Skip to main content

COMEDY OF ERRORS IN TAMIL

ஆள் மாறாட்ட  வேடிக்கைகள் !
ATTEMPTED THAMIZH TRANSLATION OF
COMEDY  OF  ERRORS  BY  SHAKESPEARE
AS  RETOLD  BY  MARY LAMB.
 ( 27-2-2020
by
RSR 

INDEX  TO   POSTS  HERE   .>  https://shakespeare4tamils.blogspot.com/p/index-page.html
 




https://comediesmarylamb.blogspot.com/2020/02/comedy-of-errors.html 

 ==================================================================

==========================================================
       ரத்னபுரியும் ,  கனகபுரியும் அடுத்தடுத்த  நாடுகள்தான் !   ஆனால் , அந்த   நாடுகளுக்குள்   கடுமையான விரோதம் இருந்தது. !.  கனகபுரி நாட்டின் குடிமகன்    ரத்னபுரிநாட்டில்   காணப் பட்டால் , ஒரு  கோடி  தண்டனைப்  பணம் தந்த பிறகுதான் விடுவிக்கப் படுவான்.   அவ்வாறு   தர முடியவில்லை என்றால் உடனடியாக   தலை  கொய்யப்பட்டு  .தண்டிக்கப் படுவான். 

      இவ்வளவு  கடுமையான சட்டம் இருந்த  , ,ரத்னபுரியில் , கனகபுரியைச் சேர்ந்த  செல்வந்த வணிகன்  .கனககுப்தன்   ,  வந்து   சிக்கிக்கொண்டான்.  படை வீரர்கள் அவனை  ,  ரத்னபுரியின்  அரசன்   ரத்னசேனனிடம்   கொண்டு சென்றனர். அரசன்  கனககுப்தனிடம்  " ஏனப்பா! இந்த நாட்டின் சட்டம் உனக்குத்  தெரியாதா ?  இங்கே  எதற்கு வந்தாய்?  சட்டப்படி தண்டனைப் பணத்தை  செலுத்தி,  உனது  நாட்டிற்கு போய்விடு "   என்றான். 
       கனககுப்தன்  "  அரசே!  இவ்வளவு   பெரிய  தொகைக்கு ,   வெளியூர்க்  காரன் நான்    எங்கே செல்வேன்!  என் வாழ்க்கையே  துன்பமயம்!   எனவே ,நான்   மரணத்தை  கண்டு   அஞ்சவில்லை..   அதுவே எனது   துன்பத்தில் இருந்து   எனக்கு விடுதலை   அளிக்கும்  " என்று  புலம்பினான். 
       அது கேட்டு  அரசன்,  "  சட்டத்தை  மீற  எனக்கும்   கூட  உரிமையில்லை.
 உன் துயரக்கதையைக்   கூறு ! நாங்கள்  கேட்கிறோம் ! " என்றான். 
     கனககுப்தன்  " என்  துயரக் கதையை   விவரிப்பது மரணத்தை  விட கொடிய  தண்டனை.!   இருந்தும்  கூறுகிறேன்" என்று  தொடங்கினான்.
================================================================
   "  பல      வருஷங்களுக்கு  முன்னால்    நான் எனது   மனைவியுடன் , இனிமையாக வாழ்ந்து வந்தேன்.   வியாபார   சம்பந்தமாக , ஒரு  வெளி  நாடு  செல்ல   நேர்ந்தது.  எதிர்பாராமல்    நாடு  திரும்ப   தாமதமாகிவிட்டது.  உடனே நான்  எனது  மனைவியைக் , கப்பலில்  பயணித்து     என்னுடன் சேர்ந்து  கொள்ள  தகவல்   .அனுப்பினேன்.  அவளும் வந்து    . சேர்ந்தாள் ..  அவள்  அப்போது நிறைமாத   கர்ப்பிணி.. ஒரு  சத்திரத்தில்  தங்கியிருந்தோம். 
   அவளுக்கு இரட்டைக்   குழந்தை பிறந்தது.     அழகான ஆண்   குழந்தைகள். .
 அதே  நேரத்தில்,அதே  சத்திரத்தில்,  ஒரு  மிகவும் ஏழைப் பெண்ணும்   இதே  போல  இரண்டு ஆண்  குழந்தைகளை இரட்டைப்    பிறவியாக பெற்றாள் .   நான் மனம் கனிந்து,  அந்த  இரண்டு  ஆண்   குழந்தைகளையும் , எனது  ஆண்    குழந்தைகளின்     உதவிக்கு   பிற்காலத்தில்  பயன்படுவர் என்று  கருதி     விலைக்கு    வாங்கினேன்...  ஒரே ஆச்சர்யம்! எனது  இரண்டு   பையன்களும்   அச்சாக ஒரே  மாதிரி இருந்தார்கள்.  அது  போலவே நான்   வாங்கிய இரண்டு   குழந்தைகளும்  அச்சாக ஒரே மாதிரி  இருந்தார்கள்.  
