாதமும் செய்து   அவனைத்  திருத்த   முயன்றாள் . பயனே இல்லை.  

       அதுல்யனுக்கு  ,  பிரபுவம்ச  இளைஞர்கள்  பலருடன்  நெருங்கிய நட்பு  உண்டு.  அதில்   ஒருவன். ப்ரேமசேனன்.  நல்லவன்.  அவன் மீது  சந்திரிகா   ப்ரேமம்   கொண்டாள் .   ப்ரேமசேனன்  பிரபுவம்சம்  தான்.    ஆனால், செல்வந்தன் இல்லை.   சைலகனுக்கு  பிரபுவம்ச  இளைஞர்களை   பிடிக்கவே  பிடிக்காது.  அதிலும் கையில் காசில்லாத பிரபு வம்ச வெட்டிகளை  கண்டிப்பாகப் பிடிக்காது  எனவே   அவன் சந்திரிகாவின்,   திருமண  ஆசையை  அனுமதிக்கவில்லை. 

   ஒருநாள்,  சைலகன்   அவசரமாக வெளியூர்  செல்ல    வேண்டியிருந்தது,  அப்போது,   எப்போதும்   தன்னிடம் வைத்திருக்கும்  இரண்டு  பேழைகளை   தனது  மக்ளிடம் கொடுத்து,  ' அருமைச்    செல்வ மகளே! நாளை  இரவு  இந்த   நாகரிகம் சற்றும் இல்லாத   ராஜ்யத்தில்,  மாறுவேட  ஊர்வலம்    வருகிறதாம்.    கண்ட காலிகளெல்லாம்  மாறுவேடத்தில்,  ஆட்டம்   போடுவார்கள்.  கவனமாக இரு.!  கதவு  ஜன்னல்  எல்லாவற்றையும்  மூடி  விட்டு  பாதுகாப்பாக   வீட்டுக்குள்  இரு. !   கவனம்.!   இந்தப்  பேழையில்,  நான்   உனது அருமைத் தாய்க்கு  எனது   திருமணத்தின் போது  அளித்த  , வைரங்கள்  பதித்த    குண்டலங்களும்  ,   விலை மதிப்பில்லாத . வைர  வளையல்களும்   உள்ளன." என்று  கூறி    ஒப்படைத்தான்.

   அவன்    சென்றவுடன்  சந்திரிகா,  தனது   வீட்டின் வயதான   வேலையாளிடம் ப்ரேமசேனனுக்கு  ஒரு   கடிதம் கொடுத்து  அனுப்பினாள் 
.  
'அன்பரே!  இன்று  எனது  தகப்பனார்   ஊரில் இல்லை.  அருமையான வாய்ப்பு.   நாளை  இரவு  நடக்கும்  மாறுவேட  ஊர்வலத்தில்,     தாங்கள் எனது  வீட்டின்  ஜன்னல்  அருகே  நின்று    தங்கள் பெயரை   உரக்க கூவுங்கள்.   நான் அப்போது,  இரண்டு  பேழைகளை  தங்களுக்கு தூக்கிப் போடுகிறேன்.  ஆண்  வேடத்தில்  நான்  ஜன்னல்  வழியாக   இறங்கி தப்பித்து  தங்களைத்  திருமணம்  செய்து கொள்ள  ஏற்பாடு செய்யுங்கள் '  என்று  அதில் தெரிவித்தாள் .  

   வேறு   வழியேதும்   , தோன்றாமல், சந்திரிகா , இவ்வாறு  தனது   தகப்பனின்  கோடி கோடி  செல்வத்தை  விட,  மலைக்க வைக்கும்   பிரம்மாண்டமான  மாளிகையை விட,  பிரேமசேனனின்  இதயத்தில்,  சின்னஞ்சிறு ஓரத்தில் ஒரு   சிறு  இடமே மேலானது  என்று  தீர்மானித்து,    இரவோடிரவாக, வீட்டை  விட்டு  வெளியேறி ,  ப்ரேமசேனனை  அடைக்கலம்  அடைந்து,   திருமணம் செய்துகொண்டு,   எளிய  ஆனால்  எழில்  மிகு வாழ்க்கையை   அமைத்துக் கொண்டாள் 

.    அவர்களுக்கு அதுல்யன்   முடிந்த அளவு  ஆதரவும்   உதவியும் கொடுத்து,   இன்புற்றான்.

  ஊர் திரும்பிய  சைலகனுக்கு , தனது  மகள்  இவ்வாறு தப்பியதைவிட,  அவளிடம் தான்  தந்திருந்த  இரண்டு  பேழைகளும்  அவற்றில் இருந்த  வைர  நகைகளும்  இழந்ததுதான்,  பேரிடியாக  அமைந்தது.  '  என்  மகள்  இங்கு  என் காலடியில்  அந்த  நகைகளோடு ,  இறந்து  கிடந்தாலும் கூட  ,  தாங்கிக்கொள்வேன்  ஆனால்  நகைகள் இழப்பு தங்கவேமுடியவில்லை '  என்று  அவன்  புலம்பினான். 
"Why, there, there, there, there! a diamond gone,
cost me two thousand ducats in Frankfort! The curse
never fell upon our nation till now; I never felt it
till now: two thousand ducats in that; and other
precious, precious jewels. I would my daughter
were dead at my foot, and the jewels in her ear!


would she were hearsed at my foot, and the ducats in
her coffin! No news of them? Why, so: and I know
not what's spent in the search: why, thou loss upon
loss! the thief gone with so much, and so much to
find the thief;
and no satisfaction, no revenge:
nor no in luck stirring but what lights on my
shoulders; no sighs but of my breathing; no tears
but of my shedding. 

இதுவும்    தெரிந்தவுடன்,  அதுல்யனின் மீது    சைலகனின்  க்ரோதம்  ஆயிரம்  மடங்கு   அதிகரித்தது.  தனது   திரண்ட செலவத்தை    யாருக்கும்  விட்டுச்  செல்ல வழியில்லாவிடினும்,  பணம்  சேர்ப்பதை  அவன்  நிறுத்தவில்லை.    ஒவ்வொருநாள்  இரவிலும் தனது   கஜானாவில்    இருந்த  பொற்காசுகள்,  மற்றும்  வைர   நகைகளைக் கண்  குளிரக்  கண்டு,   கை நிறைய அள்ளி ,  நெஞ்சோடு இணைத்து  பெருமிதத்தில்  நெஞ்சம்   விம்ம , அவற்றை  பத்திரமாகப்  பூட்டி   கனவுகளிலும்  கூட அதைப்பற்றிய  நினைவுகளில்   சஞ்சரித்துக்  காலத்தைக் கடத்தினான்  அந்தக்  கஞ்சன். 

'என்  பெண்ணா அவள்?   எனது எதிரிக  கூட்டத்தோடு சேர்ந்து கொண்டாள் !.   அவளுக்கு  இந்த  கஜானாவிலிருந்து ஒரு   சல்லிக் காசு  கூடக்    கிடைக்காது.' என்று   தீர்மானமாக  வெறுப்பும்,  பேராசையும்,  வன்மமும் நிறைந்த   மனதோடு  அந்த  சைலகன்   நாட்களை கழித்துக் கொண்டிருந்தான்.
----------------------   

    அதுல்யனுக்கு  ஏராளமான நண்பர்கள் இருந்தாலும்,  அவர்களுள்,   வசந்தசேனன்  ,  மிகவும்  ஆப்த நண்பன்.  புகழ்  மிக்க செல்வந்தக்  குடும்பத்தில் பிறந்தவன்.  நேர்மையும்  அன்பும்   மிக்கவன். ஆனாலும்,  சற்று  செலவாளி.    அவ்வப்போது,  பண  நெருக்கடிக்கு  ஆளாவது  அவனது   இயல்பு.   அப்போதெல்லாம்,  அதுல்யன்   அவனுக்கு தவறாது,   தாராளமாக   உதவுவான்.

  சந்திரபுரம்   அருகே ,  ஒரு  ஜமீனின்   கோமான்,  சூரியசேனன்.. அவனது   நிகரற்ற அழகுப் பதுமைப் பெண்    பூர்ணிமா..  அவளது   தோழி   நீரஜா.. அவளும்  அழகிதான். 

      சூரியசேனன்  உயிருடன்  இருந்தபோது,   அவரது   , மாளிகையில்   அடிக்கடி,  மற்ற  பிரபுக்குல  இளைஞர்களுக்கு, விருந்தும்,   வரவேற்பும் கொடுப்பது  வழக்கம்.   அப்படி ஒரு   விருந்தில், வசந்தசேனன்   பங்கேற்றபோது, பூர்ணிமாவைக் கண்டான்.  .  பேச முடியாது.  ...இருந்தாலும்,   பூர்ணிமாவின்   கண்கள், அவனுக்கு   சில  பிரேம  சங்கேதச் செய்திகக்கணைகள்  அனுப்புவதை உணர்ந்தான்.

