Skip to main content

TWELFTH NIGHT



TWELFTH NIGHT
DELIGHTFUL  PLAY  BY  SHAKESPEARE  ( IN 1600) AS  RETOLD  BY
   MARY LAMB  (IN 1800)
-----------------------------------------------------------
THAMIZH ( ADAPTATION) TRANSLATION  BY  RSR    BEGUN  ON 1-3-2020

e
https://comediesmarylamb.blogspot.com/2020/02/twelfth-night_12.html?view=flipcard



===================================
 தூது சென்ற  பூச்செண்டு 
-------------------------------------------------
INDEX  TO   POSTS  HERE   .>  https://shakespeare4tamils.blogspot.com/p/index-page.html
 

    கூர்ஜர     நாட்டின்  பிரபு  , தனசேகரனுக்கு ,  இரண்டு  குழந்தைகள்.  ஒரு புதல்வன்  விஜயசேகரன் .  ஒரு   புதல்வி  .புஷ்பமஞ்சரி   .  இருவரும் , இரட்டைப் பிறவிகள்!   விஜயன்  ஒரு  சில  . நிமிடங்கள் முந்திப்   பிறந்தவன். . இருவரும்  ஒரே  தோற்றம் கொண்டவர்கள். அவர்கள் அணிந்திருந்த  ஆடை  மட்டுமே    அவர்களை வேறு  படுத்திக்  காட்டும்.  இருவரும்   அற்புதமான     வனப்பு மிக்க வடிவம் கொண்டவர்கள்.

      ஒரே நேரத்தில் பிறந்த அந்த  இரட்டையர் , ஒரே  நேரத்தில்,  உலகை விட்டு    அகலவும்   .  நேர்ந்திருக்கலாம்!   நல்ல நேரம்., பிழைத்துக் கொண்டார்கள்.

 அவர்களுக்கு     பதினாறு    வயது   ஆகியிருந்தபோது , ஒரு   கப்பலில்  பயணித்துக் கொண்டிருந்தனர்   .  திடீரென்று , ஒரு   புயல்     வீசியது.    கப்பல் ஒரு  பாறையில்   மோதி    உடைந்து விட்டது.    அனைவரும்  கடலில்  தூக்கி   எறியப்பட்டனர் .
நல்ல    வேளையாக   கப்பலின்  மாலுமி     , ஒரு   சில  படகோட்டிகளுடன் , ஒரு   படகில்   தப்பி  , கரை   சேர்ந்தான்..  அந்தப் படகில்   புஷ்பமஞ்சரி யையும்   காப்பாற்றிக்  கரை  சேர்த்தான்.
          தனது   சகோதரன் விஜயன்   இல்லாமல்,  தான்   மட்டும்  இவ்வாறு   பிழைத்ததில்  ,  மஞ்சரிக்குத்  ,   துயரம்  தாள  முடியவில்லை .  தனது  தமையன்  விஜயனை  நினைத்து  கண்ணீர் விட்டு   கதறி   அழுதாள்..
 மாலுமி       " தாயே! !    நீ அழாதே!  உன்  அண்ணன்  , ஒரு  பாய்மரத்துணியைப்   பிடித்துக்   கொண்டு  மிதந்து   போனதை  நான் பார்த்தேன்.   ,அதனால் .அவன்  எப்படியும்   பிழைத்துக் கொள்வான்.    .நாங்களும்   தேடி ,  எப்படியாவது அவனைக்  கொண்டுவந்து   விடுவோம் "  என்று    ஆறுதல் கூறினான்.
   இதனால் , மஞ்சரி     ஓரளவு   நம்பிக்கை   கொண்டாள் .
           அவள் , மாலுமியிடம், " இது   எந்த நாடு?   நானும் என்  அண்ணனும்
 சிந்துதேசம் காணப்   புறப்பட்டு   வந்தோம். இப்போது  எங்கே  இருக்கிறோம்? " என்று  கேட்டாள் . அதற்கு   அந்த மாலுமி
  " இப்போது  நாம்  அந்த   நாட்டில் தான் இருக்கிறோம்.". என்றான். " உங்களுக்கு   இங்கு   யாரையும்  தெரியுமா ? அதன்   அரசன்  யார்?  என்று   கேட்டாள் --    "  நான்  இங்குதான் பிறந்தவன். இந்த  நாட்டின்   தலைநகரம்  சிந்துபுரம் ,  இங்கிருந்து   அருகில்  தான்    உள்ளது. அதன்  அரசன்   பிரதாப்சிம்மன் ,  மிகவும்    நல்லவர்." என்றான் அந்த மாலுமி.

அதற்கு  மஞ்சரி " ஆமாம் ! என்  தந்தையும்   அவரைப்பற்றி என்னிடம்    
   அடிக்கடி   .கூறியுள்ளார்.  அவருக்கு    கல்யாணம்   ஆகிவிட்டதா ? இல்லை  என்று  என்   தந்தை கூறினார். " என்று  கேட்டாள்   மஞ்சரி!

   " இன்னும்  இல்லை ! "

 "   அது ஏன்!  !புகழ் மிக்க மாமன்னர் !   நல்லவர்  ! !இருந்தும் ஏன் கல்யாணம் செய்யாமல்  இருக்கிறார்"

    "   அதுவா!    சிந்துபுரத்தில்,  சிந்துஜா என்று  ஒரு  அழகான    உயர்குடிப் பெண்
  மீது  அவருக்கு   ஒரே பித்தம் ,   ஒரு சில   மாதங்களுக்கு முன்  அவளது  தந்தையும் , இன்னும்  சில  மாதங்கள்   கழிந்து அவளது  அண்ணனும்  இறந்து , போனார்கள். , துக்கம்  அனுசரிப்பதால்,அவள்  எந்த  ஆணையும்     பார்ப்பதோ பேசுவதோ   கிடையாது"      என்று ஊரில் பேசிக்கொள்கிறார்கள். "

  இது  கேட்ட  மஞ்சரி,   தானும் தனது  அண்ணன்  பிரிவால்  ,வாடுவது  கொண்டு,    சிந்துஜா  மீது  மிகவும்  மரியாதை கொண்டாள் ,

  " அப்படி  ஒரு  நல்ல    .  பெண்ணிடம்  , பணியாற்ற    எனக்கு  வாய்ப்பு  கிடைக்குமா?  நீங்கள்  ஏற்பாடு செய்ய முடியுமா " என்று கேட்டாள்   மஞ்சரி.

   " மிகவும்  கஷ்டம்.  அந்த  சீமாட்டி   யாருடனும்  பேசுவதில்லை!  ராஜா  கூ ட  அவளை  காண  அனுமதி  இல்லை!" என்றான்  மாலுமி.