        எனது   மனைவி  ஊருக்குத் திரும்ப   வேண்டும் என்று  ஒவ்வொரு  நாளும்    , கூறிக்கொண்டிருந்தாள் ..    ஒரு     நாள்  ,ஒரு  பாய்மரக கப்பலில்   நாங்கள் புறப்பட்டோம்.     எங்களது கெட்ட   நேரம் ,அப்போது  ஒரு   பயங்கரமான    சூறாவளி    வீசியது.. கப்பல்   ஓட்டிகள், பயந்து  போய் , ஒரு  படகில்   ஏறி எங்களைத்   தனியாக   விட்டு விட்டு , தப்பி   விட்டனர்.   கப்பல்  புயலில்  சிக்கி உடைந்து விட்டது.     வேறு வழி   இல்லாமல்,  நான்  ஒரு  பாய்மரக  கம்பத்தின் ஒரு  முனையில், எனது    இளைய மகனையும்  இன்னொரு முனையில்,  அவனது  உதவிக்கார    சிறுவனையும்  கட்டினேன்.  எனது   மனைவியிடம் அதே  போல  இன்னொரு   பாயமரத்தில்  இன்னொரு  மகனையும், அவனது   உதவிக்கார  சிறுவனையும் கட்ட.ச் சொன்னேன் .  என்னிடம்  இருந்த சிறுவர்கள்,  சற்றே   .இளையவர்கள். என்  மனைவியிடம் இருந்த சிறுவர்கள்,  சற்றே மூத்தவர்கள். (  சில நிமிடங்கள்!).  நானும் , எனது மனைவியும்   எங்களது  குழந்தைகளும்  கடலில்   .தத்தளித்தோம்.   என் கண்  முன்னாலேயே என் மனைவியை  , ஒரு  பெரும்   அலை பிரித்து  , வெகு  தூரம்  கொண்டு   சென்றுவிட்டது. என்னால் அதைத் தடுக்க முடியவில்லை. 
நல்ல வேளையாக , என் மனைவியும் ,அவளுடன்  இருந்த சிசுக்களும்  , சில படகோட்டிகளால் காப்பாற்றப்  பட்டதைக்   .கண்டேன். .  என்னையும் சிறிது
நேரத்தில்     ,ஒரு வியாபாரக்   கப்பல்   மாலுமிகள்  காப்பாற்றினர். அந்த மாலுமிகள்   என்னை நன்கு   அறிந்தவர்கள். .. ஒரு  வழியாகப்  பிழைத்துக் கொண்டேன்.   ஆனால் அந்த   நாளுக்குப்  பிறகு எனது  மனைவி   பற்றி    எனக்கு  எந்த  விவரமும்  .கிடைக்கவில்லை 
    இதெல்லாம்  நடந்து   இருபத்து  .ஐந்து   ஆண்டுகள் கழிந்து விட்டன..  ஒரு  7 ஆண்டுகளுக்கு  முன் என்னிடம்  இருந்த    18  வயது இளைய 
மகன், என்னிடம்  " அப்பா!  நானும் எனது  உதவிப்  ,பையனும் சேர்ந்து   அலைந்து திரிந்து   எப்படியாவது என்   அம்மாவையும்,என்   அண்ணனையும்  
  பையனின்  அண்ணனையும் கண்டுபிடித்துக் கொண்டு   வருகிறோம்.  எனக்கு   அனுமதி  கொடுங்கள் என்று   .கேட்டான் .  எனக்கு   முதலில் மிகவும்  தயக்கமாக   இருந்தது. இவனையும்   இழந்து   விட்டால்,வாழ்க்கையில்   எதுவுமே  இருக்காது என்று    அஞ்சினேன்..   எனினும் அவன்  பல தடவை    ,கேட்டதால் ,  அரை   மனதுடன் சம்மதம் தந்தேன்.  அவர்கள்     பிரிந்து  சென்று இப்போது    ஏழு  ஆண்டுகள்    ஓடிவிட்டன,எந்த  ஒரு   தகவலும்   இல்லை.   
      கட ந்த  ஐந்து  ஆண்டுகளாக   நான்    ஒவ்வொரு நாட்டிலும்  சென்று  அவனைத்   தேடிக்கொண்டிருக்கிறேன்.  ஜனங்கள்  வாழும் எந்த   இடத்தயும் நான்  விடாமல்  சென்று  அவர்களைத்   தேடிவருகிறேன்..  கடைசியில், இங்கு   வந்து சேர்ந்தேன்.  எனது  மனைவியும்  குழந்தைகளும்   எங்கு  இருக்கிறார்கள் என்று    தெரிந்தால்  போதும் . நான்  மரணத்தை  ஏற்பதில் ஒரு   தயக்கமும் இல்லை"   .என்று  முடித்தான்.