 சில    , மாதங்களில்,  பெரியவர், சூர்யசேனர் உடல் நலம் குன்றி   மறைந்துவிட்டார்.   இவ்வாறு, அவரது,   அளவிட முடியாத   ஆஸ்தி பூர்ணிமாவிடம்   சேர்ந்தது.  தனது   அருமைப்பெண் பூர்ணிமா  அவளை  உண்மையிலேயே நேசிக்கும்  ஒரு  உயர்குல  வீரனுக்கு   மனைவியாக வேண்டும்,  அவளது   ஆஸ்தியை நேசிப்பவனுக்கு அல்ல.   என்று கருத்தில்,  அவர்  ஒரு  சில   நிபந்தனைகள்   விதித்திருந்தார்.  அவை  எல்லாம்  வசந்தசேனனுக்கு பொருந்தும்.    ஆனால்,  பூர்ணிமாவைச்   சந்தித்து,  தனது   திருமண பிரேரணையைக் கூறத்    தேவையான     பிரபுக்களின்    வசதிகள்,   மற்றும் பரிசத்   தொகை , பரிசுகள்   எதுவுமே  அவனிடம்  அப்போது    இல்லை.  எனவே  வசந்தன்   வழக்கம்   போல, மிகவும்  தயக்கத்துடன்,  அதுல்யனிடம்   விஷயத்தைக்கூறி  உதவி  வேண்டினான்.
---------------( to  be  continued  on 9-4-2020) 
 ' எனது செல்வம் எல்லாமும் எனது  ஆருயிர் நண்பன் உனதும் தான் என்று  தெரியாதா?  எவ்வளவு  தேவைப்படும் ? ' என்று கேட்டான்  அதுல்யன்

 ' மூவாயிரம்  பொன் இருந்தால்  சமாளித்துக் கொள்வேன். '   என்றான்  வசந்தன்.

 ' அடடா!  தற்போது  கைவசம்  மூவாயிரம்  பொன்  இல்லையே!  இன்னமும்  சில நாட்களில்,  எனது  கப்பல்களில்  சரக்குகள்  வந்து   சேர்ந்தவுடன்  இதை விட  பலமடங்கு  என்னால்  உனக்கு  உதவ முடியும்.  இப்போது  நாம்  அந்த   சைலகக்  கஞ்சனிடம் போய்  கடனுக்கு   ஏற்பாடு செய்வோம்.  இவ்வளவு  பொன்   அவனிடம்தான்  இருக்கும்.  வா போகலாம்.'   என்று  வசந்தனையும்  கூட்டிக்கொண்டு  அதுல்யன்  , சைலகனிடம்  சென்று

'  சைலகா!  எனக்கு  மிகவும்  அவசரமாக   மூவாயிரம்  பொன்  தேவைப்படுகிறது.  கடனாகக்  கொடு. எனது  சரக்கு  கப்பல்கள்  இன்னும்  ஒரு  வாரத்தில்  வந்துவிடும்.  வந்தவுடன்,  உனது  கடனை  அடைத்து விடுகிறேன்  என்று  கூறினான்.

          சைலகன்  பதிலே  சொல்லவில்லை. மனதிற்குள்  ஏதோ  யோசனையில்   இருந்தான்.  '  சைலகா! நான் பேசுவது  உனக்கு  கேட்கவில்லையா?  உனது  பதில்  என்ன?   என்று  கேட்டான்   அதுல்யன்.

       '  அப்படியா!  நீ பேசியது   எல்லாம்  எனக்குக்  கேட்டது.  ஆனால்  ஒரு  யோசனையில்  இருந்தேன்.  நான்  ஒரு  கேடுகெட்ட  கந்துவட்டிச்   சைலகன்  என்று  நீ  நாள்  தோறும்  திட்டுவாயே!  நாய்  என்பாயே!  ஒரு  தெருவோர  நாய் எப்படி  மூவாயிரம்  பொன்   தரமுடியும்?   தினந்தோறும்  என்னை  அவமரியாதை  செயது ,  காலால்  எட்டி  உதைக்காத  குறையாய்  ஏசுபவனுக்கு  நான்  ஏன்  உதவ வேண்டும்? 
'பிரபுவே! அனுதினமும் தங்களது  கேலிப்பேச்சு , நாய் என்றும் பேய் என்றும்,  வசவு, என்னையும்  எங்கள் குலத்தாரையும்  வந்தேறிகள்  என்று  காரி  உமிழ்தல்   போன்ற தங்களது கருனைச் செயல்களுக்கு  இந்தாருங்கள்,  நீங்கள்  வேண்டும்  மூவாயிரம் பொன்  என்று    மண்டியிட்டு  தரவேண்டுமா?  "  என்று  வெறுப்பை உமிழ்ந்தான்   சைலகன்

   ' உண்மைதான்.  உன்னைப்போல  ஒரு  கேடுகெட்ட  ஜென்மத்திடம்  நான்  உதவி  கேட்பது  பற்றி  எனக்கு  வெட்கமாகத்தான்  இருக்கிறது.  ஆனால்,  இந்த  நகரத்தில்,  எந்த  செல்வந்தனும்,  தொழிலில்  முதலீடு செய்யாமல்,  இரும்புப் பெட்டியில்  இவ்வளவு  பொற்காசுகளை  வைத்திருக்க  மாட்டார்கள்.  அதால் தான்  உன்னிடம்  வந்தேன்.  உன்னிடம்  இலவசம்  கேட்க  வரவில்லை.  ஒரே  ஒரு வாரம்.!    எனது  சரக்கு கப்பல்கள்  அனைத்தும்  வந்துவிடும்.  மூவாயிரம்  பொன்   என்ன  ! மூன்று  லட்சம்  பொன்  வேண்டுமானாலும்,  என்னிடம்  புரளும்.  கடனாகத்தான்  கேட்கிறேன்.  அதற்கு  வட்டியும்  தருகிறேன். பிறகு  என்ன  யோசனை?  உன்னுடைய  தொழில்முறை  பற்றி  எனது  கருத்தில்  எந்த  ஒரு  மாற்றமும் இல்லை.  என்ன சொல்கிறாய்?   என்றான்  அதுல்யன்.

     'அடேங்கப்பா!  உள்ளதைச் சொன்னால்  எவ்வளவு  கோபம்?    போனால்  போகட்டும்!  நான்  உனக்கு நண்பனாக  இருக்க  விரும்புகிறேன்.  நீ  வட்டி  எதுவும்  தரவேண்டாம்.   உடனேயே  ஒரு  வக்கீலைப்  பார்த்து,  ஒரு  பத்திரம்  தயார்  செய்வோம்.  அதன்படி  நீ  கையெழுத்திட்டு  உடன்பட்டால் போதும்.  நீதான் சரியாக  ஒரு  வாரத்தில்  உனது  சரக்கு கப்பல்கள்  வந்துவிடும்  என்று  சொல்கிறாயே!    இவ்வளவு  குறுகிய  காலத்துக்கு  எதற்கு  வட்டி?  கந்துவட்டி சைலகனுக்கும்  கருணை  உள்ளம்  உண்டு  என்று  நீ  தெரிந்து  கொள்வாய்!  போவோமா?   என்று   நயமாகப் பேசினான்   சைலகன்.


      ' அய்யய்யோ!   இவன்  ஒரு  வஞ்சகன்.  இவனை  நம்பாதே.  ஏதோ  ஒரு  பயங்கர   திட்டம்  இவன்  மனதில்  உள்ளது. ' என்று  எச்சரித்தான்  வசந்தன்.

       ' சைலகா! வக்கீலிடம்  போய்  பத்திரம்  தயார்  செய்வோம்.  நீ  என்ன கேட்கப்போகிறாய்?   என்றான்  அதுல்யன்.

      'ஒன்றும்  பெரிய  விஷயமில்லை.  ஒரு வேளை   சரியாக  ஒரு  வாரத்தில்,   உன்னால் மூவாயிரம் பொன்னைத் திருப்பித் தரமுடியாவிட்டால்,  உனது  உடலில்  இருந்து  சரியாக  ஒரு  கைப்பிடியளவு  தசையை  வெட்டி எடுத்துக்கொள்ள  எனக்கு  அனுமதி தரவேண்டும்.  ஒரு  கையளவு   மனிதத்  தசையை வைத்து  நான்  என்ன செய்ய முடியும்?  பன்றி, ஆடு, மாடு, போன்றவைகளின்  தசையாவது  விலைக்குப் போகும் ஆனால்  உனது  தசை  எனக்கு  எப்படி  ஆதாயம் தரும்?  இது  ஒரு  விளையாட்டுப்   பத்திரம்  மட்டுமே!  நீதான்  சொன்ன  சொல் தவறாத  உத்தம  அதுல்யன்  ஆயிற்றே!    உனது  உடலில்  ஒரு  கையளவு  தசை   போனால்  அதனால்   ஒன்றும்  ஆகிவிடாது!  எத்தனையோ  ரண   வைத்தியர்கள்  அன்றாடம்  செய்யும்  காரியம் ! .ரணவைத்தியம் பற்றி  நீ அச்சம்  கொண்டவனா?  என்று  நக்கலாய் பேசினான்    சைலகன்.
-----------------------------------------------------------------------------------


வசந்தன் எவ்வளவோ  எச்சரித்தும்,  அதுல்யன், அதை  பெரிதுசெய்யாமல் சைலகன்  கேட்டபடி,  ஒரு  வக்கீலைப்  பார்த்து, பத்திரம்  தயார்   செய்து,  அதில்  கையெழுத்திட்டு,  சைலகனிடம் மூவாயிரம்  பொன்  கடன் வாங்கி  அதை   தனது  உயிர்  நண்பன்   வசந்தனுக்கு    அளித்தான்..
--------
    வசந்தசேனன்  தனது  நண்பர்கள்   பரிவாரத்துடன்,  பூர்ணிமாவின்  மாளிகைக்கு   விஜயம்    செய்தான். ,பூர்ணிமாவுக்கு   வசந்தசேனனை  ஏற்கனவே  தெரியும்.  விரும்பவும் செய்தாள் .  எனவே  அவனுக்கு   அங்கு  இனிய   வரவேற்பு    கிடைத்தது..   ஓரிரு நாட்கள்    சென்றபின்னர், வசந்தன் ,  பூர்ணிமாவிடம்,   திருமணத்திற்கான  தனது   உள்ளக கிடக்கையை தெரிவித்தான் .   பூர்ணிமா  மிகவும் மனம்   மகிழ்ந்து,  அதற்கு  சம்மதம்  தந்தாள்.
      '  பூர்ணிமா!  நான் பிரபுவம்சத்தில்  பிறந்தவன்   என்றாலும்,  என்னிடம்   செல்வம்  ஏதும்    கிடையாது.  உன்னிடம் அதை   மறைக்க   விரும்பவில்லை..  உனக்கு  அதில்   மனக்குறை   எதுவும்  இருக்காது  என்று நான்   நம்பலாமா?' என்று  கேட்டான். 