     அப்போது  மஞ்சரியின்  மனதில்  ஒரு  திட்டம்  தோன்றியது!  ஆண்  வேடம் போட்டுக் கொண்டு , அந்த  ராஜாவிடம் ,  ஒரு  பணியாளாக   சேர்ந்தால் என்ன என்று  தோன்றியது.   மாலுமி   நல்லவன்  என்று  அவள்  ,துணிந்து , அவனிடம்  தனது   ஆவலைக்   கூறினாள் .   மாலுமி  அந்த   திட்டத்தை  ஆதரித்தான். .  அதனால்,  மஞ்சரி, அவனிடம்  பணம் கொடுத்து,  தனது  அண்ணன்   எந்த  உடையில்  இருந்தானோ அதே மாதிரி   உடைகள்   வாங்கிக்கொண்டு  வருமாறு வேண்டிப்  பணித்தாள் .   மாலுமியும் சிறிது  நேரத்தில், அந்த   உடைகளைக்  கொண்டுவந்தான்.    மஞ்சரி   உடனே  அவற்றைப்  பெற்று , உடை   மாற்றிக்கொண்டு , தோன்றினாள் .    மாலுமிக்கே  மிகவும்  வியப்பாகி   விட்டது.    மிக மிக  அழகான மிடுக்கான   அழகனாக மஞ்சரி  மாறியிருந்தாள் !  அவளுடைய அண்ணன்  விஜயன்   போல  அப்படியே  இருந்தாள் .
      மாலுமி க்கு  அரண்மனையில் சில   நண்பர்கள்   இருந்தார்கள்,   அவர்களின் சிபார்சினால் ,   அரசன்  முன்பு  , இளைஞன்  வினய விதேஹன்  (" மஞ்சரி")
     என்ற  பெயரில் தோன்ற வாய்ப்பு    கிடைத்தது.  அரசன் பிரதாபனுக்கு , அந்தப்   பையனின்  பால்   வடியும் முகத்  தோற்றமும் நடை  உடை  பாவனையும் மிகவும்   பிடித்துவிட்டது.    மஞ்சரி  விரும்பியபடியே  , பிரதாபன் (வினயன்   என்று   நினைத்துக் கொண்டு) .அவளைத் தனது   பணியாளாக வேலைக்கு  எடுத்துக் கொண்டான். 
-----------------------------
 ஒரு  சில நாட்களிலேயே ,  பிரதாபனுக்கு முதன்மையான ஆப்தனாக ,  வினயன் ஏற்கப்பட்டுவிட்டான்.  தனது  மனதில்  இருந்த   எண்ணங்கள்,  கவலைகள்   அனைத்தையும் , அரசன்  பிரதாபன் , வினயனிடம் தயக்கமின்றி  . மனம் விட்டுப் பகிர்ந்து  கொண்டான்.   அந்த  ஊரின்  சிந்துஜா    என்ற  ,பேரழகியை   தான்   உயிருக்கு  உயிராக நேசிப்பது   ,பற்றியும் , தான்  எவ்வளவோ   தடவை அவளுக்கு   தனது  நேசத்தை தெரியப்படுத்தியும்,  அவள்   தன்னை பார்க்கக்கூட  விரும்பாமல் ,  வெறுப்பது பற்றியும்  மனம்  நொந்து ,வினயனிடம்  ,    அரற்றும்போது , வினயன்  அரசன்  கூறுவதை  அனுதாபத்துடன் கேட்டது  ,  அரசனுக்கு   ஓரளவு மன  ஆறுதல்   தந்தது.

 அதனால் ,பிரதாபன் , நண்பர்களோடு   பேசுவது,  அறிஞர்களோடு  விவாதிப்பது,  வீர  விளையாட்டுகள், போன்ற   அனைத்தயும்  துறந்து   சோகமான பிரேம சங்கீதம், போன்று    பெண்களுக்கு  உண்டான   மென்கலைகளில்  மூழ்கி , துயரத்தில்  திளைத்தான்.. எந்நேரமும்   அரசன், விநயனுடன்  இவ்வாறு   பொழுதைக்   கழிப்பது, அரண்மனையின்   பிரபுக்களுக்கு சற்றும்   சம்மதமில்லை. இந்தப்பையன்    நமது   அரசனுக்கு    சரியான துணையாளன்  .அல்ல  என்று  வருத்தப்  பட்டார்கள்.           
-----------------------------------------------------------------------------------
     எப்போதுமே , மிகவும் இளம் பெண்களுக்கு  , கம்பீரமான ஆண்  மகனின்  அத்யந்த  நட்பு ,  மிகவும் ஆபத்தானது!   இவ்வாறு  பிரதாபன் ,சிந்துஜா  பற்றி தனது  ப்ரேமயைக் கூறக் கூற,   நமது மஞ்சரியின்  (விநயன் ) மனமும்  , பிரதாபன்  மீது   அதுபோலவே  ப்ரேமையில் உருகியது.  இவ்வளவு  கம்பீரமும், குணமும்   கொண்ட பிரதாபனை  ,  வேண்டாம்  என்று  ஒதுக்கும்  சிந்துஜா மீது  அவளுக்கு  கோபம் ,கோபமாய் வந்தது.. இருந்தாலும்  அதுவும் ஒரு   வகையில்  அவளுக்கு  நல்லதுதானே!..
-------------------
ஒரு  நாள்,பிரதாபனி டம்,  மஞ்சரி ( வினயன் ), " அரசே!  நீங்கள்  சிந்துஜாவிடம்   கொண்டுள்ள  அதே  அளவு  அன்புடன் வேறு ஒரு  பெண்  உங்களை   நேசித்தால், நீங்கள்  அவளுக்கு  என்ன பதில்  தருவீர்கள்? " என்று  தனது   மனதை  ஓரளவு கோடிட்டுக் காண்பித்தாள். அதற்கு  பிரதாபன்,  "  நான் சிந்துஜாவை நேசிக்கும்  அளவுக்கு , எந்த  ஒரு  பெண்ணும்  , யாரிடமும்  நேசம் கொள்ள  முடியாது. . "  என்றான்.
பிரதாபன் மீது  மிகுந்த   மரியாதை   கொண்டிருந்தாலும், இந்த  விஷயத்தில்,   அவன்  கருத்து தவறு  என்றும்,   தான் ( மஞ்சரி) பிரதாபன் மீது  கொண்டுள்ள  நேசம்,  அவன் சிந்துஜாவிடம்  கொண்டுள்ள நேசம் போலவே  தீவிரமானது. என்று   மனதிற்குள்  நினைத்துக் கொண்டு ,  மஞ்சரி  ( வினயன்) "  ஆம் அரசே!  எனக்குத்  தெரியும் "   என்றாள்
     அரசன்  " உனக்குத் தெரிந்ததைக்  கூறு  , கேட்கிறேன் "  என்றான்.
. "  பெண்களுக்கும் , உளமார ஒரு   ஆடவனை நேசிக்க முடியும்   என்ப தை
 எனது     அனுபவத்தில் நான் கண்டுள்ளேன்! எனது   தகப்பனாரின் பெண்  , நான்  ஒரு   பெண்ணாக இருந்தால் உங்களை   எப்படி  நேசிப்பேனோ  அதேபோல  ஒருவனை   நேசித்தாள் . என்று  நன்கு  அறிவேன்." என்றாள் ,
  "   அப்படியா! அவ்ளுக்கு  அப்புறம் என்ன  நேர்ந்தது? " என்று   கேட்டான் அரசன்.
"ஒன்றுமே இல்லை அரசே! அவள்  தனது   நேசத்தை வெளிப் படுத்தவே  இல்லை! ஒரு  மலர்  மொட்டுக்குள் ,வண்டுப்புழு  போல , அவள்  தனது   நேசத்தையும் நிராசையையும் , தன மனதிற்குள்  ஆழமாகப் புதைத்துக்  கொண்டு  ,  அவளது சந்தன  முகத்தில், கவலையின் செவ்வரிகள்   தோன்ற    சிந்தனை செய்யும் அறிஞன்  சிலை  ,  துயரத்தைப்  பார்த்து  முறுவலிப்பது போல  காலத்தைக் கடத்தினாள் . 
  " அவள்  பின்னர்  ,  சோகத்தில்  இறந்து விட்டாளா ? " என்று  அரசன்    வினவியபோது, வினயன் ( மஞ்சரி)   விடையளிக்காமல்   மழுப்பலாக ' எனக்கு அதற்கு   மேல்  தெரியவில்லை""   என்று  நழுவிக் கொண்டாள் / .