     அது  கேட்ட  அரசன்  ரத்னசேனன் ,  தனது    மகனுக்காக இவ்வளவு   கஷ்டங்களை    ஏற்ற    கனககுப்தன்   மீது   இரக்கம் கொண்டு, "  சட்ட  விதிகளை என்னால் மீற  முடியாது.  ஆனால்   உனது நல்ல  குணத்திற்காக , தணடனை   நிபந்தனையை  ஒரு     நாள்    தள்ளி வைக்கிறேன்.   நீ   அதற்குள், யாரிடமாவது தண்டனைப்   பணத்தை  பெற்று  விடுதலை அடையலாம்'.
.என  தீர்ப்பளித்தான்.  
. இதனால் கனககுப்தனுக்கு  என்ன   லாபம்?    அவனுக்கு  ரத்தினபுரி  நகரில்  யாரையுமே  தெரியாது.  !  யார்   அவனுக்கு இவ்வளவு  பெரிய   தொகை  தந்து 
 உதவ  வருவார்கள்?  இவ்வாறு  மனக்கிலேசம்  கொண்ட  கனககுப்தனை  ,   காவலர்கள்  சிறையில் கொண்டு  போய்   அடைத்தார்கள்.    
======================================================
     ஆனால், எந்த    இளைய மகனைத்   தேடி, கனக குப்தன் , இந்த சிக்கலில்   மாட்டிக்  கொண்டானோ அந்த  மகன் அந்த   ஊரில்  தான்  அப்போது இருந்தான்.!  அவன்  !மட்டுமல்ல   அவனது அண்ணனும்   அதே ஊரில் தான்  இருந்தான்.,!    
   மூத்த மகன்  பெயர் 'ஹேமகுப்தன்'. .அவனது  உதவிக்காரன் பெயர் சகாயன்   
 இளைய  மகன்  பெயர்  'அனுகுப்தன்'.   அவனது உதவிக்காரன் பெயர் அனுஜன் . ''
     கனக குப்தனிடம்   வளர்ந்தவர்கள் ,   , அனுகுப்தனும் , அனுஜனும் .
---------------
     கனக குப்தனின்  மனைவியைக்   காப்பாற்றிய   மீனவர்கள்,,  அவளிடம்   
இருந்த இரண்டு குழந்தைகளையும்   , ரத்னபுரியின்   புகழ்பெற்ற தளபதி      வீரசேனனுக்கு     .விற்றுவிட்டனர் .
  பாவம்!  கனக  குப்தனின்  மனைவி  எல்லாம்  இழந்து    தவித்தாள்.
    தளபதி  வீரசேனன்  ,  ரத்னபுரி   அரசனின்   மாமன். !  ஒருநாள்,  வீரசேனன்  தனது  அரசனின்  அரண்மனைக்கு  ,   ஹேமகுப்தனையும் ,  சகாயனையும்   அழைத்துக்கொண்டு போயிருந்தான்.  எப்படியோ,  ரத்னசேனனுக்கு   ஹேமகுப்தனை  மிகவும்  பிடித்துவிட்டது.   இந்த  இரு  சிறுவர்களும் இந்த   அரண்மனையிலேயே இருந்து  பணி புரியட்டும்  என்று  கூறிவிட்டான்.  எனவே  சிறுவயது  முதல்,  ஹேமகுப்தனும், சகாயனும் அரண்மனையிலேயே  வளர்ந்தார்கள்.  ஹேமகுப்தன்  சிறந்த  வீரன்.  ஒரு  சமயம்  , ரத்னசேனன்  எதிரிகளால்  தாக்கப் பட்டபோது,    திறமையாக சண்டை போட்டு,      ரத்னசேனனை   காப்பாற்றினான்.   அதுமுதல் ,   ரத்ன  சேனனுக்கு  ,  ஹேமகுப்தன்  மேல்  அபார .பிரியம் ஏற்பட்டுவிட்டது.  
  ரத்னபுரி    நாட்டின்   செல்வம்  மிக்க  இளம்பெண்   குஞ்ஜலகுமாரி  க்கு     , மணம்  முடித்து வைத்து    தனது  ராணுவத்தில்  உயர் பதவியும்   கொடுத்து  மகிழ்ந்தான்.   சகாயனும் அங்கேயே   பணியாளனாக  தொடர்ந்தான்.
---------
    கனககுப்தன் , ரத்னபுரிக்கு   வந்த  அதே   நாளில் , அவனது  இளைய  மகன்  
 அனுகுப்தனும், வந்து  சேர்ந்தான்!   அப்போது  ஒரு  நல்லவன்  ,   
அனுகுப்தனிடம்  "   நீ  கனக்புரியில்  இருந்து  வந்தவன் என்று   யாரிடமும் சொல்லி   விடாதே!  நேற்றுதான்,உங்கள்  ஊர்  ஆள்   ஒருவன் பிடிபட்டு  இப்போது    சிறையில்  இருக்கிறான்  '  என கூற , அனுகுப்தன்   தான் 
 மலயநாட்டு   பிரஜை  என்று   காவல்வீரர்களிடம்  கூறி  தப்பிக் கொண்டான் .