    '  பிரபுவே!  எள்ளளவும்   தங்களுக்கு   அதுபற்றிய கவலை  வேண்டாம். எனது    தகப்பனார்,  எனக்கு  இவ்வளவு   ஆஸ்திகளையும்   தந்துவிட்டு, எனது   மணாளன்  என்னை  விரும்புவனாக, எனக்குப்  பிடித்தவனாக  இருந்தால்   போதும்.  திருமணம்  இதயப் பொருத்தம்   சார்ந்தது.  அந்தஸ்துப பொருத்தம்  சார்ந்தது    அல்ல.! என்றுதான்   அறிவுரை  கூறி  மறைந்தார்.   உங்களை  மணாளனாக அடைய ,  பாக்கியம் , என்னை விட  , ஆயிரம்  மடங்கு   அழகும்,  பல்லாயிரம் மடங்கு   செல்வமும்   கொண்ட   பெண்ணிற்கும்  கூட  .கிடைத்தற்கரியது   நான் எம்மாத்திரம்!    இதுவரை  இந்த  மாளிகை,  பணியாளர் , செல்வம்  அனைத்தும் எனது   தந்தை எனக்கு  விட்டுச்   சென்றவையாக   இருந்திருக்கலாம்..   ஆனால், இந்த  நொடி   முதல்,   நானும், எனது  அனைத்தும்,   தங்கள்  உடமை   அல்லவா! நான்  தங்கள்   தகுதிக்கு  ஏற்ப கல்வி மற்றும்  கலைகள்  எதிலும் திறமை  அற்ற   எளிய   சிறுமிதான்.  எனினும்,  விரைவிலேயே   அனைத்திலும்    விடாமுயற்சி   கொண்டு,   தேர்ச்சி பெற்று  தங்கள்  தகுதிக்கு   ஏற்ற இல்லாளாக என்னை  மாற்றிக்  கொள்வேன்.    இதோ இந்த   மோதிரத்தை எனது    முழு சம்மதத்தின்   சாட்சியாகவும், எனது  அன்பளிப்புக்  காணிக்கையாகவும்   அளிக்கிறேன்.  ஏற்றுக்கொண்டு,  எந்நாளும்    உங்கள்  மனதில் எனக்கு     நிரந்தர   இடமளித்து,   அருlள     வேண்டுகிறேன்.  நீங்கள்  இட்டதுதான்   இனி  எனக்கு    சட்டம்.. ஒரு   நாளும், தங்கள்   வார்த்தையை மீறி எதுவும்   செய்ய மாட்டேன்.  நான் உங்கள்  அடிமை. ' என்று   மிகுந்த   அன்புடனும்,   பணிவுடனும்,  பண்புடனும்  பூர்ணிமா ,  வசந்தனின்   விரலில், அந்த மோதிரத்தை   .அணிவித்தாள்  . 
  -----------------------------
7pm 10-4-2020  Friday
  இவ்வளவு செல்வமும்  அழகும் கொண்ட  சீமாட்டி  பூர்ணிமா  வெல்லப்பாகுபோல  இனித்த சொற்களில்  மொழிந்த  அன்புப்  பிரமாணம்    கேட்டு,   வசந்தசேனன்    பிரமிப்பு   அடைந்தான்.     நன்றியிலும், மகிழ்ச்சியிலும்  அவனுக்கு பேசக்கூட   இயலவில்லை.  நாத்தழுதழுக்க '   இந்த  இனிய  நொடியை நான்  எந்நாளும் மறவேன். இந்த  மோதிரம்எந்தன்   இதயம்துடிப்பதை   நிறுத்தும்போதுதான் என்  விரலை விட்டு  அகலும்.  இது  சத்தியம்   என்று     பூர்ணிமாவிடம்  வாக்குறுதி   அளித்தான்.

     இவ்வாறு  தனது  தோழி பூர்ணிமாவின்   திருமண  நிச்சயதார்த்தம்,   இனிதே    நடந்தது  குறித்து,  பூர்ணிமாவின்  தோழி  நீரஜா  அவளுக்கு  வாழ்த்துக்கள் கூறினாள் .

     அப்போது  வசந்தசேனனின்  நண்பன்  சரோவரசேனன் , 'எனக்கும்     அதே  நாளில்  திருமணம்  செய்துகொள்ள  விருப்பம்.'  என்றான் 

   ' .  தாராளமாக!  பெண்  இருக்கிறாளா?' என்று   வசந்தன் கேட்டான் 

' .  தயாராக  இருக்கிறாள்!    நீயும் பூர்ணிமாதேவியும்   பேசிக் கொண்டிருந்த போது  நானும்   நீரஜாவும்  அதுபோலவே   பேசிக்கொண்டோம்.'  என்றான்    ,!  

" கள்ளி! நீரஜா!  அவர் சொல்வது   உண்மைதானா?' என்று   கேட்டாள்  பூர்ணிமா.
  '  உண்மைதான் சீமாட்டி!   தாங்கள்  அனுமதி ~தந்தால் !' என்றாள்  நீரஜா. 

'  பிறகென்ன!   உங்கள்  இருவரின்  திருமணம்  எங்கள்  திருமணத்திற்கு   அமையும்  மிகச்  சிறந்த  பரிசாக  இருக்கும் ' என்று  வசந்தன்  ஆனந்தித்தான்.

    உடனே  நீரஜா தனது  மோதிரத்தை   சரோவரனுக்குக்   கொடுத்து  , இதை ஒரு  நாளும் நீஙகள் பிரியக்   கூடாது. என்று  ஆணையிட்டாள்

      இவ்வளவு   குதூகலமான  நேரத்தில், அதூலயனிடமிருந்து   ஒரு   கடிதம் வந்தது.  அதைப் படிக்கும்போது   வசந்தனின் முகம்  வருத்தத்தில்  வெளிறி  நிறம்  மாறியதைக்  கவனித்து பூர்ணிமா   கவலை   கொண்டு,
' எனது  பிரபுவின்   முகத்தில், சோகமும், கவலையும்    காண்கிறேன்.  அந்தக் கடிதத்தில்   அப்படி  என்ன  செய்தி என்று  நான்   தெரிந்து  கொள்ளலாமா? என்று  கேட்டாள்

   ' பூர்ணிமா! சிறிது   நேரம் முன்பு  நான்,   என்னிடம்  செல்வம் ஏதும்  இல்லை  என்று  சொன்னேன்.    உண்மையில்,   நான்   ஏழை  மட்டுமல்ல , ஒரு  பெரும்  கடனாளி   என்பதையும் கூறியிருக்க   வேண்டும்.  எனக்காக அதுல்யன் , வஞ்சகக் கஞ்சன் கந்துவட்டிச்   சைலகனிடம்  மூவாயிரம்  பொன்   கடன் வாங்கிக்    கொடுத்தான். ஒரு  வாரத்தில் திருப்பித் தர  முத்திரைத்  தாளில் கையெழுத்திட்டு  உறுதி கொடுத்தான்.  ஆனால்  அவன்   எதிர்பார்த்த  சரக்கு  கப்பல்கள்  கடல்  புயலில்  சிக்கி காணாமல்    போய்விட்டன..  குறிப்பிட்ட  தேதி  கடந்து   போய்விட்டது.  நாளை மறுநாள்,  வழக்கு   விசாரணைக்கு  வருகிறது.  சட்டப்படி, அதுல்யன்  கைப்பிடியளவு  தனது  உடலின்  பாகத்தைத்    தரவேண்டும்..  என்னை  இறுதியாக ஒரு   முறை  காண அதுல்யன்  செய்தி    அனுப்பியுள்ளான்.. நான்   அவசியம்   உடனேயே சந்திரபுரம்  சென்று , அவனைக்   காப்பாற்ற வேண்டும். ' என்றான்.

     'பிரபு!  மூவாயிரம் பொன்  என்ன !   முப்பதாயிரம் பொன்    வேண்டுமானாலும்,  நமது   செல்வத்திலிருந்து கொடுத்து   தங்களது உயிர்   நண்பனைக்   காப்பாற்றுங்கள்..  நாளையே நமது   திருமணத்தை முடித்துவிடுவோம்.   அந்த  நிமிஷம்  முதல், நீங்கள்தான்  இந்த  செல்வத்தின்,  சட்ட   பூர்வ சொந்தக்காரர்.  கவலை    வேண்டாம்.' என்று  தைரியம்  சொன்னாள்   பூர்ணிமா.  

