Skip to main content

WINTERS TALE


https://shakespeare4tamils.blogspot.com/p/index-page.html


AN ADAPTATION OF  MARY LAMB'S  NARRATION OF



                                               https://en.wikipedia.org/wiki/Mary_Lamb
SHAKESPEARE'S
 A WINTER'S  TALE.

NAMES  HAVE BEEN  CHANGED  FOR  EASY  FAMILIARITY. FOR INDIAN STUDENTS
( BY  RSR)

https://comediesmarylamb.blogspot.com/2020/02/winters-tale.html?view=flipcard

index to all the posts at
kespeare4tamils.blogspot.com/p/indexpage.htm
sha
 குளிர் காலக்கதை

ராஜசிம்மனும் ,  பிரேமசந்திரனும்  சி று வயது முதல் ஒன்றாக வளர்ந்து விளையாடி மகிழ்ந்த உயிர்த்  தோழர்கள்.  இருவரும் ராஜ குமாரர்கள்.
வயது வந்தபின்னர் அவர்கள், தத்தமது   ராஜ்யங்களின் அரசர்களாக   இருந்தனர்.   ராஜசிம்மன்  மனைவி  சுசீலா என்ற பேரழகி .   கற்பில் சிறந்த உத்தமி.    இருவரும்  ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு இனிதாக வாழ்ந்து  வந்தனர்.    ப்ரேமச்ந்திரனின்  ராஜ்ஜியம்   கடலுக்கு அப்பால் தூர தேசத்தில்  இருந்தது.   அதனால் பற்பல  ஆண்டுகளாக  அவர்கள்  சந்திக்க முடியவில்லை.   இருந்தாலும்  ராஜசிம்மன்,  மனைவி  சுசீலாவிடம்,  பல  தருணங்களில் தனது  பால்ய நண்பனைப்  பற்றி  இனிய நினைவுகளைப்  பகிர்ந்து   கொள்வது  வழக்கம் ! . அதனால்    சுசீ லாவும் ,பிரேமசந்திரன் பற்றி நல்ல கருத்து  கொண்டிருந்தாள்.     தூர  தேசத்தில்  இருந்தாலும்,   இரண்டு  மன்னர்களும்  அடிக்கடி கடிதப் பரிமாற்றம்  செய்து  கொண்டிருந்தனர்.
ஒரு  சமயம் ,   ராஜ சிம்மனுக்கு ,தனது  தோழனை   எப்படியாவது  மீண்டும்  பார்த்து   இனிமை  நினைவுளைப் பகிர்ந்து  கொள்ள தாங்க முடியாத   ஆவல் தோன்றியது.    எனவே  அவன்  தனது உயிர் நண்பனுக்கு  தனது  விருந்தினனாக பல நாட்கள்   வந்திருந்து மகிழ்விக்க ஒரு  கடிதம் எழுதினான்.
பிரேமசந்திரனுக்கும் தனது  நண்பனைப் பார்க்க ஆவல்  தான்..!  எனவே  அவனும் தனது   ராஜ்ய அலுவல்களை   சில நாட்கள்  தள்ளிவைத்துவிட்டு  , ஒரு   கப்பலில் ராஜசிம்மனின் ராஜ்யத்துக்கு   வருகை புரிந்தான்.
     தனது   அன்புக்கணவனின் உயிர்த்தோழன் என்பதினால் ,  சுசீலாவும்
பிரேமசந்திரனிடம்  இனிமையாகவும் மிகவும் கௌரவமாகவும்  பழகினாள்

     பல  நாட்கள்  இவ்வாறு   சென்ற பின்னர், பிரேமச்சந்திரன் தனது  ராஜ்ய  அலுவல்களை இனியும்  தள்ளி  வைக்க   இயலாது  என்று  கூறி  தனக்கு  திரும்பிச் செல்ல  அனுமதிக்க , ராஜ சிம்மனிடம்   வேண்டினான். இன்னும்  சிறிது  நாட்கள்  தங்கியிருக்க , ராஜசிம்மன் தனது   நண்பனை கெஞ்சிக் கேட்டான்.   ஆயினும், பிரேமசந்திரன் அதற்கு  ஒப்புக்கொள்ளவில்லை.
 'ஏற்கனவே  மிகவும்  நாட்கள்  கழிந்து விட்டன.  இனியும் தாமதிப்பது  நல்லதல்ல 'என்று   நயமாக ஆனால்  பிடிவாதமாகக் கூறி விடையளிக்க வேண்டினான்.
அப்போது , சுசீலா தனது  கணவனுக்காக வாதாடி, பிரேமச்சந்திரன் இருப்பதால் தனது  கணவன் மிகவும்  ஆனந்தமாக இருப்பதைக் கூறி,   இன்னும்  ஒரு  சில நாட்களேனும், தங்களோடு   தங்கியிருந்து தங்களை மகிழ்விக்க  , பிரேமச்சந்திரனை  வேண்டினாள்.
     தனது  உயிர் நண்பனின்  அருமை மனைவியின்  வேண்டுகோளை புறக்கணிக்க  மனமில்லாமல் , பிரேமச்சந்திரனும் தனது   பிரயாணத்தை சில
  நாட்களுக்கு தள்ளிப் போட   ஒப்புக்கொண்டான்.
        பிடித்தது அனர்த்தம்!  
  தான் எவ்வளவோ  சொல்லியும்    ,பலனில்லாமல்  சுசீலா  சொன்னவுடன் ,அதை  பிரேமச்சந்திரன்  ஏற்றுக்கொண்டதும்   ,  ராஜ சிம்மனின்   மனதில் சந்தேகப் பொறாமை  என்ற பிசாசு  குடிபுகுந்து   கொண்டது.  தனது   மனைவிபற்றியும்,  நண்பன் பற்றியும் தகாத  ஐயம் அவன்  மனதை ஆட்டிப்படைக்கத்   தொடங்கியது.  இந்த  கொடிய விஷம்  அவனை ஒரு  அரக்கனாக  மாற்றிவிட்டது.
         தனது     நம்பகமான  உதவியாளன்   கருணாகரனை அழைத்து அவனிடம் தனது  மனக்குமுறலை கூறி,   பிரேமசந்திரனை விஷம் கொடுத்து கொன்றுவிட கூறினான்.  ஆனால்     கருணாகரன்  விவேகி! .  அவனுக்கு     ராணி  சுசீலா மீதோ  ,பிரேமச்சந்திரன் மீதோ   எள்ளளவும் சந்தேகம் இல்லை. எனவே  ,அவன்  உடனடியாக பிரேமச்சந்திரனை சந்தித்து,  அபாயத்தை விளக்கி   அதி  விரைவாக தனது  நாட்டிற்கு   தப்பி  விட   அறிவுறுத்தினான்.