   அனுகுப்தன்   தனது    உதவியாள ன்   அனுஜனிடம்  பணப்பை யைக்   கொடுத்து உணவு  விடுதியில்  சாப்பாடு  ஏற்பாடு  செய்ய  .    அனுப்பிவிட்டு,  தனது தாய், மற்றும் அண்ணன    பற்றி மிகவும் கவலையுடன் 
தெருவில்  நின்று  கொண்டிருந்தான்..  அப்போது   ஹேமகுப்தனின்   உதவிக்காரன்   சகாயன், அங்கு வந்தான். " ஏன் திரும்பி வந்து  விட்டாய்?" என்று  கேட்டான். (   வந்தது  அனுஜன்  அல்ல , என்று  அனுகுப்தனுக்கு
தெரியவில்லை .  ) .   அப்போது  , ஸஹாயன் "   உங்கள்     மனைவி    '  .  சமையல்  மிகவும்  ஆறிப்  போய்விடும், எனவே   விரைவாக  வீட்டுக்கு வந்து உணவருந்தும்படி  உங்களிடம் கூறச் சொன்னார்கள்  " என்றான்.
  ( ஸஹாயனுக்கு , தான்   பேசுவது  ஹேமகுப்தனிடம் அல்ல , என்று 
   .தெரியவில்லை !------அதிசயமான  உருவ  ஒற்றுமை -காரணம்!).