--------------------
அந்த   நேரத்தில், சிந்துஜாவுக்கு கடிதம் கொடுத்து  , பிரதாபன  அனுப்பியிருந்த பணியாளன்  திரும்பி வந்து  " அரசே! சிந்துஜா  சீமாட்டியை பார்க்க முடியவில்லை.  'என்  தந்தையும் ,  தனயனும்   இல்லாத   இந்த துக்க  உலகில் ,  இன்னும் ஏழு   ஆண்டுகளுக்கு , என்   முகத்தை , சந்திர, சூர்ய, மின்மினித்  தாரகைகளும்   கூடக்  காணப் போவதில்லை.! என் முகத்திரையின்  பின்னால்,  வழிந்தோடும்  கண்ணீரையே  ,  தண்ணீராக்கி ,  தோட்டத்தில் வளரும்  செடி  கொடிகளை வளர்ப்பேன்.  வேறு    ஒன்றும் என்றும் வேண்டேன்'   என்று பதில்  கூற சொல்லி விட்டார். ' என்றான்.
   "  ஆஹா !  இறந்து  மறைந்து போன  தமயன்பால்  இவ்வளவு  பிரியம் கொண்டுள்ள இந்தப் பெண்ணின்  மனதில், இடம்  பிடிக்கக்   கொடுத்து வைத்த     யுவனுக்கு  எவ்வளவு  பெரிய   பிரேமயோகம்  காத்திருக்கிறது!. "
என்று நினைத்து    பிரதாபன் ,  இப்போது  வினயனிடம்
      "  சிறுவர்!  நான் என்  மனதின்  ரகசியங்கள்  அனைத்தையும்  உன்னிடம் கூறியுள்ளேன்.  நீ , சிந்துஜா  சீமாட்டியை  எப்படியாவது  நேரில்  பார்த்து ,  எனது  எல்லை  கடந்த  நேசத்தை  அவளுக்குத்  தெரியப்படுத்து. .  அவளது    மாளிகையின்  முன்னால்   அகலாது  நின்று  அடம்   பிடித்து , உள்ளே  சென்று அவளை நேரில்  கண்டு  பேசு.. .  இதற்கு  நீதான் மிகவும் பொருத்தமானவன்.  உன்னைப்  போன்ற  சிறுவன்   சொன்னால் அவளது   மனம்  இளகிவிடும்."
 என்றான். அப்போது  வினயன்  " அரசே!   சீமாட்டியைப் பார்த்து  நான்     எப்படிப் ,பேசி என்ன  சொல்ல வேண்டும் ? " என்று கேட்டான் .
"உன்னைப் போன்ற  மிடுக்கனுக்கு   நானா     சொல்லித்   தர   வேண்டும்?
நீயே   தருணதிற்கு ஏற்ற மாதிரிப்  பேசி  எடுத்த      காரியத்தை  சாதித்து  
என்னைக்  காப்பாற்று ! "
---------------------------------------
1pm-4-2-2020
  பாவம் மஞ்சரி!   தனது மனதில் நிறைந்த  மன்னனுக்கே வேறொரு பெண்ணை மணம் முடிக்கத்  தூது செல்ல நேர்ந்த  அபாக்கியம்--   அவளுக்கு நேர்ந்த   துன்பம்.!   இருந்தும்  அவள் தனக்கு  இடப்பட்ட   கட்டளையை  நிறைவேற்றப்   பின்வாங்கவில்லை..
-----------------
      சிந்துஜாவின் பணிப்பெண்  அவளிடம் வந்து, " எஜமானி!  வீட்டு  வாசலில்  ஒரு  பையன் வெகு நேரமாக நின்று கொண்டு,  தங்களைப் பார்க்க  வேண்டும்  என்று  பிடிவாதமாகக்  கூறுகிறான்.   தங்களுக்கு  உடல்நிலை  சரியில்லை என்று சொன்னேன்.  அவன் 'அதனால்தான் பார்க்கவேண்டும்  என்கிறான்.  நீங்கள்  உறங்குகிறீர்கள் என்று  சொன்னேன்   அதற்கும் அவன் 'அதனால்தான் பாரக்கவேண்டும் என்கிறான். . நான் என்ன  சொன்னாலும் அவன்   போவதாக   இல்லை. உங்களை  எப்படியும் பார்த்தே   ஆகவேண்டும் என்று   கங்கணம்  கட்டிக்கொண்டு  வந்திருப்பான்  போல ,தோன்று கிறது  . அவனிடம் நான்  என்ன சொல்ல? " என்று  கேட்டாள் 

பிரதாபனிடம்  இருந்துதான்  அந்தப் பையன்  வந்திருப்பான்  என்று  யூகித்து, அவன்  என்னதான் சொல்கிறான் என்று   பார்ப்போம் என்று   நினைத்து , சிந்துஜா பணிப்பெண்ணி டம், " அந்தப்   பையனை   வரச்சொல்." என்று   சொல்லி தனது  முகத்தை  அன்னிய ஆடவர்   கண்ணில்  படாமல் இருக்க   முகத்திரை கொண்டு     மறைத்துக் கொண்டாள்  ,

மஞ்சரி  (வினயன் ), முடிந்த  அளவு ஒரு  ஆண்  பிள்ளையின்  தோரணை கொண்டு, அரசவைக்  கோமான்களின் மொழியில் " ஒளி  வீசும்  அற்புத  அழகு மிளிரும்  சீமாட்டியே!  இந்தச்  செல்வமிகு   இல்லத்தின்,  தலைவி தாங்கள்  தானா  என்று    கூறுங்கள்.   நான் பல  நாட்கள்  சிரமப்பட்டு  தயாரித்து  வந்துள்ள  எனது  உரையை  மற்றவர்கள்  கேட்க  வைத்து  வீணாக்க  நான்  விரும்பவில்லை. '. என்றான்
 " நீங்கள்   எங்கிருந்து வருகிறீர்கள்? ' என்று  .சிந்துஜா  கேட்டபோ து " நான்  மனப்பாடம் செய்து கொண்டுவந்துள்ள   உரையில்  அந்தக்  கேள்விக்கு  பதில் எதுவும்  இல்லை.!     என்றாள்
. "  நீங்கள்  ஒரு   கோமாளி நடிகனா? ' என்றாள் சிந்துஜா.