 பிரேமச்சந்திரனுக்கு கருணாகரனை  மிகவும்    பிடித்துவிட்டது.'நீயும் என்னுடன்    .வந்துவிடு.      உனக்கும் இங்கு   பாதுகாப்பு      இருக்காது ' என்று
கூறி   கருணாகரனையும் தன்னுடன்  சேர்த்துக் கொண்டு தனது நாட்டிற்கு  தப்பிவிட்டான்.   அங்கு  பிரேமச்சந்திரனின் மெய்காப்பாளனாகவும்,  நண்பனாகவும்   கருணாகரன்  சிறப்பாக பணியாற்றி வந்தான்.

       பிரேம சந்திரனும் கருணாகரனும் தப்பி  விட்டதை அறிந்தவுடன் ,    ராஜசிம்மனின்  ஆக்ரோஷம்  பல மடங்கு அதிகரித்து   விட்டது.  உடனே  அவன்  தனது  மனைவியின் அறைக்கு  சென்றான்.  அப்போது  சுசீலா தனது    மகனின்   மழலைக்கதைப்பை    ஆனந்தமாக கேட்டுக்கொண்டிருந்தாள்.

சற்றும் இரக்கமில்லாமல்  , ராஜசிம்மன் தனது  மனைவியிடம் இருந்து  குழந்தையை பிடுங்கிக்கொண்டு,    அவளை  சிறைக்கு   .அனுப்பி விட்டான் .
    சுசீலாவின்  சிறு மகன்,  தனது  தாயைப்   பிரிந்த  வருத்தத்தில்  உணவும் உறக்கமும்   இல்லாமல் உயிர் விடும் நிலையை  அடைந்தான்.
      ராஜசிம்மன்  தனது  இரண்டு   பிரபுக்களைக்    ,கூப்பிட்டு  , வேறு ஒரு  நாட்டில்  இருந்த புகழ்  பெற்ற  ' முக்காலமும்  உணர்ந்த ஒரு  தெய்வீக சிலை '.சுசீலாவின் நடத்தை பற்றி என்ன  சொல்கிறது 'என்று  கேட்டு  வர   அனுப்பிவைத்தான்.
      சுசீலா   சிறையில்   இருக்கையில்,அவளுக்கு  ,   அவளைப்  போலவே
அழகு மிகு பெண்  குழந்தை  பிறந்தது .