அனுகுப்தன்  அவனிடம்     " நான்    கொடுத்த  பணப்பை  எங்கே "  என்று  கோபமாக கேட்டான.   தனது  யஜமான்  , வேடிக்கை செய்வதாக எண்ணி , சகாயன் "  அதெல்லாம்  அப்புறம்.! உங்கள்  மனைவி  வரச்   சொன்னபடி
" .முதலில்  நீங்கள் வீட்டுக்கு  வாருங்கள்.! உங்கள்  மனைவியின்  , தங்கையும்  காத்துக் கொண்டு இருக்கிறார்கள் .சாப்பிட்டுக்    கொண்டு  இந்த
 மாதிரி  கேலி  பேசலாம்."  என்றான்   ஸஹாயன் .
  "   மனைவியாவது !    மண்ணாவது !     கிண்டலா  செய்கிறாய்?
  எனக்கு   ஏதடா  மனைவி ? பணம் எங்கே  என்று  ,கேட்டால்  
'மமனைவி ,   துணைவி என்று  உளறுகிறாயே ' என்று     அவனை  அடித்து  துவைத்தான்....  சஹாயன்    பயத்தில் ஓடிச்    சென்று , ஹேமகுப்தன் 
மனைவியி டம்  " அவர் எதோ  கோபத்தில் இருக்கிறார்.  வர மாட்டேன்  .எனக்கு   யாரும் மனைவி   இல்லை என்று   சொல்கிறார்! என்று   . சொல்லி விட் டான் .

    குஞ்சலாவுக்கு   கடுமையான  கோபம் வந்தது.    
.தனது    கணவன்      வேறு  யாரோ    ஒரு பெண்ணி டம்   ,  பழகித்    தன்னை 
தள்ளி வைப்பதாக   .பொறுமினாள் .
 இயல்பாகவே   குஞ்சலம்  சற்று   பொறாமைக்காரி.  எனவே  அவள்   அசூயையில்,  தனது  கணவனை  நிந்தித்துக்  .குமுறினாள் . ' ஹேமகுப்தன் அப்படிப் பட்டவன் அல்ல - தேவையில்லாமல் வருத்தப்படவேண்டாம் ' என்று  அவளுடைய  தங்கை  கூறியதை  அவள்   ஏற்கவில்லை.. 

 அனுகுப்தன்  விடுதிக்கு சென்று   அங்கு  அவனது உதவிக்காரன்  அனுஜன் பணப்  பையோடு இருந்ததைக் கண்டான் .  அப்போது  திடீரென்று ஒரு  செல்வக்குடிப் பெண் அங்கு  வந்து, அனுகுப்தனிடம் காட்டமாக சண்டை போடத்    தொடங்கினாள்."
  " அருமை  நாதா! திருமணத்திற்கு   முன்னர் என்னிடம் எவ்வளவோ  பிரியமாக இருந்தீர்களே ! இப்போது   எப்படி திடீரென்று   மாறி விட்டீர்கள்  ? நான்  அப்படி என்ன  தவறு  செய்தென்?"   என்றாள் .
அனுகுப்தனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
" அம்மணி!     நீங்கள் என்னையா இப்படிச் சொல்கிறீர்கள்? உங்களை நான் . இதுவரை  பார்த்ததே இல்லையே! நான்   இந்த  ஊருக்கு இரண்டு   மணி  நேரம்   முன்னர்தானே  வந்தேன் " என்று அனுகுப்தன் எவ்வளவோ   சொல்லியும் , அந்த பெண் (  குஞ்சலம்)  அவனை விடுவதாக  இல்லை.  வேறு வழி இன்றி அனுகுப்தன்  , வந்தது வரட்டும்  என்று    அவளது மாளிகைக்குச் சென்று   விருந்துண்டான்.   குஞ்சலம்   அவனைக்    கணவன் எனக் கொஞ்சிப் பேசினாள் . அவளுடைய  தங்கையும் அவனை    முறை வைத்துக் கொண்டாடிப் பேசினாள் . இவ்வளவும்   போதாது என்று  சமையல்காரியும்  அனுஜனை  என்  புருஷன் என்று  ஸ்பெஷலாக கவனித்தாள்   !
( 28-2-2020--11pm)
=============================================
continuing  at  9am  on 29-2-2020)-RSR====================