  " இல்லை.!  இருந்தும், நான்  இப்போது தோன்றுவது  உண்மையான நான் இல்லை.!  . ( ஆண்  வேடத்தில் இருந்தாலும்  தான்  ஒரு  பெண்   என்பதை மஞ்சரி  இவ்வாறு  குறிப்புணர்த்தினாள்).

ஆனால்  சிந்துஜாவுக்கு அதெல்லாம்  ஒன்றும்  புரியவில்லை.) .
மீண்டும் மஞ்சரி (  வினயன்)  சிந்துஜாவிடம் 'இந்த   இல்லத்தின்
செல்வத் தலைவி   நீங்கள் தானா  என்று  கேட்டாள்.

"ஆமாம் " என்றாள்  சிந்துஜா.

 " நான்   தங்கள்   அழகு முகத்தைக்  காண  அனுமதியுங்கள்"  என்றான் வினயன். !
  வேடிக்கை   தொடங்கிவிட்டது!

 தூதுவனாக வந்த   வினயனை  பார்த்த உடனேயே , அவனிடம்  தீராத  மையல் கொண்டாள்   அந்த  சிந்துஜா என்ற   தையல்!
  எந்த  ஆணுக்கும்  தனது  முகத்தைக்    காட்டமாட்டேன் என்று அவள்   கொண்டிருந்த  விரதம்  தளர்ந்து விழுந்தது.
" உங்களை   அனுப்பிய அந்த   நபர்    இவ்வாறு என் முகத்தைக் கண்டு  வரச்சொன்னாரா ? என்று   கூறிக்கொண்டு ,  தனது   முகத்திரையை
  விலக்கி  தனது  அழகு  முகத்தை   வினயனுக்கு காண்பித்தாள்.  " நான்   அழகாக இருக்கிறேனா? "  என்றும்  வினயனிடம் வினவினாள்.
--------------------


       அதற்கு வினயன் " மிகவும் சிறப்பாக இயற்கை  வடித்துள்ள வியத்தகு   வதனம். . சந்தனமும், செவ்வரியும் இணைந்து    இழையோடுகின்றன. இத்தகைய எழில்  முகத்திற்கு சந்ததி  இல்லாமல்   செல்லும் பெண்ணின் நெஞ்சம் ,  இரக்கமே  இல்லாத  உள்ளம்." என்றான்  வினயன் .

  "  அப்படி எதுவும்   நேராது!  இதோ  பட்டியல் இடவா?   வெளிறிய இரண்டு இதழ்கள் , இரண்டு  ஒளியிழந்த  கண்கள்   அவற்றின் இமைகள் , ஒரு   கழுத்து, ஒரு   இடை! போதுமா!
என்   அழகைப் புகழவா  உங்களது  பிரபு உங்களை   இங்கு  அனுப்பினார்?"

  " தங்களின்   அழகைக்  கண்டு கொண்டேன். நீங்கள்  பெருமை   கொண்டவர் என்பதையும்    தெரிந்து கொண்டேன்.  எனது  பிரபு  தங்கள்   மீது  உயிரையே    வைத்துள்ளார். நீங்கள்  அழகு   ராணியாகவே இருந்தாலும், அவரது  கண்ணீர்   கலந்த வழிபாடு, இடி போன்ற மன  ஓலம், நெருப்பு துருத்தி போன்ற பெருமூச்சு -  இவையனைத்தும் கலந்த  அவரது  நேசத்திற்கு 
மதிப்பளிக்க வேண்டாமா? தகுந்த பரிசு  தரத்தான்  வேண்டும். "

    "  இளைஞரே!  மிகவும்  நன்றாகத்தான் உங்களது  பிரபுக்காக நீங்கள்  வாதாடுகிறீர்கள்!   ஆனால், அவருக்கு என்   மனம் தெரியும். அவர்  சற்றும் குற்றமற்ற நற்குடியில்  பிறந்த சிறந்த பண்பாளர்,  நன்கு கற்றறிந்தவர், சிறந்த வீரர்   என்று  அனைவரும்   அறிவர்.    நானும் அறிவேன். இருந்தும்  என் மனம்   அவரிடம் ஈடுபாடு   கொள்ளவில்லை!  என்ன !செய்வது ?  இந்த  பதிலை  அவர்   நெடுநாட்களுக்கு முன்பே   பெற்றுள்ளார். "

   " நான்  எனது   பிரபுவாக இருந்தால், உங்களது   மாளிகையின்  முன்னர் ஒரு   குடில்  அமைத்துக்  குடியேறுவேன்.. எந்நேரமும் உங்கள்  பெயரை  ஜெபிப்பேன்.  சிந்துஜாவின் கல்மனம்   பற்றி  பாடல்கள் இயற்றி   அவற்றை  நள்ளிரவிலும்  இசைத்துக் கதறுவேன்.   காற்றும், வானமும் சிந்துஜா சிந்துஜா என்று  எதிரொலிக்கச்செய்து, இவன் மீது  இரக்கம் கொண்டு   ஏற்றுக்கொள் ,ஏற்றுக்கொள்  , "  என்று   கூறச் செய்வேன்.  " என்றான் வினயன்