     அதற்கேற்ப  அடுத்த  நாளிலேயே  வசந்தன் -பூர்ணிமா திருமணமும்,சரோவரன்-நீரஜா திருமணமும்  இனிதே  நடந்தேறின .
   திருமணம்   முடிந்த உடனேயே  ,    வசந்தனும்,   சரோவரனும்,   அதுல்யனைக்  காப்பாற்ற  சந்திரபுரம்   விரைந்தனர்.

 
 ,
---------------------       
  சந்திரபுரம்  சென்றவுடன்  உடனடியாக  வசந்தன்  அதுல்யனை   சந்தித்து, தனது  விவாகம்  பற்றியும்,  சைலகனுக்கு தர வேண்டிய  தொகை  பற்றியும்   நம்பிக்கை கொடுத்துவிட்டு,   கஞ்சன் சைலகனைப் பார்த்து, ' மூவாயிரம்  பொன்னுக்கு   பதிலாக இரண்டு மடங்காக  ஆறு ஆயிரம் பொன்  தருகிறேன்.  எனக்காகத்  தானே  அதுல்யன் உன்னிடம்   கடன்    வாங்கினான் '.  என்று கெஞ்சினான்.  ஆனால்,  சைலகன்  சற்றும்  அதை   ஏற்கவில்லை.  ' எங்கள்  குல வழக்கப்படி,   கொடுத்த வார்த்தையைக்   காப்பாற்றுவது  மிகவும்  முக்கியம்.  நாங்கள் அதை   வேற்று நாட்டவர்களிடமும்  எதிர்பார்க்கிறோம்.   சட்டப்படி   வரும் விளைவுகளை  எதிர்கொள்வதுதான்   சரியான பாதை.  நன்றாகக்  படித்துவிட்டுப்   புரிந்து கொண்டுதானே  உங்கள்  அதுல்யன்   அந்த  முத்திரைத்தாள் பத்திரத்தில்   கையெழுத்திட்டான்?   இப்போது பின் வாங்க  முடியுமா?   உங்கள்  வாதத்தை  எல்லாம்  நீதிமன்றத்தில்  வைத்துக்கொள்ளுங்கள்.   எனது  நேரத்தை  வீணாக்காமல்  வேண்டிய  காரியங்களை  செய்யத்  தயாராகுங்கள்.  இப்போது  நீங்கள்  போகலாம்.  '  என்று  தாக்ஷண்யம்   ஏதும் இன்றி    வசந்தனை வெளியேற்றிவிட்டான்.
--------------------------------------
        வசந்தனும்,,சரோவரனும்  சந்திரபுரத்திற்கு  பிரயாணம்  ஆன  உடனேயே , பூர்ணிமா   தானும் இது  விஷயத்தில்  ஏதேனும்  செய்யமுடியுமா என்று  தீவிரமாக  யோசித்தாள் .  சிறிது நேரத்தில்,  பணியாளர்  மூலம்,  அருகில்  இருந்த  ஊரில்   வசித்த தனது     உறவினர்  சித்தரஞ்சனுக்கு   ஒரு கடிதம்  எழுதி  அவசரமாக    அனுப்பினாள்.   சித்தரஞ்சன்   அந்தப் பகுதி முழுவதும்  நன்கு  அறியப்பட்ட  வழக்குரைஞர்.   அவரின் யோசனையும்,   தானே  இந்த  வழக்கில் ஆண் வேடத்தில்  நீதிமன்றத்தில்,  அதுல்யனுக்காக   வாதாட  விரும்புவதாகவும்,  அதற்குத் தேவையான  சட்ட  நுணுக்க விவரங்களும்,  வழக்குரைஞர்  உடையும்,   அனுமதியும்  தந்து  உதவ  வேண்டினாள்.  அவரும்  அதுபோல  வேண்டியவை  அனைத்தும்  கொடுத்து  அனுப்பினார்.

          அவசரம்  அவசரமாக   பூர்ணிமா , ஒரு  வழக்குரைஞராக  ஆண் வேடம்   ,பூண்டு தனது  தோழி  நீரஜாவுக்கும்,  ஆண்  வேடம்  அணிவித்து,   , வழக்கு   நடக்கவிருந்த  நீதிமன்றத்திற்கு  சரியான  நேரத்தில்  வந்து  சேர்ந்தாள் .
=================================================
  அந்த  ராஜ்யத்தின்  மிகவும் பெயர் பெற்ற  வணிகன்  அதுல்யன்  மேலேயே   சைலகன் தொடுத்த வழக்கு என்பதால்,  நீதிமன்றம்   கனவான்களும்,  பொதுமக்களும்  பெருமளவு  கூடி  கூட்டம் நிறைந்திருந்தது. அரசரே  நேரடியாக  வழக்கை  விசாரிக்க  நீதிபதி இருக்கையில்  அமர்ந்திருந்தார்.  வழக்கின் முடிவு    என்ன ஆகுமோ என்ற  கவலை எல்லோர் முகத்திலும்  தெரிந்தது.

     அந்த சபையில்,  பூர்ணிமா தோன்றி,  அரசரிடம் ' நான்  வழக்குரைஞர்  சித்தரஞ்சனிடம்  பணி,யாற்றும்  உதவியாளன். என் பெயர்   சத்ய சீலன்.  எனது மூத்த அறிஞர்  உடல்  நலமில்லாது இருப்பதால்,  அவர் சார்பாக   என்னை அனுப்பியுள்ளார்.  கடிதமும் கொடுத்துள்ளார்.  எனவே, அரசர்  என்னை  வாதிட  அனுமதிக்க வேண்டுகிறேன்.  என்று   கூறினாள் .  சபையில்   இருந்த எல்லோரும்,  அந்த  இளம் வழக்குரைஞர்  பற்றி வியப்படைந்தார்கள்.  எனினும்,  அவனது  களையான தோற்றமும் மிடுக்கும் , அவர்களுக்கு நம்பிக்கை தந்தது.   அரசரும்  சத்தியசீலன்  ( பூர்ணிமா)  அதுல்யன் சார்பாக வாதிட  அனுமதி  தந்தார்.
--------------------------------------
      இங்கு என்ன பிரச்னை?  என்று  'பூர்ணிமா'  கேட்டபோது,  வசந்தன்  'இந்த  சைலகனிடம்  எனக்காக அதுல்யன் மூவாயிரம்  கடன் வாங்கி ஒரு வாரத்தில்  திருப்பித்தர பத்திரத்தில்   கையொப்பமிட்டார் . ஆனால்,  சற்று தாமதமாகிவிட்டது.  நான் அவர் சார்பாக    இரண்டு மடங்கு தொகை  தர  தயார்.  அதை ஏற்றுக்கொண்டு  வழக்கை  முடித்து   வைக்க வேண்டுகிறேன்.  ' என்றான்  வசந்தன்.
      '  
 , சரிதானே!  சைலகன்  !    உங்களுக்கு   இதில்  என்ன  நஷ்டம்?'   என்று வினவினான்  சத்தியசீலன் ( பூர்ணிமா).

      ' இது வெறும்  பணம்  பற்றிய  பிரச்னை  அல்ல.  சட்டப்  பிரச்னை.  பத்திரத்தில் என்ன  சொல்லி இருக்கிறதோ  அதை   இந்த நீதிமன்றம்  நிறைவேற்ற வேண்டும்.  ' என்றான்  சைலகன்.!

     'அப்படியா!  அந்தப் பத்திரத்தை கொடுங்கள்  நானும்  பார்த்து  முடிவு  சொல்கிறேன்'  என்று  பூர்ணிமா அதை வாங்கிப்  படித்தாள்

     'சைலகன்  கூறுவது  போலத்தான்  ,பத்திரத்தில்  கூறியுள்ளது.  சட்டப்படி  அவர் கேட்பது  சரிதான்.    என்றாள்  பூர்ணிமா.

     'அபாரம். அபாரம்.!  தாங்கள்  தர்மதேவனின்  மறு  உருவம்  !இந்த  இளம்   வயதிலேயே  இவ்வளவு   சட்டம் அறிந்த வல்லுனராக  இருப்பது   பிரமாதம்.'  உங்கள்  முடிவு   தீர்ப்பாக  இருக்கட்டும்.'   என்று  ஆனந்தமாக உரத்த  குரலில்   சைலகன்  கூவினான்.

     '    சைலகன் அவர்களே!  சட்டப்படி  உங்கள்   கோரிக்கை   சரிதான்.ஆனால்,   அதற்கும்  மேலாக  கருணை  என்று  ஒன்று   உண்டு என்பது  தாங்கள்    அறியாததல்ல.  ஒருவரிடம்  கருணை  காட்டுவது,   இருவருக்கும் நல்லது.  அரசர்களுக்குக்கூட,   அவர்களின் சிரசில்  உள்ள  மணி மகுடத்தைவிட,   அவர்களது  மன்னித்தருளும் கருணை   உள்ளமே   மேன்மை  தருகிறது.  வெறும்  மூவாயிரம்  பொன் !.  அதற்கு நீங்கள்  கேட்கும்    விலை,  ஒரு  நேர்மையான  இளைஞனின்  இதயப்  பகுதியின்  தசை. '
நீங்கள்  நாள்தோறும்  இறைவனிடம்  கருணை  வேண்டிப் பிரார்த்தனை  செய்கிறீர்கள்.  அதே  கருணையை,  இப்போது  நீங்கள்  காண்பித்தால் ,  இறைவனுக்கும்  அது  பிரியமாக  அமையும்.   உங்களுக்கும்  அது   பெருமையாக அமையும்.  ' என்று  பூர்ணிமா  சிறப்பாக  அறிவுறுத்தினாள்
அரசரும்  கூட  அந்த  அழகான  வாதத்தில்  இருந்த  சிறப்பை  வியந்து  மனதிற்குள் போற்றினார்.