       சுசீலாவுக்கு , வேறு ஒரு பிரபுவின் மனைவியான  சுகுணா என்ற தோழி  இருந்தாள்.  சுசீலாவுக்கு சிறையில் பெண் குழந்தை பிறந்துள்ள செய்தி  அறிந்ததும், அவள்,  '  தன்னிடம் அந்தக்   குழந்தையை   , கொடுத்தால்,
ராஜசிம்மனை  சந்தித்து,  அவன்    காலடியில்,அந்த பெண் சிசுவை  இட்டு,  அவன் மனதை  இளக்கி  மனம்  மாற்ற முயற்சிக்க முன்வந்தாள் .   சுகுணாவின்   கணவன்   குஞ்சிதனுக்கு    அதில்  ஒப்புதல் இல்லை.   அரசனின்
 கோபத்திற்கு ஆளாவோம் என்று  அஞ்சினான்.   எனினும் சுகுணா அதை பொருட் படுத்தாமல் தைரியமாக  குழந்தையை  எடுத்துக்  கொண்டு  அரசனான  ராஜசிம்மனிடம் சென்று  வேண்டினாள்.
 'சுசீலா; சற்றும்  .குற்றமற்றவள்.தாங்கள்    செய்வது  மிகவும் தவறு " என்று   வாதாடி வேண்டினாள் .  எனினும்  ராஜசிம்மனின்  மனம் சற்றும் மாறவில்லை.  சுகுணாவின்   கணவன்  குஞ்சிதனை அழைத்து '   உன்  மனைவியை  இங்கிருந்து  அகற்றிக் கொண்டுபோ !'  என்று  கூறி   விட்டான்.
       சுகுணா , அந்தக் குழந்தையை  அரசனின் காலடியில்    வைத்து   விட்டு    அகன்றாள் .  சிறிது நேரம்   சென்ற பின்னர் , தனது  பிஞ்சுக்  குழந்தையின்  அழகு  முகம் கண்டு  , மன்னன் மனம்  மாறி  திருந்துவான் என்று  அவள்  நினைத்தாள் .  தவறு!  ராஜசிம்மன்   இப்போது ஒரு  அரக்க மன  நிலையில் இருந்தான்.    அவன்,   சுகுணாவின்  கணவனிடம் '  நீ  இந்த குழந்தையை
எடுத்துக் கொண்டு   போய்    எங்காவது ஒரு  கடற்கரை   மணல்  பகுதியில்   போட்டுவிடு.  இது  அங்கேயே    கிடந்து    அழுது சாகட்டும் ' என்று  ஆணை இட்டான்.    சுகுணாவின் கணவன்   குஞ்சிதன் .பயந்தவன்.!  அரசனின் கோபத்திற்கு   பயந்து அவன்  , ராஜசிம்மன்   கூறியபடி செய்து விட்டான்.
       வெறித்தனமான கோபத்தில் இருந்த  ராஜசிம்மன், தெய்வச் சிலையின் செய்திக்கு  கூடக்    காத்திராமல்,தனது  அரசவையை கூட்டி,        
 , தனது  மனைவி  தனக்கு   துரோகம்  செய்து விட்டதாக , எல்லோர்  முன்னிலையிலும் கூறி   அவமானப்படுத்தி    அவையின் முடிவைக் கேட்டுக்
.கொண் டிருந்தான்.அப்போது  அவன்  அனுப்பி வைத்திருந்த இரண்டு  பிரபுக்களும்,    தெய்வச்  சிலையின் பதிலை கொண்டு  வந்து கொடுத்தார்கள்,
அதில்,  சுசீலா   குற்றமற்றவள்.- பிரேமசந்திரன்    உத்தமன்.- கருணாகரன் நேர்மையாளன். - ராஜசிம்மன்  பொறாமை   நிறைந்த  கொடுங்கோலன்..
 இழந்த   செல்வம் மீளாவிடின் , அரசன்  வாரிசு இல்லாமல்  போவான். '  என்று  இருந்தது.   ஆனால்,  ராஜசிம்மன்  எதையுமே கேட்கும் மன  நிலையில் இல்லை.   ' இது   உண்மையில் தெய்வச் சிலையின் பதில் இல்லை.  யாரோ சுசீலாவின்  நண்பர்கள், தயாரித்த பொய்ச் செய்தி  என்று  கூறி  அதை
புறந்தள்ளிவிட்டான்.  அப்போது, ராஜசிம்மன்-சுசீலா  தம்பதியின் மகன்  துக்கம் தாளாமல்  இறந்துவிட்டான்.என்று  ஒரு  செய்தி  வந்தது.  அதைக்  கேட்ட ராணி  சுசீலா, தாங்க முடியாத துயரத்தில்,   மயங்கி வீழ்ந்தாள் .
      தனது மகன் இறந்த  ,செய்தியால், சற்றே மனம்   மாறிய ராஜசிம்மன் , ராணி  சுசீலாவும் மயங்கியதைக் கண்டு  , மனவருத்தத்தில்,  '   ராணியை  கவனிக்க கூறி     சுகுணாவிடமும் தாதிகளிடமும்  ஒப்படைத்தான்.  சற்று    நேரத்தில்,சுகுணா  திரும்பி வந்து  ராணி  சுசீலா  இறந்து விட்டாள்  என்று  துயரச்   செய்தியை அவையோருக்கு அறிவித்தாள் .

         இவ்வளவும் நடந்த பின்னர்தான், ராஜசிம்மனின்  மனம்  மாறியது. எள்ளளவும்  தவறு செய்யாத    சுசீலாவை சந்தேகித்து  கொடுமைப  படுத்திய தனது   செயலுக்கு மனம்   . வருந்தினான்.  தெய்வச்சிலையின் தீர்ப்பு  சரிதான் என்று   . நம்பினான். மகன்  இறந்து விட்டதால், இழந்த செல்வம் என்ற குறிப்பு, தனது  மகளைக்  குறிக்கிறது என்று   முடிவு செய்து,   தான் தனிமையில் தவிக்க விட்ட  அந்த பெண்   குழந்தையை  மீண்டும்   பெற தனது  ராஜ்யமே தரத்   தயார் என அறிவித்தான். . தனது  தவறான  ,செய்கையினால்  இழக்க நேரிட்ட அருமைச்   செல்வங்களான தனது மனைவி  சுசீலா,  மகன்,
பச்சிளம்   குழ்ந்தை மகள்  பற்றி    ஓயாது   வருந்தி , நடைப்  பிணமாக
 வாழ்ந்து  வந்தான்.
-------------------
      ராஜசிம்மனின்  இளம் பெண் குழந்தையை,   எடுத்துக் கொண்டு  குஞ்சிதன் ஒரு  கப்பலில்   பயணித்தான். அப்போது  ஒரு   புயல்   அடித்து,  கப்பல் பாறையில்  மோதி    உடைந்தது. குஞ்சிதன்  தத்தளித்து ,  கரையேறி , பெண் குழந்தையை  அந்த  கரையில் போட்டு  விட்டு    .திரும்பி வர  முயன்ற பொது, ஒரு   கரடி அவனை    தாக்கி  கொன்று போட்டது.   சரியான  .தண்டனை.  !