   சிந்துஜா சிரித்துக் கொண்டு "  நீங்கள்   அதுவும்   செய்வீர்கள்.அதற்கு   மேலும் செய்வீர்கள்! ...உங்கள்  குடும்ப  பின்புலம் என்ன? "  என்றாள்
   " பெரிதாக ஒன்றும்  இல்லை  . எனினும் , நான் நல்ல  குடும்பத்த்வன்."
என்றாள்  மஞ்சரி! (  வினயன்.)
5pm
-----------------------------------------
 சிந்துஜாவுக்கு , வினயனுக்கு  விடை தர  மனமே இல்லை.  இருந்தாலும்,"  இளைஞரே! நீங்கள்   உங்களது பிரபுவிடம்   சென்று " இது  போல  மீண்டும் மீண்டும்,  ஆள் அனுப்பி  வீண் முயற்சி  செய்ய   வேண்டாம்.,எனக்கு  சிறிதும் இஷ்டமில்லை. என்று  தெளிவாக சொல்லிவிடுங்கள். .  அவர்  அதை  எப்படி எடுத்துக் கொள்கிறார்  என்பதை  எனக்குத்  தெரிவிக்க மீண்டும்  வாருங்கள்" என்று  சொல்லி  ,  பிரியாவிடை  கொடுத்தாள் .  வினயன்    அவளை "கல்நெஞ்சக் கட்டழகி "  என்று   பட்டப்   பெயர் கொடுத்து  கூறி விடை பெற்றான் (ள்).   . அவன்  சென்ற  பின்னர், அவன் கூறிய  வார்த்தைகளை சிந்துஜா மீண்டும்   நினைவு  கொண்டு '   'தூது  வரும் அரசவை ஊழியர் என்றாலும்,  அவருடைய முகம்,  நடை  , பேச்சு    எல்லாமே, அருமையாக  உள்ளன!. பிரதாபன்   இவர் போல  இருந்தால்   எவ்வளவு நன்றாக  இருந்திருக்கும் " என்று  கூறிக்கொண்டாள்.
------------------------
  " ஏழு  ஆண்டுகள் ,விரதம்  காப்பதாக  நீ கூறிய  வேண்டுதல்  இன்று  எங்கே மறைந்தது? இவ்வளவுதானா  உன்  மனோதிடம்?என்று   அவளது மனசாட்சி ஓரளவு   உறுத்தினாலும், ' ஆசை வெட்கம்  அறியாது'  என்பதற்கேற்ப ,  அவள்  வினயனை வளைத்துப்போட்டுத்    தன்னவானாக்கத் 
  துடித்தாள்..  தனது பணிப்பெண்  ஒருவளை  அழைத்து  ' இப்போது  இங்கு  வந்த ஆள்,  அரசர் கொடுத்து   அனுப்பிய இந்த  மோதிரத்தை  இங்கு  விட்டுச்    சென்றுவிட்டார்  .நீ அவரிடம்    இதை கொடுத்துவிடு என்று   ஒரு மோதிரத்தை   கொடுத்து  அனுப்பினாள்    .  பிரதாபன்  அப்படி   மோதிரம் எதுவும்   கொடுத்து   அனுப்பவில்லை  என்பதால். ,   மஞ்சரிக்கு ,  சிந்துஜாவின் மனம்  ஓரளவு  புரிந்துவிட்டது. "  பாவம்!  நான்  பிரதாபனை  நினைத்து  ஏங்குவது போல  ,  இந்தச்    சீமாட்டியும்  என்னை நினைத்து  ஏங்கவேண்டியது    தான்  பிராப்தம் போலும்' என்று   நினைத்துக் கொண்டு  , மஞ்சரி (வினயன்   ) . அரண்மனைக்குச்   சென்று  பிரதாபனிடம்  நடந்த  விஷயங்கள்  அனைத்தையும்  அப்படியே  கூறினாள் .(  மோதிர  விஷயம் தவிர) !
     ஆனாலும், பிரதாபனுக்கு  நம்பிக்கை  தளரவில்லை. . " பையா! நீ   நாளைக்கும்     அவளிடம் மீண்டும்  சென்று  மீண்டும்  எனது  நெஞ்சம்  
கெஞ்சுவதை   அவளுக்கு  எடுத்த்துக் கூறு.. நீ  மீண்டும் மீண்டும்  முயற்சி    செய்தால், அவளது   மனதை மாற்ற      முடியும்." என்றான். 
      பிறகு " வினயா!! நான்   நேற்று ஒரு  பாட்டு   கேட்டேன்.    அது  சாதாரண  பாட்டுதான் என்றாலும்,    கிராமப்புறத்தில்,வயது   முதிர்ந்த மணம்  முடியா  ஆண்கள்  பாடுவது போல   நெஞ்சை  நெருடுவதாக   இருந்தது
---------
"  மரணமே! மரணமே !.. விரைந்து வா!
      காட்டில் என்னைப்    புதைக்க விரைந்து  வா!
   உயிர் மூச்சே ! உயிர் மூச்சே !  பறந்தோடு! 
இரக்கம்  இல்லா ,ஒரு   கல்நெஞ்சம்
என் இதயத் துடிப்பை நிறுத்தி  விட்டது!
எனது   கல்லறையில்,  யாரும்  மலர்  தூவ வேண்டாம்.
எனது   நண்பர் யாரும்   என் நினைவைப் போற்றவேண்டாம்.
-
இந்தப்  பாட்டை கேட்ட போது ,  வினயனின் முகம்  மிகவும் வாடியதை   அரசன் பிரதாபன்   கண்டு  வியப்புற்றான்!
" பையா! உன்  முகம்  ஏன்  வாடியது?  இந்தச்  சிறு  வயதில்  உனக்கு இது  போன்ற  பிரேம  அனுபவம் உண்டா? "
   "  உண்டு ,அரசே! "
" அப்படியா! வியப்பாக இருக்கிறது! அவள்  எப்படி  இருப்பாள்? "
 " தங்களைப்   போலவே இருப்பாள்! " என்றான்  வினயன் ( மஞ்சரி)
பிரதாபனுக்கு   வேடிக்கையாக இருந்தது!  இவ்வளவு  சிறு பையன்,  என்னைப்   போல  வயதில்  மூத்த  சற்றே கருநிறம்   கொண்ட  பெண்ணை  நினைத்து இவ்வளவு    வருந்துகிறான்!" என்று  நினைத்துக் கொண்டான்.
-----------------
வினயன்  அடுத்த  ,நாள் , சிந்துஜாவின் மாளிகைக்கு சென்றபோது , அவனுக்கு பிரவேசிப்பதில் சிக்கல் ஏதும்   நேரவில்லை.  பணியாட்களுக்கு
வீட்டுக்   காரருக்கு வேண்டியவர்   யார் என்று  அறிவது  இயல்பு.
தங்களது  எஜமானி ,   எந்த  அழகிய வாலிபருடன்  பேசுவதில்,   விருப்பம்   அதிகம் என்று  அறிவதில்  கெட்டிக்  காரர்கள்.  மிகவும்  மரியாதையுடன் ,  வினயன்  சிந்துஜாவின்  அறைக்கு  அழைத்துச்  செல்லப்  பட்டான்.
 வினயன்  மீண்டும்   பிரதாபனைப்  பற்றி பேசத்  தொடங்கியவுடன்,  சிந்துஜா " அது  பற்றி   பேசவேண்டாம். நீங்கள்  தங்களைப்  பற்றி    பேசினால்,அது  எனக்கு   வானுலக   கீதம் போல்   இனிமையாக இருக்கும்" என்றாள் .  இதை  விட   வெளிப்படையாக ஒரு  உயர்குடிப் பெண்  தனது   நேசத்தை எப்படி  வெளிப்  படுத்த முடியும்?     நாணம் அனைத்தையும்  ஒதுக்கி  வைத்து,  சிந்துஜா ,  வினயனிடம் தனது   பிரியத்தை வெளிப் படையாகவே  சொல்லி   இனிமையாகப் பேசினாள் .   வினயனுக்கு தர்மசங்கடமாகப் போய்விட்டது.  "  'இது  போலப்  பேசாதீர்கள். நான்   இனி இங்கு  வருவதாக இல்லை.  ஒரு   நாளும் ஒரு  பெண்ணை  நான்   மணக்கப் போவதில்லை"  என்று  கூறி   வெளியேறிவிட்டான் . ( மஞ்சரி)