      ' நீங்கள்  ஒரு  வழக்குரைஞர்.  உங்களது  பணி , சட்டப்படி  விவாதித்து நீதி  வழங்குவது..மட்டுமே!        நீதி  போதனை  செய்வதல்ல.  '   இவ்வளவு   தெளிவான   எளிதான வழக்கை   விரைவாக முடித்து,  நான்  கேட்கும்  கையளவுத்   தசையை  அதுல்யனின்   இதயப்  பகுதியில்    இருந்து  எடுத்துக்  .கொள்ள  உடனடியாக  உத்தரவு  கொடுங்கள். '  என்றான்  சைலகன்.

' நீதிக்காக  சட்டமே தவிர,  சட்டத்திற்காக   நீதி  இல்லை. சட்டத்தின் வெறும்  வார்த்தைகளை மட்டுமே  பார்க்காமல்,  சட்டத்தின்  நோக்கம் என்ன என்று தீர ஆராய்ந்து  , தேவைப்பட்டால்,  சட்டத்தின்   வார்த்தைகளை சற்று
வளைத்துத்  தளர்த்தி  நீதியை  நிலை நாட்டுவதுதான்  , நீதி மன்றத்தின்  பணி . வழக்குரைஞர்   கடமையும் அதுவே    என்று  வசந்தன் ,  வேண்டினான்.

 "  தங்களது  கூற்று  சரியல்ல.   முற்காலத்தில்,  எழுதப்படாத  சட்டம்  என்று இருந்தது.   ஆனால்,  நாளடைவில்,  ஆளுக்கு ஆள்  , வசதிக்கு ஏற்ப,  நீதியைப்  புறந்தள்ளியதால்தான்,  சட்டம்  மாற்றமுடியாத வகையில், காலம் காலமாக    எழுதப்பட்டுள்ள  சட்டமாக  உருவாக்கப்பட்டது.  எனவே  சட்டம்  என்ன சொல்கிறதோ  அதைத்தான்  வழக்குரைஞரும்,  நீதிபதியும், இங்கு  வழிகாட்டிகளாக  அமர்ந்திருக்கும்,  கனவான்களும்  ஏற்கமுடியும் உங்கள்  வசதிக்காக    வளைக்க முடியாது.' என்று  சத்தியசீலன்    பதிலளித்தான்.

" ஆஹா! ஆஹா! என்ன   தெளிவான சிந்தனை!  என்ன   அருமையான விளக்கம்!   வழக்குரைஞர்  என்றால்  இப்படியல்லவா  இருக்க  வேண்டும்' என்று  சைலகன்  மீணடும் உற்சாகக் கூச்சல் இட்டான்.

    பூர்ணிமா  மீண்டும்  கவனமாக  அந்தப் பத்திரத்தைப்   படித்துவிட்டு , சைலகன்  கூறுவது  சரிதான்.  .  சட்டப்படி  வேறு    வழி  இல்லை.  அதுல்யன்  அவர்களே!  தாங்கள் தண்டனைக்குத்  தயாராகுங்கள்.   சைலகன்  அவர்களே!  தராசு   தயாராக    உள்ளதா?  என்றாள்   பூர்ணிமா.

         மிகுந்த  ஆனந்த   வெறியில்,   சைலகன்   மீண்டும்  அந்த இளம் வழக்குரைஞரை   ' தர்ம தேவனின்  மறு உருவம்'  தாங்கள்தான். தங்களால்தான் சட்டமும், நீதியும் உலகில் நிலைத்து நிற்கின்றன.   ' என்று புகழ்ந்து ,   தான்  கொண்டுவந்திருந்த   கத்தியைத் தீட்டிக்கொண்டு    கொலைவெறியுடன்  தயாரானான்.
 
          அதுல்யனுக்கு  வழக்கின் போக்கு   தனக்கு சாதகமாக இல்லை  என்று  தெரிந்துவிட்டது.    அவன்  கண்ணீர் விட்டு  கதறிய  தனது  நண்பன் வசந்தனிடம் ' அன்பா! நீ ஒன்றும்  கவலைப் படாதே! இது எனது  விதி  போலும்!  நீ எந்த விதத்திலும்  இதற்குப்  பொறுப்பல்ல.  உன்னைப் பிரிகிறேனே என்ற  துயரத்தைத் தவிர  , வரவிருக்கும்   தண்டனை பற்றி எனக்கு  எந்த  கிலேசமும் மனதில் இல்லை.   உனது பிரிய மனைவி  பூர்ணிமாவை நான் மிகவும் கேட்டதாகச் சொல்லி,  எனது  வாழ்த்துக்களை   அவளிடம் தெரிவிப்பாய். ' என்று  கூறி அவனைத் தேற்றினான்.

       ' அருமை  நண்பா !  உன்னைப்போல   இந்த உலகில்   யார் உண்டு?  எனது  மனைவியிடம்   எனக்குள்ள நேசத்தைவிட,   உன்னிடம் நான்  கொண்டுள்ள   நேசமே அதிகம்.  உன்னைப்  பிரிந்துவிட்டு,  எப்படி  வாழ்வேன்?  என்று  துயரத்தில் புலம்பினான்  வசந்தன்.

         சத்தியசீலன்  வேடத்தில் இருந்த  பூர்ணிமா, தனது  கணவன்  வார்த்தைகளை  மனதிற்குள்  பாராட்டினாலும்,  விளையாட்டாக,  ' உங்கள்  அருமை மனைவி   நல்ல வேளையாக  இந்த நீதி மன்றத்தில்  இப்போது  இல்லை! இல்லாவிடின்,  அந்த  சீமாட்டி,  உங்களை வாட்டி எடுத்திருப்பாள்.  ' என்று இளம்   புன்னகையுடன்  சீண்டினாள்  .   நீதிமன்றத்தில்,  அந்த  இறுக்கமான  சூழலிலும் ஒரு  சிரிப்பலை  எழுந்தது.

       வசந்தசேனன் என்ன செய்தாலும்,  அதே போன்று  தானும் செய்யும்   சரோவரசேனன், '  உயிர் நண்பர்களைவிட,  மனைவி   ஒருநாளும் உயர்ந்தவளில்லை' என்று  அவன்  பங்கிற்கு   கூறினான்.

      சத்யசீலனின், எழுத்தர்பையன்    புண்யசீலன்  என்ற  வேடத்தில் இருந்த நீரஜா ,  தனது  சீமாட்டி   பூர்ணிமாவைப் பின்பற்றி,  '  சரோவரன் அவர்களே! இந்த வார்த்தையை , உங்கள்  மனைவி   இங்கு   இருந்தால், நீங்கள்  தைர்யமாகக் கூறியிருப்பீர்களா? ' என்று    விளையாட்டாகக் கேட்டாள்
சபையில், மீண்டும்  ஒரு  சிரிப்பலை  எழுந்தது.

       சைலகன்  '  போதும்  இந்த   விளையாட்டுப் பேச்சுகள்... நேரமாகிறது. வேலையைத் தொடங்க வேண்டும். ' என்று  கடிந்து கொண்டு         கத்தியைத் தீட்டினான்.
----------------------------------------------------------
  '  சைலகன்  அவர்களே!  நீங்கள் கேட்கும்  கையளவு தசையை  எடுத்துக்கொள்ள   அனுமதிக்கிறோம்.   ரத்தம்  சிந்தாமல்   அந்த  சதையை
 எடுக்க  யாரேனும் ஒரு ரணசிகிச்சை மருத்துவரைக் கொண்டு வந்துள்ளீர்களா? ' என்று   பூர்ணிமா. கேட்டாள்

----------------------
 "  இதுபற்றியெல்லாம்   பத்திரத்தில்  எதுவும் கிடையாது. '   என்றான்  சைலகன்.

  " சைலகன்  அவர்களே!  இந்தப் பத்திரத்தில்,   தாங்கள் ஒரு கைப்பிடியளவு   சதை எடுத்துக்கொள்ளலாம்  என்று   உள்ளது உண்மைதான்.  ஆனால்,  ரத்தம்  சிந்துவது பற்றி  எதுவும்  இல்லை.  எனவே  ரத்தம்    சிந்தாமல்,  சதை மட்டும்  எடுப்பது  உங்கள்  பொறுப்பு.   அதைமீறி, ஒரு   துளி  ரத்தம்  சிந்தப்பட்டாலும்,   எமது ராஜ்யத்தின்,  சட்டப்படி  உங்களுடைய சொத்து முழுவதும்,   தேச உடமையாகிவிடும்.    எங்கள்  ராஜ்யத்தின்  பிரஜையின்   குருதி  அவ்வளவு  மதிப்பு கொண்டது.   இதை மனதில்   கொண்டு  உடனடியாக  உங்கள்  கசாப்பு  வேலையைத் தொடங்குங்கள்.'   என்றாள்   பூர்ணிமா.