        இவ்வாறு  அந்த பெண் குழந்தை  சேர்ந்த  கடற்கரை ,   ராஜா   பிரேமச்சந்திரனது நாட்டில்  இருந்தது!   குழந்தையை சுசீலா ,  சுகுணாவிடம் ஒப்படைத்த போது   ,   விலை   மதிப்பில்லாத ரத்ன மாலை மற்றும்,
 நகைகள்    , பட்டாடை  அணிவித்து  ,அனுப்பியிருந்தாள் .
       குஞ்சிதன் தன    பங்கிற்கு ஒரு   ஓலைக்   ,கீற்றில் '  கனகம் ' என்று  எழுதி  குழந்தையின்  ஆடையில்   .   .சேர்த்திருந்தான் .
      இவ்வாறு    கடற் கரையில் கவனிப்பார் யாரும் இல்லாமல்  இருந்த  கனகத்தை ,  கோபன் என்ற ஒரு     ஏழை   ஆயர்  குல இடையன் , கண்டெடுத்தான்.  மிகவும்  இளகிய மனம்  கொண்ட நல்லவன்.  அவன்    தனது   குடிசைக்கு  எடுத்துச்   சென்று   மனைவியிடம் கொடுத்தான்.  இருவரும்  குழந்தையை  தங்களது  சொந்த  மகள் எனப்   போற்றி   செல்லமாக வளர்த்தனர்.  குழந்தை   கனகத்தின்  சிறு    நகை  ஒன்றை விற்று, அந்த  இடையன்   நிறைய  கால்நடைகளை வாங்கி,  வசதி மிக்க  ஆயர் பண்ணை   நடத்தினான். மற்ற நகைகள்   எதையும் தொடாமல்,   அவற்றை மிகவும்   பாதுகாப்பாக   .வைத்து   .காப்பாற்றி வந்தான் . சொந்த   ஊரில்    , தங்கினால், தனது   திடீர் செல்வத்தால்  ,சந்தேகமும் , தொந்தரவும் வரும்  எனக்   கருதி,     காட்டுப் பகுதியில்,  குடியேறி   இனிதே   வாழ்ந்தான் .

  கனகம்   ,நாளடைவில்   ஒரு  அற்புதமான அழகு  மங்கையாக    வளர்ந்தாள்.    . ஏழை  ஆயர் வீட்டில் வளர்ந்தாலும்,   அவளது பிறப்பின்  உயர்வினால்   அவள்    இயல்பாக  உயர்குலப்  பெண்கள்    போன்று  பேச்சும்,நடைமுறையும் கொண்டிருந்தாள்.
           