-----------
வீட்டின்  வெளியே வினயன்     வந்தவுடன்,  வேறு ஒரு   வாலிபன்
அசூயன் ,  அவனை  வாள்   சண்டைக்கு வர   சவால் விட்டான்.  சிந்துஜாவின்   மேல்  மையல்   கொண்ட  எத்தனையோ  இளைஞர்களில்   அவனும்  ஒருவன் . யாரையுமே  பார்க்க அனுமதிக்காத  சிந்துஜா ,  வினயனை   மட்டும்  அனுமதித்ததில்  அவனுக்கு  கடும்   பொறாமை.!  இப்போது  வினயன்   என்ற  மஞ்சரி  என்ன   செய்வாள் பாவம்!  தான்  ஒரு  பெண்  என்று   உண்மையைக்  கூறிவிடலாமா என்று   கூட அவள்  சில  நொடிகள்   யோசித்தாள் .   அதற்குள், நல்ல  வேளையாக வேறு  ஒரு    ஆண்மகன்   குந்தலன் , அசூயனிடம் "   அந்தச்   சிறுவனிடம் சண்டைக்குப்  போகிறாயே  !  அதற்கு  முன்னர் , முடிந்தால்  என்னுடன்  பொறுதிப்பார்."  என்று  கூறி   மஞ்சரியைக் காப்பாற்ற   முன்வந்தான். ஆனாலும்,  அதற்குள்   காவலர்கள்  வந்து   பல  ஆண்டுகளுக்கு  முன்னால் அவன்   செய்திருந்த    குற்றத்திற்காக  குந்தலனைக்  கைது  செய்து கொண்டு  போய்விட்டனர்! 
 அப்போது குந்தலன்,  வினயனை   நோக்கி  "  உன்னைத்  தேடி வந்து   இவ்வாறு நான்   சிக்கலில்    மாட்டிக்கொண்டேன். நான்   உன்னிடம்  கொடுத்த பணப்  பையை  எனக்குக்   கொடு " என்றான்.   வினயனுக்கு ஒரே    திகைப்பு..  இவனிடம்  நாம் பணப்பை  ஒன்றும்  என்றும் வாங்கவில்லையே!  இவன் யார்?  ஏன்   இவ்வாறு   கேட்கிறான் என்று   புரியாமல்   நின்றாலும், சற்று முன்னர்   தன்னைக் காப்பற்றிய   அவனுக்கு   பிரதி  உதவியாக  தன்னிடம் அப்போது   கையில்  இருந்த   சிறிதளவு   பணத்தை , குந்தலனிடம் கொடுத்தாள் .  குந்தலன் மிகவும்   கோபத்துடன் '  டே!
 விஜயசேகரா !  நன்றி கெட்ட  பையன் நீ!  உனக்காக நான்  எவ்வளவு  கஷ்டப்பட்டேன்!  என்னையே  ஏமாற்றுகிறாயே! உனக்கு   தண்டனை  கிடைக்காமல் போகாது  என்று  வைது  கொண்டு  அங்கிருந்து  சென்றான். 
தனது   அண்ணன்  பெயரைக் கேட்ட  மஞ்சரிக்கு  , குந்தலன்   தன்னை  விஜயன் என்று  நினைத்துக்   கொண்டு  திட்டிக் கொண்டு  போகிறான் என்று   புரிந்து விட்டது.  தனது  அண்ணன்   உயிருடன்  இருக்கிறான் என்று  இதன் மூலம் அறிந்து கொண்டு  அவள்  மிகவும்   ஆனந்தம்  அடைந்தாள்.. அந்த    இடத்தை  விட்டு   விரைவாக  ஓடித்  , தப்பிச்  சென்றாள் .
---
   அப்போது    பார்த்து, குந்தலன்  தேடி  வந்த  விஜயசேகரன்  அங்கு வந்து    .சேர்ந்தான்.
  யார்  இந்தக்  குந்தலன்? அவனுக்கு  விஜயசேகரனை    எப்படித் தெரியும்?  அவன்  எப்போது   விஜயனுக்கு  பணப்பை கொடுத்தான்?   
 இவற்றை   முதலில் தெரிந்து கொண்டு  நாம்  கதையைத் தொடருவோம்!!
------------
 கப்பல்  உடைந்து   ,போனவுடன் , விஜயசேகரன் , ஒரு  பாய்மரத் துணியைப்  பிடித்துக் கொண்டு   கடலில்  மிதந்து  போனான் என்று   மாலுமி  கூறியிருந்தார்   அல்லவா!  உண்மைதான்.  அப்போது  ஒரு  கப்பல்   அவனைப் பார்த்து  ,காப்பற்றியது.. கப்பல்  படைத்  தலைவன் குந்தலன்.  அவனுக்கு  விஜயனை  பார்த்தவுடன் மிகவும்  பிரியமாகிவிட்டது. அவன்  விஜயனை   எங்கு  சென்றாலும்  தன்னுடன்  கூடவே  அழைத்துக் கொண்டு   செல்வது  வழக்கம் .  அவ்வாறு ,அவன்  சிந்து   தேசத்தின் கடல்  கரையில் வந்து  சேர்ந்தான்.  நாட்டிற்குள்   அவனால்  வர முடியாது.  ஏனெனில்  சில 
 மாதங்களுக்கு   முன்,அவன்  ஒரு  கப்பல்    சண்டையில், அரசன்  பிரதாபனின்   உறவினன்  ஒருவனைக் காய.ப் படுத்திவிட்டான்.  அதனால் அவன்   கரையோர  விடுதி  ஒன்றில் தங்கி கொண்டு,  விஜயனிடம் பணப்   பையைக் கொடுத்து,  " விஜய்! உனக்கு  வேண்டியமட்டும்  இந்தப்  பணத்தை  பயன்படுத்திக்கொள். என்னால்  நகரத்துக்குள் வர முடியாது.   வந்தால்  அரசனின் ஆட்கள்  என்னைப்   பிடித்துக் கொண்டு  போய்   விடுவார்கள். அதனால்  நீ மட்டும்  இந்த  அழகான  நகரை சுற்றிப்  பார்த்து  விட்டு  மீண்டும்   விரைவில்  இங்கே இந்த   விடுதிக்கு வந்து   விடு என்று   அன்புடன்  அனுப்பி    வைத்தான்.  வெகு  நேரம்  ஆகியும் , விஜயன்   திரும்பி வந்து    சேராததினால், மிகவும்   கவலை கொண்டு   அவனைத் தேடி  வந்து  ,  சிந்துஜாவின்   மாளிகை முன்னால்    மஞ்சரியைப்   பார்த்து  அவளை  விஜயன்  என்று  நினைத்துக்    காப்பாற்றி ,  காவலர்களிடம்  சிக்கிக் கொண்டான் . 
---------------
இப்போது  அங்கு  வந்த விஜயனை  ,  அந்த அசூயன் ,  வினயன்   என்று  நினைத்து,  " சிக்கிக் கொண்டாயல்லவா! இந்தா   பெற்றுக் கொள்   என்று  கன்னத்தில்   ஓங்கி அறைந்தான். . விஜயன்  ஒன்றும்   கோழை அல்ல! அவனும்  தன   பங்கிற்கு  அசூயனை ஓங்கி  ஒரு அடி கொடுத்தான் .  மீண்டும்  பயங்கர  சண்டை  நடந்தது.  அப்போது  ,  தன  வீட்டின்  முன்னால்   இவ்வாறு  நடந்த   சண்டையை என்ன   தகராறு என்று  காண சிந்துஜா வீட்டின்  வெளியே  வந்து  தனது   ஆருயிர்  அன்பன்  வினயனை   எவனோ ஒரு  வெறியன்  தாக்குவது  கண்டு    வெகுண்டு, அசூயனை  ஆட்கள்  கொண்டு  விரட்டி  அடித்து விட்டு,  விஜயனை  மிகவும்  அன்புடன்  தனது   இல்லத்திற்குள்  கூட்டிக் கொண்டு  சென்று   இனிமையாகப்  பேசினாள் . விஜயனுக்கு  ஒன்றும்    புரியவில்லை! அதனால் என்ன ?  