      அரங்கம்   முழுவதும்,   பூர்ணிமாவின் வாதத்  திறமையால்,   அதுல்யனின் உயிர் காப்பாற்றப் பட்டுவிட்டதை  உணர்ந்து,   நிம்மதிப்  பெருமூச்சு    .விட்டது.  'பிரமாதம். பிரமாதம் என்று  கனவான்கள்   கூட வெளிப்படையாகவே  பூர்ணிமாவைப்   புகழ்ந்து முறுவலித்தார்கள்.

   "தர்மதேவனின்  மறு    அவதாரம்' என்று  சரோவரன்.  , சைலகனின்   வார்த்தையில்   உரத்துக் கூவினான்.
---------------------------------------------

   தனது குரூர திட்டத்தில்  தோல்வி  அடைந்த  சைலகன், ' சரி! சரி! சதை வேண்டாம்  பணத்தைக்  கொடுங்கள்'  என்றான்.

 "  இதுபற்றியெல்லாம்   பத்திரத்தில்  எதுவும் கிடையாது. '   என்றாள்   பூர்ணிமா .

  வசந்தன் ,தனது   ஆருயிர்  அதுல்யன் உயிர்பிழைத்துக்  கொண்டதில்  மிகவும்  மகிழ்ந்து, '  இதோ  நீ  கேட்ட பணம்! எடுத்துக் கொள் '   என்றான்.

   பூர்ணிமா  அவனை இடைமறித்து,  '   அவ்வளவு  அவசரம் கூடாது.  வழக்கு இன்னமும்  முடியவில்லை.  ஷைலகன்!   இன்னும்  என்ன  தாமதம்? அதுல்யனின்  நெஞ்சப் பகுதியில்   இருந்து கையளவு   தசையை எடுத்துக்  கொள்ள சட்டம்  உங்களுக்கு   இப்போது  அனுமதி  தருகிறது.    ஆனால்,
  கவனம்.!  குறிப்பிட்ட எடைக்கு  அதிகமாக ஒரு    இழை அளவு  கூட அதிகமாக   கூடாது.  -  ஒரு சொட்டு   ரத்தம்   சிந்தினாலும்  உங்களது  ஆஸ்தி  முழுவதும்   அரசுடைமையாகும். அதுமட்டுமல்ல.  எங்கள் நாட்டுப்  பிரஜையின் ரத்தம்   சிந்த  காரணமான  உங்களுக்கு  மரண  தண்டனை  தரவும்  சட்டம்    இடமளிக்கிறது..  எனவே  இனியும்   தாமதிக்காமல்,  பத்திரத்தில்  உள்ளபடி உங்களது  வேலையைத்  தொடங்குங்கள். "  என்றாள் பூர்ணிமா.

   ' பணத்தைக் கொடுங்கள். என்னைப் போகவிடுங்கள்!' என்றான்  சைலகன்.
'இதோ  !  இப்போதே   உனது பணத்தை  தருகிறேன் எடுத்துக்கொள்  என்றான் வசந்தன்.

   மீண்டும்  பூர்ணிமா  இடைமறித்து ' அவ்வளவு  எளிதல்ல,  சைலகன்    அவர்களே! எங்கள்  நாட்டின்  கௌரவமான  பிரஜையை  அங்கத்தை  வெட்டிக்  கொலை  செய்ய  சதி   செய்ததற்காக, உனக்கு  மரண  தண்டனை  தர   இந்த  நீதிமன்றத்திற்கு  அதிகாரம்   உள்ளது. எனவே   அரசரிடம் மண்டியிட்டு    உன்னை  மன்னித்து உயிர்ப்பிச்சை தர   கேட்டுக்கொள்.'
என்றாள்   பூர்ணிமா.

    அப்போது   அரசர் '  எங்கள்  ராஜ்யத்தின்,  கருணை  மிக்க நீதிமுறை பற்றி  நீ  தெரிந்துகொள்ள,  நீ  கேட்பதற்கு   முன்னரே,  உனக்கு  உயிர்ப்பிச்சை    தருகிறோம்.  பிழைத்துப் போய்ச சேர் !  ஆனால்,  உனது   ஆஸ்தியில் ஒரு   பாதி   அரசாங்க  கஜானாவுக்குப் போகவேண்டும்.   மறு பாதி,   உன்னால்  இவ்வளவு  இன்னல் அடைந்த  எங்கள் நாட்டின் கௌரவமான   கடல்  வணிகர்   அதுல்யனுக்கு   சேரும்!  என்று  தீர்ப்பளித்தார்..

   அப்போது  அதுல்யன்  "   சைலகா!  உன் செல்வம் எனக்கு  வேண்டியதில்லை.   அதை  உனக்கே திருப்பி  அளிக்கிறேன்!  எடுத்துக்  கொள்  ஆனால்,  நீ   மறைந்த பின்னர் ,  அந்த செல்வம்  முழுவதும், உனது  அருமைப்   புதல்வி  சந்திரிகாவுக்கு  சேரவேண்டும்.  இதன்படி  ஒரு   உயில்  உடனடியாகத் தயாரித்து,  இந்த   மன்றத்திலும்,  மன்னரிடத்திலும்   கொடுக்க வேண்டும்' என்று  அதுல்யன்   சபையில்  அறிவித்தான்.

       வேறு வழி இல்லாமல்,  சைலகன்  அதை   ஒப்புக்கொண்டு '   அப்படியே   செய்கிறேன். எனக்கு   மயக்கமாக   . வருகிறது.  என்னை வீட்டிற்குச்  செல்ல   அனுமதியுங்கள்.. உயில்   பத்திரத்தைத்   தயார்  செய்து  அனுப்புங்கள். உடனேயே  கையெழுத்திடுகிறேன்!  என்று  கூறினான்.

  " சரி! நீ  போகலாம்!   என்றாவது நீ   மனம்   திருந்தி,  இந்த   வட்டித் தொழிலைக்   கைவிட்டால்,  எனது  அரசு,  உன் பணத்தை  உடனேயே  திருப்பித்    தந்துவிடும்.  இதுதான் எங்கள்  நாட்டின்  கருணை   கலந்த  நீதி!  தெரிந்துகொள்!  இத்துடன்  இந்த   வழக்கை  முடித்து  வைக்கிறேன்.  சபை   கலையலாம்!  '  என்று  அரசர்   எழுந்தார்.

    போகும்போது,  இளம் வழக்குரைஞர்  ( பூர்ணிமா)   சத்யசீலனைக்    கண்டு,'  இளைஞனே! இன்று நீ  மிகவும்,   அருமையாக   வாதிட்டாய்! எனக்கு  மிகவும்  பெருமையாக உள்ளது!  எனது   அரண்மனையில், உனக்கு  இன்று  மாலை  ஒரு   சிறப்பு   விருந்து  ஏற்பாடு செய்ய    விரும்புகிறேன். இன்று   அவையில்  பங்கேற்ற  கனவான்கள்  அனைவரும்   வருவார்கள். உன்னால்  வர முடியுமா? ' என்று  கேட்டார்.

   பூர்ணிமா  " அரசே! எனது  பாக்கியம்!  ஆனால்,  மிகவும்   அவசரமான  சொந்த  அலுவல்கள்  காரணமாக நான்  இப்போதே  எனது  ஊருக்குத்   திரும்ப வேண்டியுள்ளது.    மன்னியுங்கள்' என்றாள் .

  'பரவாயில்லை.  உனக்கு   எப்போதும்  நன்மையே   உண்டாகட்டும். எனது   ஆசிகள்.!'   என்று    கூறி,  அதுல்யனைக் கூப்பிட்டு,  'இந்த  இளம்   வழக்குரைஞனுக்கு  தகுந்த  பரிசுகள்  தந்து  அனுப்பத்   தவறாதே! என்று   சொல்லி  சபையை விட்டு  அகன்றார்.
-------------------------------------------------------
   2pm-13-4-2020
------------------------------------------------------
  வசந்தன்  அவ்வாறே பூர்ணிமாவிடம்  சென்று ' தாங்கள் செய்த உதவிக்கு நாங்கள்  என்றென்றும்  கடன் பட்டுள்ளோம்.  நான் சைலகனுக்குத்  தருவதாக இருந்த  இந்த மூவாயிரம்  பொன்  எங்களது அன்பளிப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள். '   என்றான்.

   அதற்குப் பூர்ணிமா  '  அதெல்லாம்  ஒன்றும்  வேண்டாம்.  உங்களது  கையுறையை  ஞாபகார்த்தமாக கொடுத்தால்  போதும்  '   என்றாள் 
 அப்பாவி  வசந்தன் கையுரையைக்  கழட்டியபோது,  பூர்ணிமா  அவனுக்கு  அணிவித்த  மோதிரம்  தெரிந்தது.  பூர்ணிமா  அப்போது,  'அட! இந்த  மோதிரம்  மிகவும்  அழகாக  உள்ளதே!  இதை எனக்கு  தரமுடியுமா? '   என்று கேட்டாள்

       வசந்தன்  ' ஐயா!   அது எனது  மனைவி  எனக்கு  அணிவித்த  மோதிரம் ! அதைத்  தர  இயலாது.  வேறு  எது வேண்டுமானாலும்  கேளுங்கள்.  இந்த  மோதிரம்   போலவே,   இதையும் விட  சிறப்பாக வேண்டுமானாலும்,    ஒரு விசேஷ மோதிரம்   செய்ய ஏற்பாடு  செய்தது  அதை  தங்களுக்குத்  தருகிறேன்'  என்றான்.