--------------
      கனகம்  வளர்ந்து வந்த    நாட்டின் அரசன், பிரேமசந்திரன்  என்று   முன்னமேயே  கண்டோம். அந்த    அரசனுக்கு,   சுகுமாரன்  என்ற   அழகிய     ராஜகுமார புதல்வன் இருந்தான்.  ஒரு  நாள், சுகுமாரன்  காட்டுப் பகுதியில்,  ஆநிரை  காத்து  நின்ற  கனகத்தைக்  காண நேர்ந்தது.  அந்தக்  கணத்திலேயே   ராஜகுமாரன் மனம்   சொக்கிப்போய் , அவளது   அழகிற்கு அடிமையாகி
விட்டான் ! .  ராஜகுமாரன்  என்று  தெரிந்தால்,அவள் தன்னுடன்  இயல்பாக பேச மாட்டாள்  என்று   கருதி,அவன் தன பெயரை    வசந்தன்  என்று    சொல்லி, சாதாரணப்    பையன் போல உடை ,அணி ந்து   அடிக்கடி  அவளது  வீட்டிற்கு  சென்று   இனிமையாக பேசி   அவளது  மனதில்  இடம்  பிடித்துவிட்டான்.
       ராஜகுமாரன்  இவ்வாறு  அடிக்கடி   காணாமல் போய்  திரும்புவது பற்றி  அரசன்  பிரேமசந்த்ரனுக்கு    கவலை ஆகிவிட்டது.  இது  பற்றி  அவன்  தனது   மெய்காப்பாளனும் இஷ்ட நண்பனும் ஆன  கருணாகரனிடம்   கலந்து  .
 .யோசனை செய்தான்.! இருவரும்  மாறு  வேடத்தில், கோபனின்  சேரிக்கு சென்று  உண்மை  அறிய முடிவு செய்தனர்.
       அவர்கள்  சென்ற  நாளில்,  ஆயர்  சேரியில்,   மாட்டுப் பொங்கல்   திருவிழா
நடந்து   கொண்டிருந்தது.     எங்கெங்கும்    வாசமிகு மலர்த்   தோரணங்கள், புத்தாடை நறுமணங்கள்,  வீட்டின் முன்னே இளைஞர்களும், இளம்  பெண்களும் போட்டி  போட்டு ஆடிக்   கொண்டிருந்தனர். அதற்கேற்ற     பாட்டுகளும்,  கேலியும்   சிரிப்பும் நிறைந்த  நன்னாள்.  !  ஒரு  கைவண்டியில், எளிய வியாபாரி ஒருவன்  குறைந்த விலையில்   சாதாரண  ரிப்பன்,  ,வளையல் ,  கண்ணாடி,  அலங்காரப்பொருட்கள் ,  போன்ற பரிசுப்  பொருள்களை விற்றுக் கொண்டிருந்தான்.  இளம்   ஆடவர்கள், தங்களது பிரிய தோழிகளுக்குத்  தர  அந்த  கைவண்டி  வியாபாரியை சுற்றி  மொய்த்துக் கொண்டிருந்தனர்.  இளம்  தாய்மார்கள்,    தங்கள்  அன்புக்   ,குழந்தைகளுக்கு  ஊதல்,,  விசில்,  பொம்மை  வண்டி போன்ற   பொருட்களை பேரம் பேசி  வாங்கி கொண்டிருந்தனர்.     அறுசுவை விருந்துச்சமையல்  !   சமையலின்  கம கம     வாசம்  வீதியெங்கும்  .வீசியது .  இவ்வளவு  கோலாகலம்   எதிலும் பங்கெடுக்காமல்,  கனகமும் வசந்தனும் , ஒரு    ஓரத்தில், அமர்ந்து மெய்  மறந்து  பேசிக்  .கொண்டிருந்தனர்.
    பிரேமச்சந்திரன்   மாறு வேடத்தில் இருந்தான்.   கனகத்தின்   அருகே  சென்று  கண்டு  , 'இந்தப் பெண்  எப்படி     இவ்வளவு   எழில்   மங்கையாக 'இருக்கிறாள்? என   வியப்படைந்தான் .   உடன்  சேரித் தலைவன்   கோபமனிடம் சென்று '  அந்தப்   பெண்ணி டம்  பேசிக்கொண்டிருக்கும் அந்த  இளைஞன் யார்  என்று  கேட்டான்.  அதற்கு  கோபன்-  பதிலளித்து, '  என்  பெண்ணை  நேசிப்பதாக அவன்     கூறுகிறான். யார்  மேல்  யாருக்கு
 நேசம்    அதிகம் என்று   நானும்  யோசித்துக் கொண்டு   இருக்கிறேன்! .
எப்படி இருந்தாலும் , அவளை   மணைவியாக அடைபவன்  பெரும் செல்வந்தன்  ஆவது   உறுதி!  என்றான்.(  கனகத்தின் திருமணம் போது
 கொடுக்க காப்பாற்றி   வைத்திருக்கும் ரத்ன  மாலை, நகைகளைக்  குறித்து  இவ்வாறு கோபன்  கூறினான்).
         அப்போது,   மாறு வேடத்தில் இருந்த  பிரேம சந்திரன் ,  வசந்தனி டம் சென்று '  ஏனப்பா!   நான் என்  இள   வயதில், பிடித்த பெண்ணிற்கு ,  பரிசுமழை    பொழிவது  உண்டு.  நீ  எதுவுமே  வாங்கித் தராமல்  வெறுமே பேசிக் கொண்டு   இருக்கிறாயே?"  என்று  தன      பையனை  கேலி செய்தான்.
  அதற்கு  பதில் கூ றி , வசந்தன்  ' பெரியவரே !. இந்தப் பெண் அது போன்ற அற்பப்   பரிசுகளை விரும்ப மாட்டாள் . அவள்   விருபு ம் பரிசு என்
முழுநெஞ்சத்திலும்   என்றென்றும்  நீக்கமற . நிறைந்திருப்பது  தான் ' என்றான்.
   பின்  கனகத்திடம்  "  இந்த   வயோதிகர்  , ஒரு  காலத்தில் தான் தந்த காதல் பரிசு பற்றி  பேசுகிறார்.   அவரையே    சாட்சி யாக கொண்டு, நான்  உனக்கு  திருமண  பிரேரணையை   , என்  முழு நெஞ்சமுடன் பரிசாக தருகிறேன். " என்றான்.
       பிரேமச்சந்திரன் தனது  மாறுவேடத்தை   களைந்துவிட்டு," அது  நடக்காது! "
என்று  கூறி, தன்   ராஜ குலத்தை  மறந்து,  ஒரு  சாதாரண இடைச் சேரி  மகளை   மணக்க கேவலமான எண்ணம் உனக்கு  எப்படி   வந்தது?! நான் எப்படி  ஏற்க முடியும்? என்று   மிகவும் இழிவாக  . பேசினான்..  பின்    கருணாகரனிடம்
 இளவரசனை , அரண்மனைக்கு திரும்ப கூட்டிக்கொண்டு வரும் பொறுப்பை  அளித்துவிட்டு ,  கனகத்திடம் "'  இதோ   . பார்   பெண்ணே  !! இனி  ஒரு   தடவை,என்  மகனை  இங்கு  காண  நேர்ந்தால் உன்னையும் உன்     தகப்பனையும்  மேலுலகதிற்கு  அனுப்பிவிடுவேன் .  ஜாக்கிரதை "  என்று கடுமையாக எச்சரித்தான் .