இவ்வளவு  அழகான தேவதை  தன்னிடம்  வலிய   வந்து , தன்னைத்  திருமணம் செய்து கொள்ள   வேண்டும்போது , வேண்டாம்  என்று   சொல்ல அவனால்  முடியுமா?   எனவே அவனும்,    சிந்துஜாவிடம்,அன்புடன்    பேசினான். சற்று  முன்னர்  ,  தன்னுடைய அன்பு   மொழியை வெறுத்து,   அகன்ற வினயன்   இவ்வாறு  மனம்   மாறிக் கனிந்ததில்   சிந்துஜாவுக்கு  ஒரே  ஆச்சர்யம்.! ஆனந்தம்!  மீண்டும்  அவன்  மனம்  மாறி  விடுவானோ என்று    பயந்து, அவள்  அவசரம்  அவசரமாக ஒரு  தேவாலய  குருக்களை   வரவழைத்து,,  உடனடியாக  மோதிரம்  மாற்றித்  திருமணம்   செய்து   கொண்டாள்   .  விஜயன்  ,   குந்தலனைப் பார்த்து  இந்த  மகிழ்ச்சியான செய்தியைப்   பகிர்ந்து கொள்ள  வேண்டும் என்று  நினைத்து,  ' இன்னும் சிறிது  நேரத்தில்  வந்து   விடுகிறேன் என்று   சிந்துஜாவிடம்  கூறி , குந்தலனைத் தேடித்   சென்றான்.  .
----------------------------
அந்த    நேரத்தில், பிரதாப  சிம்மன்  , சிந்துஜாவின்  வீட்டிற்கு   அருகில் வந்து  சேர்ந்தான்.   அவனுடன்   வினயனும் (  மஞ்சரி)   இருந்தான். காவலர்கள்,  குந்தனை , அரசன்  பிரதாபன்  முன்னர்  கொண்டு   வந்தார்கள்.
குந்தலன்  அங்கு,  வினயனைப்  ( மஞ்சரி)   பார்த்ததும் " அரசே!  இந்த   பையனை நான்   இரண்டு  மாதங்களாக கடலில்  இருந்து காப்பற்றி  கண்ணும்   கருத்துமாய் , வளர்த்து  வந்தேன்.  இப்போது இவன்  எனது  பணப் பையை  மோசம்  செய்து  என்னை   ஏமாற்றி விட்டான்!  "  என்று    புலம்பினான்..
அப்போது  சிந்துஜா வீட்டின்  முன் புறம்    தோன்றினாள் . 
" ஆஹா! என்  அதிர்ஷ்டம்!  ஒரு  தேவதை  இங்கு   பிரசன்னமாகி விட்டாள்! "  என்று  பிரதாபன்  பரவசம் அடைந்து, குந்தலன்   சொன்ன  எதையும்  காதில்  வாங்கும் மன  நிலையில்  இல்லை. 
அரசன்  பிரதாபனுக்கு  கடும்   கோபம்   வந்துவிட்டது. "  என்ன உளறுகிறாய்! இந்த   சிறுவன் இந்த  இரண்டு  மாதங்களாக  என்னுடன்   இணை  பிரியாமல் இருந்து .பணி  செய்கிறான்.    காவலர்களே!இந்தப்   பொய்யனை கொண்டு  போய்   சிறையில்  தள்ளுங்கள் என்று  உத்தரவிட்டான்
----------
 வெளியே  வந்த  சிந்துஜா ,  அரசனைக் கண்டு  கொள்ளவே இல்லை.!  அவள்  ,  அரசனுடன் இருந்த  வினயனிடம்   ( மஞ்சரி)  மட்டும்  ,  பிரியம்  பொங்கும் பார்வையாலும், வார்த்தையாலும்  ,   உரையாடினாள் . இப்போது  அரசனுக்கு , வினயன்  மீது  தாங்க முடியாத  கோபம் வந்து  விட்டது.  தான்  தனது   தூதுவனாக  அனுப்பிய வினயன்  தன்னை  ஏமாற்றி,  தனது  இதய  தேவதையின் மனதைத்   திருப்பிவிட்டான் என்று   முடிவு செய்து  "   துரோகம்  செய்த அற்பனே ! என்னுடன்  வா! உனக்கு  கடும்  தண்டனை   காத்திருக்கிறது! " என்று  கூறிப்   புறப்பட்டான். அப்போது,  சிந்துஜா
 வினயனிடம் (  மஞ்சரி)  " நீங்கள் என்னை   விட்டுவிட்டு  எங்கே   போகிறீர்கள்.? போகாதீர்கள்.! என்று  மன்றாடினாள்  "   அதற்கு
வினயன், " என்  மனைவியை விட  நான்   நேசிக்கும்  அரசனோடு
 போகிறேன்  "என்றான்
-----------------------------------------------------------------------------------
இப்போது  சிந்துஜா  ஓலமிட்டு  எனது  கணவனைக்   காப்பற்றுங்கள், என்று   புலம்பி  தனக்கு திருமணம்    செய்வித்து  வைத்த  குருக்களை உடனடியாக   வரவழைத்து ,  நடந்தவற்றை  கூற  சொன்னாள்..  அவரும் திருமணம் நடந்த   உண்மையை அரசனுக்கு  கூறினார்.     வினயன்( மஞ்சரி) ' நான்   அவனில்லை '  என்று  எவ்வளவு   கூறியும்  யாரும் நம்புவதற்கில்லை. 
 நொந்த   மனதுடன்,அரசன்  பிரதாபன்,  வினயனிடம்  "  துரோகம்  செய்த    பையா!   ஒழிந்து போ !   இனி  ஒரு நாளும்  என்  கண்ணில்  முழிக்காதே! '  என்று  வெறுத்து   அகலும் நேரத்தில்,  ஒரு   அதிசயம் நிகழ்ந்தது. 
-
இப்போது  விஜயன்  திரும்பி  வந்து,  சிந்துஜாவிடம்  தனது   மனைவி என்று  அன்புடன்  பேசினான்.    வினயனையும்,விஜயனையும்  ஒரே  நேரத்தில், ஒரே  இடத்தில், ஒரே   ஆடையுடன் , ஒரே  முகத்துடன்,  ஒரே   உருவத்துடன்  கண்ட  பிரதாபனுக்கும்,   சிந்துஜாவுக்கும் , இந்த   அதிசய ஒற்றுமை    புரிந்தது.   சிந்துஜா , வினயன்   என்ற  பெண்ணை  இவ்வளவு   நேசித்த தனது   பிரமையை நினைத்து  சற்று    ,வெட்கம் உற்றாலும்,   அதே    சாயலில்  மஞ்சரியின் அண்ணன்   விஜயனை   மணந்தத்தில்   பெரு  மகிழ்ச்சி கொண்டாள்
---------------------
தன்னுடன்    இத்தனை நாள்  சேர்ந்திருந்து, தனக்கு  தூது  சென்ற  வினயன்   என்பவன்   விஜயனின் தங்கை  மஞ்சரி  என்று   உணர்ந்த  மன்னன் , ஆண்  உடையில்  இருந்த  வினயனை  இப்போது  வேறு  கண்ணோட்டத்தில்  பார்த்து,  அவள்  முன்னாட்ட்களில்   பூடகமாக கூறிய   நேசச்   செய்திகளை புரிந்து  கொண்டான்..
   " பையா! உன்  பெருமையையும் , ப்ரேமத்தையும்  இப்போது நான்   நன்கு புரிந்து   கொண்டேன்!  என்னைத்  திருமணம்  செய்து கொண்டு  என்   வாழ்க்கையை  இனிமையாக்குவாயா?"  என்று  மஞ்சரியிடம்   கேட்டான்.
 கேட்கவும்  வேண்டுமா? என்ன. ! .
    உடனே சிந்துஜா , "  எனக்குத்  திருமணம்  செய்வித் த  குருக்கள் இப்போது  இந்த   மாளிகையில் தான்   உள்ளார். அவர்   முன்னிலையிலேயே மஞ்சரியின்   திருமணத்தையும்  உடனடியாக நடத்தி   விடுவோம் என்று   அனைவரிடமும்  கூறி   ஒப்புதல்  பெற்று   அவ்வாறே  நடத்தியும்   வைத்தாள்