         பூர்ணிமா    கோபம் கொண்டதாக   நடித்து, ' நீங்களே அந்த மோதிரத்தை  வைத்துக் கொள்ளுங்கள்.  இதற்காகவா நான்  வாதிட்டேன்? '  என்று  வெளியே  சென்றுவிட்டாள்.   இதையெல்லாம்  கவனித்துக் ஒண்டிருந்த  அதுல்யன்,  வசந்தனிடம், ' நீ  அந்த   இளைஞனுக்கு மோதிரத்தைக் கொடுத்துவிடு.   பூர்ணிமாவிடம்  நான்  பேசி  அவளை  சமாதானப்  படுத்திவிடுவேன்.  அவள்  கெட்டிக்காரி.  நல்லவள்.  உன்னைத்  தவறாக  எண்ணமாட்டாள்.  ' என்றான்.   உடனே வசந்தன்  தனது  நண்பன்  சரோவரனிடம்  அந்த மோதிரத்தைக்   கொடுத்து,  சத்யசீலனிடம்  தரச் சொல்லி கொடுத்து அனுப்பினான்.

       சரோவரனும்  அவ்வாறே   பூர்ணிமாவிடம்  அந்த  மோதிரத்தைக் கொடுத்தான்.  அப்போது,  புண்யசீலன்   (நீரஜா ) எனக்கு  எதுவும்  கிடையாதா?  உங்கள்  விரலில்  உள்ள  மோதிரத்தைக் கொடுத்தால்  நான்  மிகவும்  மகிழ்வேன்  என்றாள் .  சரோவரனும்  அதன்படி,  நீரஜா  அணிவித்த  மோதிரத்தை  ,  சத்யசீலனின்  உதவியாளனுக்கு  அன்பளிப்பாக  கொடுத்தான்.
-------------------------------------------------
       பூர்ணிமாவும்,  நீரஜாவும்,  ஆனந்தமாக  தங்களது  மாளிகை நோக்கி  விரைந்தார்கள்.  பூர்ணிமாவின்  மனம்   அன்று   எல்லையில்லா மகிழ்ச்சியில்  திளைத்தது.  தனது  கணவனின்  நண்பனைக்   காப்பாற்றிய  பெருமிதம்  அவளுக்கு  காணுமிடமெல்லாம்  அழகாகவும்,  நேர்த்தியாவும்  தோன்றச்  செய்தது.  தூரத்தில்,  அவளது  மாளிகை  விளக்கொளியில்  ஜ்வலித்தது.  வழக்கம்  போலவே  மாலை  இசையும்  கேட்டது.  இவை  அனைத்தும்,  அன்று  அவளுக்கு  மிகவும்  விசேஷ  வரவேற்பாக  தேவலோக  கீதம் போல  காதில்  கேட்டது.  '  நீரஜா!  இன்று  போல  நான்  என்றுமே  இன்பமாக  இருந்ததில்லை!   இன்னும் சிறிது  நேரத்தில்,  வசந்தனும்,  சரோவரனும்  நம்மிடம்  படப்போகும்  பாட்டை  நினைத்தாலே  எனக்கு  இனிமையாக இருக்கிறது.  '  என்றாள்

        மாளிகையை  அடைந்து,  வழக்கமான  ஆடை  அலங்காரங்களுடன்,  அழகுப் பதுமைகளாக  ,  தங்களது  கணவன்மார்களை  வரவேற்க  தயாராக  இருந்தனர்.

அப்போது,  வசந்தனும்,  சரோவரனும்  அங்கு  வந்து  சேர்ந்தார்கள்.  கூடவே  அதுல்யனும்  வந்தான்.

        சீமாட்டி,  பூர்ணிமா   அதுல்யனிடம்,  எதுவுமே  அறியாத  அப்பாவி  போல  '  அதுல்ய பிரபு  அவர்களே!  தாங்கள்  விடுதலை  அடைந்தது  பற்றி  இப்போதுதான்  அறிந்தோம்.  மிகவும்  மகிழ்ச்சி'  என்று  கூறி,   எல்லோரும் இனிதாக  உரையாடினார்கள்.

       ஒரு  ஓரத்திலிருந்து   இரண்டு  குரல்கள்   விவாதம்  செய்து
கொண்டிருந்தன    சரோவர னும்,  நீரஜாவும் தான்  அதைச் செய்து கொண்டிருந்தார்கள்.

     ' அங்கே என்ன  சத்தம்?  கல்யாணம்  ஆகி  இரண்டு  நாட்கள்   கூட ஆகவில்லை.  அதற்குள்  சண்டையா '  என்று  பூர்ணிமா   அதட்டினாள்.

    '  சீமாட்டி!  இந்த  ஆள்  சரோவரன்  எனக்கு  இரண்டு  நாட்களிலேயே  துரோகம்  செய்கிறார்.  சண்டை  போடாமல்  எப்படி  இருக்க  முடியும்?
நீங்களே  இந்த  அநியாயத்தைக் கேளுங்கள்'   என்றாள்  நீரஜா.

     என்ன    விஷயம்? என்று  கேட்டாள்   பூர்ணிமா.

   'நான்   ஆசை ஆசையாக  அணிவித்த  மோதிரத்தை,   இரண்டே நாளில்  இந்த  சரோவர் பிரபு,  வேறு  யாரோ  ஒரு  பெண்ணுக்கு  கொடுத்து விட்டார்.  ' என்றாள் .  நீரஜா.

     '  சீமாட்டி!  நீதிமன்றத்தில்,    இளம்   வழக்குரைஞர்  சத்ய சீலனுடன் ஒரு  உதவிப்பையன்  வந்திருந்தானல்லவா.    அவன்  அந்த  மோதிரத்தை    கேட்டான். நன்றிக்காக  அவனிடம் கொடுத்தேன்.  இவளைப்போலவே    , உடல்வாகு கொண்ட பையன்.    எந்தப்   பெண்ணுக்கும்  நான்  அதைத்  தரவில்லை.     அது  அப்படி ஒன்றும்   விலை உயர்ந்த  மோதிரமும் இல்லை.  '
   என்றான்  சரோவன்.

      ' இவர் பேசுவதைப்   பாருங்கள்!  அன்புப்பரிசை   விலை  குறைந்தது  என்று   ஏளனம்  செய்கிறார்.  எந்நாளிலும்  பிரியேன்  என்று  அவர்  உங்கள்   முன்னிலையில் கொடுத்த  வாக்குறுதி  இரண்டே   நாளில் காற்றோடு   பறந்து போய்விட்டது.    கேட்டால்,  யாரோ ஒரு  பையனுக்கு  கொடுத்தேன்  என்று  கதைக்கிறார்.  . என்றாள்    நீரஜா.

     '  உண்மைதானே !  சரோவரன்  அவர்களே!   மனைவி   தரும்  அன்புப்பரிசை , அதன்   விலையை  வைத்தா மதிப்பிடுவது?   எனது   அன்புக்கணவன்  அப்படியெல்லாம் என்றும்  செய்யமாட்டார்.  நான்  அணிவித்த  மோதிரத்தை  அவர்  இப்போது  காட்டுவார்.  அதிலிருந்தே  நீங்கள்  செய்த   தவறு  உங்களுக்குத்    தெரிய  வரும். ' என்றாள் .  பூர்ணிமா.

  பாவம்  வசந்தன்.  அவன்   கையில் பூர்ணிமா  கொடுத்த  மோதிரம்  இல்லை!
   அசடு   வழிய  ' பூர்ணிமா! இன்று  நீதிமன்றத்தில்,    வழக்கை திறமையாக  விசாரித்து    நீதி  வழங்கிய  இளம்  வழக்குரைஞர்  , அந்த  மோதிரத்தை    மிகவும்   விரும்பிக் கேட்டான்.  நான்  முதலில்  முடியாது  என்றுதான்  சொன்னேன்.  இருந்தாலும்,  அவன்   கோபப்படக்கூடாது என்று   எண்ணி நன்றி  உணர்வுக்காக  அதை  அவனிடம்  கொடுத்தேன்.   வேண்டுமானால்  அதுல்யனிடம்   உண்மையைக் கேட்டுக்கொள்.   என்றான்.

     அதுல்யன்  அதை  ஆமோதித்து,  ஆம்  அதுதான்  நடந்தது.  என்றான்.

'போனால்  போகிறது.  இப்போது  ஒரு  மோதிரம்  மீண்டும்  தருகிறேன்.  இதையாவது,   எந்நாளும் பிரியாமல்  உங்கள்  நண்பர்  வைத்திருக்க வேண்டும்  என்று  உங்கள்  சாட்சியாக  தருகிறேன்.  என்று  மோதிரத்தை  வசந்தனின் விரலில் அணிவித்தாள்

         வசந்தன்  அதை  பார்த்து  ஆடிப்போய்விட்டான்.  நான்  சத்யசீலனுக்குத்  தந்த  மோதிரம்  அல்லவா இது!  என்று  வியந்து    குழம்பினான்.  அதுல்யனுக்கும்  கூட  குழப்பம்  ஆகிவிட்டது.

உனக்கு யார்   இந்த மோதிரத்தைக் கொடுத்தது?  என்று வசந்தன் கேட்டபோது ,  ஒரு இளம் வயது வக்கீல்  பையன்,  கொடுத்தான்.
    நீங்கள் யாருக்கோ இதைக் கொடுத்ததாகவும்,  அங்கிருந்து  என்னிடம்  கொடுக்கச்சொல்லி   ஒருவர்  தந்ததாக   கூறினான்.  அவனிடம்  அதைக் கொடுத்த பெண்  பற்றி என்னிடம் விவரம் எதுவும் கூறவில்லை. என்றாள்  பூர்ணிமா.