----
ராஜசிம்மன் சென்றபின்  கனகம்     "  இந்த  ராஜாவின் அரண்மனைக்கும்  எங்கள் குடிசைக்கும்     ஒரே சூரியன்தான்  ஒளி   தருகிறது!  ' "எனது    கனவு கலைந்தது.  மீண்டும்   மந்தை    மேய்க்க  செல்வதுதான் நான் கொடுத்துவைத்தது"    என மனம்   வருந்தி  சோர்ந்தாள்.

  கருணாகரன்  இந்த   இருவரின்   அன்பு  மிகவும்  ஆழம் கொண்டது என்று உணர்ந்து அவர்களுக்கு உதவ   ஒரு திட்டம்  .வகுத்தான்.   ,  ராஜசிம்மன் மனம்  மாறிவிட்டது  பற்றி அவன் கேள்விப்பட்டிருந்தான் . எனவே தானும் ,  கோபனும்,  இளம் பெண் கனகமும் , இளவரசன்  சுகுமாரனும்  ,  ராஜசிம்மனை சந்தித்து  அவன்   மூலம் ஆதரவு பெறலாம் என்று  .கூறி  அவர்களைத்  தேற்றினான்.


26-2-2020
-----------
   ராஜசிம்மன்   அரண்மனையில், இந்த நால்வருக்கும் இனிமையான வரவேற்பு   தரப்பட்டது.  கனகத்தை , பார்த்த  ராஜசிம்மன்   ,  கண்   இமைக்காமல்   அவளுடைய  அழகு  வதனத்தை நோக்கி   பழைய   நினைவுகளில் மூழ்கினான்.!  ஏனெனில்,   கனகம்   அப்படியே  அச்சாக   சுசீலா  போலவே தோன்றினாள் .   '  என்னுடைய  மகள் மீண்டு  வந்தால், இந்தப்  பெண் போலவே   தான்   இருப்பாள். என்னுடைய   தவறினால்,அவளை  தவற  விட்டேன். '   என்று  வருந்தினான்.  மேலும்  சுகுமாரனை நோக்கி  '  உன்னுடைய  தந்தை போன்ற  அருமையான  நண்பனையும்   இழந்து  தவிக்கிறேன். ' என்று புலம்பினான்
      இதெல்லாம்   கேட்ட கோபன் , தான்    கனகத்தை   கடற்கரையில்   கண்டெடுத்தது, அவளுக்கு அணிவித்திருந்த    ரத்னமாலை, மற்றும் தங்க நகைகள்,  பட்டாடை , அவள் பெயரை  கனகம்  என்று  குறித்திருந்த ஓலைக்கீற்று ,  அனைத்தையும்   நினைவில் கொண்டு,   தன்னிடம்  வளர்ந்த பெண்  கனகம்  ,  நிச்சயமாக ராஜசிம்மனின்   மகள் தான்  என்று  உறுதி
. அடைந்தான்..    அதுவரை  நடந்த   சம்பவங்கள் அனைத்தையும்   விவரமாக அரசனிடம் கூறி,    சான்றாக,  தான்  அது நாள்   வரை காப்பாற்றி  வந்த பொக்கிஷம்  , பட்டாடை  ,  ஓலைக்கீற்று    எல்லாவற்றையும் அரசனிடம்  காண்பித்தான்   குஞ்சிதன்    கரடியால் தாக்கப்பட்டு  மாண்டான்  என்பதையும் கூறினான்.
    அப்போது  அங்கிருந்த  சுகுணா  ஒரு  புறம்   கணவன் குஞ்சிதன்  மறைந்த செய்தியில்   துக்கம், மறுபுறம் ,  தனது   உயிர்த்  தோழி  சுசீலாவின் மகள்  அதிசயமாக   பிழைத்து வந்துள்ளது   பற்றி  ஆனந்தம் இரண்டும்   ஒருங்கே அடைந்தாள்.
அரசனோ   இன்ப   அதிர்ச்சியில் எதுவுமே   பேச முடியாமல் ' உன் தாய் ! உன் தாய் '  என்று  கனகத்தை    நோக்கி  உருகினான்
     சுகுணா  அந்த நேரத்தில்,   மன்னனை நோக்கி  ' அரசே !   நான்  ஒரு   கைதேர்ந்த சிற்பியைக் கொண்டு,  சுசீலா போலவே ஒரு   சிலை வடித்து   வைத்திருக்கிறேன்! என்   இல்லத்திற்கு வாருங்கள் , அந்த  சிலையை  பார்த்தால் உங்கள் துக்கம் தீரும்."   என  அழைத்தாள் . ராஜசிம்மன் ,பெரும்   வியப்படைந்து   அந்தச்     சிலையைக்   காண   விரும்பினான்.. கனகமும்  ,தனது  தாய்   எப்படி  இருந்திருப்பாள் என்று  காண  ஆவலுடன்   சென்றாள் ..  சிலையை   மூடியிருந்த திரையை  சுகுணா  அகற்றினாள்  . அப்படியே    சுசீலா போலவே  தத்ரூபமாக சிலை   இருந்தது .
 ராஜசிம்மன்  உணர்ச்சி  வசப்பட்டு ,பேச்சு இழந்தான்.  சுகுணா  அவனிடம் ' தாங்கள்  மௌனம்  காப்பது  எனக்குப் புரிகிறது.  இந்தச்   சிலை    தங்களின் அருமை மனைவி  போலவே  !உள்ளதா !"  எனறாள் .
     .ராஜசிம்மன் '"   உண்மைதான்.!  சுசீலா போலவே    இந்தச்  சிலை   உள்ளது. இருந்தாலும்,  சற்று   வயதானவளாக  சிற்பி அவளை வடித்துள்ளான் என்று  .தோன்றுகிறது .'என்றான்.
    அப்போது  சுகுணா "   அது அந்த  சிற்பியின்  கைவண்ணத்தை  மேலும்          
.  காட்டுகிறது.    சுசீலா   இப்போது உயிருடன்  இருந்தால் எப்படி   இருப்பாளோ   அப்படி   வடித்துள்ளான் அந்தத்   திறன் மிகுந்த சிற்பி "  என்று கூறினாள் .
     சுகுணா திரையை   மூட முயன்ற பொது  , ராஜசிம்மன்   'மூடி  விடாதே!
 இது என்ன விந்தை!  அவள்   கண்கள்  இமைக்கின்றன.!   சுவாசிப்பது போல   தோன்றுகிறது!".  என்றான்.
      " அரசே !  நான்    சிலையை மூடுவதுதான் நல்லது.  இதை  பார்த்து  தங்கள் மனம்    பேதலிப்பது     எனக்கு ,  கவலை தருகிறது.  "   என்றாள் ..
     அரசனோ   "   இருபது  ஆண்டுகள்   போய்விட்டது.!   ஸ்வாசம்  தெரிகிறது. எந்த ஒரு  சிற்பி  ,ஸ்வாசிக்கும் சிலையை   வடிக்க முடியும்?  
  சிலை என்றாலும்,   சிலைக்கு ஒரு  முத்தம்  தர   வேண்டும்  . " என்றான்.