  இவ்வாறு, கடலில்  கப்பல்   விபத்தில்  தொடங்கிய   உடன்பிறப்புகள
விஜயசேகரன்  என்ற    அண்ணன் ,  வினய விதேஹன்  என்ற   பெயரில்  உலவிய  புஷ்பமஞ்சரி  என்ற   அவனது அன்புத்   தங்கை, இருவரின்  வாழ்க்கையும் ,  இனிய  வாழ்க்கைத்துணையுடன்  பயணத்தைத்  தொடர
 நல்வாழ்த்துகளுடன்   நாமும் விடை  பெறுவோம்.
 
                                                      சுபம்

  

  


 









       
         
     

Popular posts from this blog

MERCHANT OF VENICE ( in THAMIZH)

                                                        MERCHANT OF  VENICE                                                PLAY  BY  SHAKESPEARE  ( 1600) TALE     RETOLD    BY  MARY  LAMB ( 1800) ( Tales  from Shakespeare) Adaptation/ Translation  in Thamizh  (   தமிழ் ) by RSR =============================== This  is  the  tenth  tale   in the  proposed  10  tales. ------------------------------------------------------ ------------------------------------------------ INDEX TO THE OTHER TALES  IN THAMIZH AT https://shakespeare4tamils.blogspot.com/p/index-page.html original play by the BARD http://www.opensourceshakespeare.com/views/plays/plays.php http://www.opensourceshakespeare.com/views/plays/playmenu.php?WorkID=merchantvenice ------------------------------------------- The  original  text  of  the  tale by Mary Lamb  is at https://comediesmarylamb.blogspot.com/2020/02/merchant-of-venice.html?view=flipcard ------------------------------------------------- Name

ALL IS WELL THAT ENDS WELL

                     ALL'S  WELL THAT  ENDS WELL PLAY  BY  SHAKESPEARE  ( 1600) RETOLD  BY MARY LAMB  (1800) ADAPTED AND TRANSLATED  BY  RSR IN THAMIZH ========================================= COPY RIGHT  MATERIAL. ========================================== https://comediesmarylamb.blogspot.com/2020/03/alls-well-that-ends-well.html?view=flipcard                                                நல்லதே  வெல்லும் விதேஹ   நாட்டின்   மன்னன் , கீர்த்திசேகரன்..    தனது ஆருயிர்   நண்பன் ஜெயதேவன்   எதிர்பாராத விதமாக   இளம் வயதிலேயே   பிரிந்து விட்டதை   நினைத்து ,,   ஜெயதேவனின்   மகனை அரசவைக்குக் கொண்டு    வந்து   அங்கு ஒரு    முக்கிய   பதவியில்   அமர்த்த நினைத்து ,    அவனை   அழைத்து    வர , மிகவும்   அனுபவமிக்க , பண்பாளன் , கோமான்    சுதர்சனசேனனை பிரயாகை   நகருக்கு அனுப்பி     வைத்தான்.       ஜெயதேவனின்    மகன் பெயர்    விக்ரமசேனன்..   நல்லவன் தான்   .   எனினும் தனது    உயர்குலப்   பெருமை பற்றி   சற்று    கர்வம்    கொண்டவன்..   அவன் அன்னையின்   பெயர்   அனசூ

AS YOU LIKE IT (THAMIZH)

                                                                                                               Play by Shakespeare  ( 1600) Retold by  Mary Lamb   (1800)          ( Tales from Shakespeare) Adaptation/translation  by RSR  in thamizh  தமிழ்     AS YOU LIKE IT original english tale  at https://comediesmarylamb.blogspot.com/2020/02/as-you-like-it.html?view=flipcard ------------------------------------------------------ Fil m  with  subtitles at    h ttps://www.youtube.com/watch?v=u9hTxzLHU3I -------------------------------------------------------------------------- INDEX TO THE OTHER TALES  IN THAMIZH AT https://shakespeare4tamils.blogspot.com/p/index-page.html original play by the BARD http://www.opensourceshakespeare.com/views/plays/plays.php http://www.opensourceshakespeare.com/views/plays/playmenu.php?WorkID=asyoulikeit                                உ ங்கள்  விருப்பம்       நீலாம்புரம்  மிகவும்  அழகான  சிறிய ராஜ்யம்..  அடர்ந்த காட்டுப்   பகுதிய