 பயங்கரக் குழப்பத்தில்,  வசந்தனும்,  சரோவரனும்  தவிக்கையில்,          பாவம்  இந்த  ஆண்கள்  என்று  பரிதாபப்பட்டு,  பூர்ணிமாவும்,  நீரஜாவும்,  நடந்த  விஷயங்களை  விவரித்து  மகிழ்ந்தார்கள்.  வசந்தனுக்கு  தாங்க  முடியாத  வியப்பும்,  ஆனந்தமும்  உண்டாகிவிட்டது.  உன்  போன்ற அற்புத அறிவு கொண்ட  தேவதை  எனது  மனைவியாக  அமைந்ததற்கு  நான்  என்ன  தவம்  செய்தேன்?  என்று  ப்ரேமையில்  பிரமித்து  நின்றான்.

      '  விளையாட்டாக செய்து விட்டோம்.  கோபப்படவேண்டாம்.  மனனித்துக்  கொள்ளுங்கள்'  என்று  இரண்டு  தோழிகளும்  தங்களது   கணவர்களிடம்  இனிமையாக  வேண்டிச்  சிரித்து  மகிழ்ந்தார்கள்.

அந்த  நேரம்  பார்த்து  ப்ரேமசேனனும்,  அவனது  துணைவி  சந்திரிகாவும்
அதுல்யனைப்  பார்த்து  வாழ்த்து  சொல்ல  அங்கு  வந்து   ஆனந்த  வெள்ளத்தில்  கலந்து  கொண்டார்கள்.

  பூர்ணிமா அப்போது, ;' தன்னிடம்  ஒரு கடிதம்  வந்தது.  அதூல  மகாஜன் என்று விலாசம் இருந்தது என்று   சொல்லிக்  கொடுத்தார்கள்' என்று  அவனிடம்  அந்தக்  கடிதத்தைக் கொடுத்தாள்   .  அதில்,   தடம் மாறிச்  சென்ற   அதுல்யனின்   கப்பல்கள் சந்திரபுர துறைமுகத்திற்கு  பத்திரமாக  வந்து  சேர்ந்துள்ளன  என்றும்  சரக்குகள்  எல்லாம்  பாதுகாப்பாக உள்ளன என்றும்  நல்ல  செய்தி  இருந்தது.

    இவ்வாறு  வங்கதேச  வணிகன்  அதுல்யனும்,  அவனது  ஆருயிர்  நண்பர்களும்  மலை போல வந்த  துயரங்கள்  அனைத்தும் பனி போல மறைந்து  , வாழ்க்கையை இனிதே  கொண்டாடி  மகிழ்ந்தனர். 

===============================================================
( the following  para  is  not  according  to  the  original) 
       
          சைலகன்  மனம்  மாறி  , தனது   வட்டித் தொழிலைக்   கைவிட்டான்.  எனவே அரசர் அவனது  செல்வத்தை  திருப்பிக்  கொடுத்து விட்டார்.

அன்றைய வங்கதேச சட்டத்தின் படி,  வட்டிக்கடை  நடத்துவோர்,  வங்கதேச  பிரஜை  ஆக  முடியாது.    ஆனால், சைலகனும்   அவனது  கூட்டாளிகளும்,  அந்தத் தொழிலை  கைவிட்டவுடன்,   பிரஜைகளாக  மாறிவிட்டனர்.    இப்போது  அவர்கள்,  வங்கதேசத்தில்,  வந்தேறிகள்  அல்ல.  முழு  குடியுரிமை  கொண்ட  பிரஜைகள்.  மேலும்,  தங்களது  திரண்ட  செல்வத்தை  ,  எளிய  மக்களுக்கு  உதவுவதில்,  கல்வி,  மருத்துவம்,  விவசாய மேம்பாடு,  அன்ன சத்திரங்கள்,  தேவாலயங்கள்  போன்ற  நற்காரியங்களுக்கு  செலவு  செய்து,  வள்ளல்களாகப்   புகழ்  பெற்றார்கள்.

மீண்டும்  தனது  ஒப்பற்ற  மாளிகையில்,  சைலகன்  தனது  அருமைப்புதல்வி  சந்திரிகா ,  அருமை  மருமகன்  ப்ரேமசேனனுடன்  இனிமையாக  வாழ்ந்து,  வாழ்க்கையில்   பணம் மட்டுமே  பிரதானம்  இல்லை.  நட்பு,  அன்பு,  கருணை  இல்லாமல்  வாழ்க்கையே  இல்லை  என்று  உணர்ந்து  கொண்டு,   
அனைவருக்கும்  இனியவனாகப்  புகழ்  பெற்றான்.

                                               அன்பே  வெல்லும்.
                                                                     சுபம் 
===================================
ANTONIO            அதுல்ய மகாஜன் 

BASSANIO           வசந்தசேனன் 

GRATIANO          சரோவரசேனன் 

PORTIA                 பூர்ணிமா 

NERISSA               நீரஜா 

SHYLOCK            சைலகன்  

LORENZO           ப்ரேமசேனன் 

JESSICA                       சந்திரிகா   



PORTIA'S  UNCLE   சித்தரஞ்சன்

=============================================

TO THE OTHER TALES  IN THAMIZH AT
https://shakespeare4tamils.blogspot.com/p/index-page.html

AS  YOU  LIKE  IT
https://shakespeare4tamils.blogspot.com/2020/03/as-you-like-it.html
--------------------------------------------------------
TWO GENTLEMEN OF VERONA
https://shakespeare4tamils.blogspot.com/2020/03/two-gentlemen-of-verona-in-thamizh.html
------------------------------------------------
ALL'S WELL THAT ENDS WELL
https://shakespeare4tamils.blogspot.com/2020/03/all-is-well-that-ends-well.html
----------------------------------------------
MEASURE FOR  MEASURE 
https://shakespeare4tamils.blogspot.com/2020/03/measure-for-measure-in-thamizh.html
----------------------------------------------
CYMBELINE
https://shakespeare4tamils.blogspot.com/2020/03/cymbeline-in-tamil.html
---------------------------------------------
PERICLES
https://shakespeare4tamils.blogspot.com/2020/03/pericles-prince-of-tyre.html
------------------------------------------
TWELFTH NIGHT 
https://shakespeare4tamils.blogspot.com/2020/03/twelfth-night.html
----------------------------------------------------------------------
COMEDY OF ERRORS
https://shakespeare4tamils.blogspot.com/2020/02/comedy-of-errors-in-tamil.html
---------------------------------------------
TWELFTH NIGHT 
https://shakespeare4tamils.blogspot.com/2020/03/twelfth-night.html
-------------------------------------------
WINTERS TALE 
https://shakespeare4tamils.blogspot.com/2020/02/winters-tale.html
 

Popular posts from this blog

ALL IS WELL THAT ENDS WELL

                     ALL'S  WELL THAT  ENDS WELL PLAY  BY  SHAKESPEARE  ( 1600) RETOLD  BY MARY LAMB  (1800) ADAPTED AND TRANSLATED  BY  RSR IN THAMIZH ========================================= COPY RIGHT  MATERIAL. ========================================== https://comediesmarylamb.blogspot.com/2020/03/alls-well-that-ends-well.html?view=flipcard                                                நல்லதே  வெல்லும் விதேஹ   நாட்டின்   மன்னன் , கீர்த்திசேகரன்..    தனது ஆருயிர்   நண்பன் ஜெயதேவன்   எதிர்பாராத விதமாக   இளம் வயதிலேயே   பிரிந்து விட்டதை   நினைத்து ,,   ஜெயதேவனின்   மகனை அரசவைக்குக் கொண்டு    வந்து   அங்கு ஒரு    முக்கிய   பதவியில்   அமர்த்த நினைத்து ,    அவனை   அழைத்து    வர , மிகவும்   அனுபவமிக்க , பண்பாளன் , கோமான்    சுதர்சனசேனனை பிரயாகை   நகருக்கு அனுப்பி     வைத்தான்.       ஜெயதேவனின்    மகன் பெயர்    விக்ரமசேனன்..   நல்லவன் தான்   .   எனினும் தனது    உயர்குலப்   பெருமை பற்றி   சற்று    கர்வம்    கொண்டவன்..   அவன் அன்னையின்   பெயர்   அனசூ

AS YOU LIKE IT (THAMIZH)

                                                                                                               Play by Shakespeare  ( 1600) Retold by  Mary Lamb   (1800)          ( Tales from Shakespeare) Adaptation/translation  by RSR  in thamizh  தமிழ்     AS YOU LIKE IT original english tale  at https://comediesmarylamb.blogspot.com/2020/02/as-you-like-it.html?view=flipcard ------------------------------------------------------ Fil m  with  subtitles at    h ttps://www.youtube.com/watch?v=u9hTxzLHU3I -------------------------------------------------------------------------- INDEX TO THE OTHER TALES  IN THAMIZH AT https://shakespeare4tamils.blogspot.com/p/index-page.html original play by the BARD http://www.opensourceshakespeare.com/views/plays/plays.php http://www.opensourceshakespeare.com/views/plays/playmenu.php?WorkID=asyoulikeit                                உ ங்கள்  விருப்பம்       நீலாம்புரம்  மிகவும்  அழகான  சிறிய ராஜ்யம்..  அடர்ந்த காட்டுப்   பகுதிய