   சுகுணா ,  பதறி ,  "   வேண்டாம் அரசே!   சிலையில்  சாயம்  பூசி இருக்கும்.  அந்த   ரசாயனம்  தங்களுக்கு  தீங்கு விளைவிக்கலாம் "  என்று  தடுத்தாள் .

    கனகம்   தனது   அழகுத தாயின்    உருவம்  கண்டு மெய்  மறந்து சிலை   முன் மண்டியிட்டுப் பணிந்து , " எத்தனை    ஆண்டுகளுக்கும்   என் தாயின்   உருவம்
முன்னால்    இவ்வாறு இருப்பது  எனது பாக்கியம் ' என்று   உருகினாள் .

   "  நீங்கள் இருவரும்  சற்று  காத்திருந்தால் ,  இந்தச்   சிலையை தனது   பீடத்தில்  இருந்து   இறங்கி   வந்து  ,  நடந்து  வரச்  செய்ய முடியும்.  ஆனால்,  நீங்கள்   என்னை  ஒரு  சூன்யக்காரி  என்று   சொல்வீர்களோ  என்று  அச்சமாக இருக்கிறது   "  .என்றாள்   சுகுணா.

    " உன்னால்  எதுதான் செய்ய முடியாது!  இவளை  நடக்க  வைக்க முடிந்தால், அவளைப்   பேச  வைக்கவும்  செய்.!  நான்  கேட்டு   இன்புறுவேன்." என்றான் ராஜசிம்மன்

     உடனே  ,  சுகுணா தான்   ஏற்கவே ஏற்பாடு  செய்திருந்த   இசைக்  கலைஞர்களின் வாத்திய  இசை  ஒலிக்க  செய்தாள்.
 என்ன வினோதம்!
  சுசீலா என்ற சிலை ,  பீடத்தில்  இருந்து  இறங்கி  வந்து,  ராஜசிம்மனின்  நெஞ்சில்   இணைந்து  ,    ஆசி வேண்டி  அன்புடன் பேசினாள்.  தனது   செல்வ   மகளுக்கும்  முத்த மழை  பொழிந்து  ஆசி    கொடுத்தாள்.
      இதில்   மந்திர தந்திரம்   எதுவும் இல்லை!  ஏனென்றால், சுசீலா இறந்து  விட்டதாக கடந்த காலத்தில், சுகுணா தெரிவித்தது  ,   உண்மையல்ல. அரசனின் அப்போதைய மன  நிலையில்  அதுதான்  பாதுகாப்பு   என்று   கருதி அவள்   அவ்வாறு  கூறியிருந்தாள் .
 தனது  மகள்   உயிரோடு திரும்பும்  வரை   ராஜசிம்மனை   மன்னித்து  அவனுடன்   இணைய  .ராணி சுசீலா   விரும்பவில்லை. தனக்கு  இழைக்கப்பட்ட துன்பத்தை  மறக்க அவள் தயாராகினும்,  தனது  பிஞ்சுமகளுக்கு  அரசன்   இழைத்த கொடுமையை  அவள்  மறக்க முடியவில்லை.  இப்போது   மகள்  மீண்டு வந்ததால்,  அவள்   மீண்டும்  அரசனிடம்  ஒன்றி  வாழ  ஒப்புதல் கொண்டாள் .
      அரசன்  ராஜசிம்மனுக்கு      இன்ப  வெள்ளத்தில்   சுவர்கமே   கிடைத்தது.
 போல உணர்ந்தான்.
ராஜசிம்மனும் ,  அவனது ராணி  சுசீலாவும்,
சுகுமாரனை  , தன  மகளிடம் ஏழை ஆயினும்  அன்பு   கொண்டதற்கு
பாராட்டினர் ..
   ஆயன்     கோபனுக்கு  இத்தனை ஆண்டுகள்  தனது    அன்பு மகளை   நேசமுடன் வளர்த்து ஆளாக்கியது  பற்றி   நன்றி தெரிவித்தனர் .

  அரசன் , கருணாகரனின்   நல்ல  மனதை  உருக்கமுடன் பாராட்டினான் .
   எங்கும்  ஒரே மகிழ்ச்சி     !
, இதற்குள்,, அரசன் பிரேமசந்திரன் ,  இளவரசனையும் , கருணாகரனையும்   காணாமல்.,  அவர்கள் அனைவரும்  , ராஜசிம்மன்     நாட்டிற்குத்தான்  சென்றிருப்பார்கள் என யூகித்து, அங்கு  வந்து  சேர்ந்தான்.  இப்போது  கனகம்
இடைச்சேரிப்   பெண்ணல்ல!  ஒரு   ராஜ்யத்தின் இளவரசி!.  எனவே  அவனுக்கு  தனது  மகன் அவளை  மணம்  செய்துகொள்ளவதில் எந்த    எதிர்ப்பும் இல்லை.
       ராஜசிம்மனையும் ,  அவன் மன்னித்து,  மீண்டும் நண்பனாகிவிட்டான்.
இவ்வாறு   எல்லாமே   இனிமையாக   முடிந்தது...
        சுசீலாவின்   அருமையான  குணத்தினால், அனைத்தும்  மனம்போல  நடந்து  அவள் தனது  அன்புக் கணவன் மற்றும் செல்ல மகளுடன்  பற்பல  ஆண்டுகள் இனிதே  வாழ்ந்தாள் !.

  =                                        சுபம்.

     



   
      

       
 
 

       



Popular posts from this blog

MERCHANT OF VENICE ( in THAMIZH)

                                                        MERCHANT OF  VENICE                                                PLAY  BY  SHAKESPEARE  ( 1600) TALE     RETOLD    BY  MARY  LAMB ( 1800) ( Tales  from Shakespeare) Adaptation/ Translation  in Thamizh  (   தமிழ் ) by RSR =============================== This  is  the  tenth  tale   in the  proposed  10  tales. ------------------------------------------------------ ------------------------------------------------ INDEX TO THE OTHER TALES  IN THAMIZH AT https://shakespeare4tamils.blogspot.com/p/index-page.html original play by the BARD http://www.opensourceshakespeare.com/views/plays/plays.php http://www.opensourceshakespeare.com/views/plays/playmenu.php?WorkID=merchantvenice ------------------------------------------- The  original  text  of  the  tale by Mary Lamb  is at https://comediesmarylamb.blogspot.com/2020/02/merchant-of-venice.html?view=flipcard ------------------------------------------------- Name

ALL IS WELL THAT ENDS WELL

                     ALL'S  WELL THAT  ENDS WELL PLAY  BY  SHAKESPEARE  ( 1600) RETOLD  BY MARY LAMB  (1800) ADAPTED AND TRANSLATED  BY  RSR IN THAMIZH ========================================= COPY RIGHT  MATERIAL. ========================================== https://comediesmarylamb.blogspot.com/2020/03/alls-well-that-ends-well.html?view=flipcard                                                நல்லதே  வெல்லும் விதேஹ   நாட்டின்   மன்னன் , கீர்த்திசேகரன்..    தனது ஆருயிர்   நண்பன் ஜெயதேவன்   எதிர்பாராத விதமாக   இளம் வயதிலேயே   பிரிந்து விட்டதை   நினைத்து ,,   ஜெயதேவனின்   மகனை அரசவைக்குக் கொண்டு    வந்து   அங்கு ஒரு    முக்கிய   பதவியில்   அமர்த்த நினைத்து ,    அவனை   அழைத்து    வர , மிகவும்   அனுபவமிக்க , பண்பாளன் , கோமான்    சுதர்சனசேனனை பிரயாகை   நகருக்கு அனுப்பி     வைத்தான்.       ஜெயதேவனின்    மகன் பெயர்    விக்ரமசேனன்..   நல்லவன் தான்   .   எனினும் தனது    உயர்குலப்   பெருமை பற்றி   சற்று    கர்வம்    கொண்டவன்..   அவன் அன்னையின்   பெயர்   அனசூ

AS YOU LIKE IT (THAMIZH)

                                                                                                               Play by Shakespeare  ( 1600) Retold by  Mary Lamb   (1800)          ( Tales from Shakespeare) Adaptation/translation  by RSR  in thamizh  தமிழ்     AS YOU LIKE IT original english tale  at https://comediesmarylamb.blogspot.com/2020/02/as-you-like-it.html?view=flipcard ------------------------------------------------------ Fil m  with  subtitles at    h ttps://www.youtube.com/watch?v=u9hTxzLHU3I -------------------------------------------------------------------------- INDEX TO THE OTHER TALES  IN THAMIZH AT https://shakespeare4tamils.blogspot.com/p/index-page.html original play by the BARD http://www.opensourceshakespeare.com/views/plays/plays.php http://www.opensourceshakespeare.com/views/plays/playmenu.php?WorkID=asyoulikeit                                உ ங்கள்  விருப்பம்       நீலாம்புரம்  மிகவும்  அழகான  சிறிய ராஜ்யம்..  அடர்ந்த காட்டுப்   பகுதிய