இவ்வாறு 'அனுகுப்தன் விருந்து' நடந்து கொண்டிருந்த போது , குஞ்சாலாவின் உண்மையான கணவன்  ஹேமகுப்தனும்,,உதவியாளன் ஸஹாயனும் வீட்டிற்கு    வந்தார்கள்..  குஞ்சலம்  பணிப்பெண்களிடம்  யாரையும் உள்ளே  விடாதீர்கள்  என்று  சொல்லி  இருந்தாள் .அதனால், பணிப்பெண்கள் , 
மரக்கதவை  திறக்கவே இல்லை . ஹேமகுப்தனை  பார்க்கக்க்கூட இல்லை.  ஹேமகுப்தனை உள்ளே  விடவில்லை. " ஏய்  பெண்களா ! நான் ஹேமகுப்தன்! உங்கள்  எஜமானன்!  கதவைத்  திறங்கள்  என்று  கதவு   உடையுமளவுக்கு ஓங்கி ஓங்கி   தட்டியபிறகும்  அவன் கை  தான்  வலித்ததே தவிர  , பணிப்பெண்கள்  கதவைத்    திறக்கவில்லை.எங்கள்   எஜமானர் இப்போது  உணவருந்திக் கொண்டிருக்கிறார்.   நீங்கள்   யாரோ? உங்கள்   புளுகுக்கு   நாங்கள் ஏமாற மாட்டோம்  என்று  சிரித்து கேலி    செய்தார்கள்..  ஹேமகுப்தனுக்கு ஒரே  குழப்பம்   ஆகிவிட்டது.  வேறு  ஒரு  ஆடவனுடன்  அவள் உள்ளே   இருப்பதில்  அவனுக்கு ரோஷம்    வந்துவிட்டது..
---------------------------
அனுகுப்தனுக்கு , குஞ்சலாவின் தங்கை  வத்சலா வை பிடித்த்தது. ஆனால் குஞ்சலாவைப்  பிடிக்கவில்லை. அனுஜனுக்கும் சமையல்காரியைப் பிடிக்கவில்லை.  ஏதாவது  சாக்கு சொல்லி   அங்கிருந்து  உடனே  செல்வதில் குறியாக  இருந்தார்கள். ' இதோ சற்று  நேரத்தில் வந்து விடுகிறேன் என்று   சொல்லிவிட்டு  இருவரும்  மாளிகையிலிருந்து  வெளியே   வந்தனர்.    
அப்போது ஒரு  பொற்கொல்லன் , அனுகுப்தனின் கையில் ஒரு  தங்க சங்கிலியைக்  கொடுத்து " ஐயா! தாங்கள்  கூறியபடி  இந்த  நகையை தயாரித்துள்ளேன் .  பெற்றுக்கொள்ளுங்கள்.  என்றான். அனுகுப்தன்  அவனிடம் 'நான்   உங்களிடம்  எப்போது  இந்தமாதிரி  நகை செய்ய ஆர்டர் கொடுத்தேன்? .  இதைக்  கொண்டுபோய்   யார் ஆர்டர்  கொடுத்தார்களோ அவர்களிடம்  கொடுங்கள்  .என்றான்.  ஆனால்  அந்த  ஆசாரி   அதைக்  காதிலேயே வாங்கவில்லை . அவசரமாகப்   போய்விட்டான்.
அனுகுப்தனுக்கு   பைத்தியம்  பிடிப்பது  போல   இருந்தது. அவன்  தன உதவியாளன்  அனுஜனிடம். "  டேய் ! உடனடியாக ,இந்த   நாட்டிலிருந்து வெளியேற வேண்டும்.  நடப்பது எதுவுமே  புரியவில்லை. ஒரே  குழப்பமாக   இருக்கிறது.  இனியும் இங்கு  இருந்தால் பெரும்  ஆபத்து வந்தாலும்  வரும். 
  நீ உடனே  சென்று   மூட்டை  கட்டி பிரயாணத்திற்கு   ஏற்பாடு  செய்! " என்றான்.   அனுஜனும் உடனடியாக   கிளம்பினான்.

    சிறிது நேரத்தில், அந்த ஆசாரியை  காவலர்கள் , "அவன் கடன் வாங்கியிருந்தான். திருப்பித்  தரவில்லை " என்று  கடன்  கொடுத்தவன்  தந்த புகாரில் ,  கைது செய்தார்கள். அப்போது   எதேச்சயாக ,அந்த  வழியே ஹேமகுப்தனும்,  சகாயனும்   வந்தார்கள்.உடனே  ஆசாரி  ஹேமகுப்தனிடம், " ஐயா ! நான்  கடன்  பாக்கி  தரவேண்டியுள்ளது.  நீங்கள்  நான்  கொடுத்த தங்க சங்கிலிக்கு    பணம்   தந்தால் , இந்தக்  கடனை அடைத்து  விடுவேன். இல்லாவிட்டால்  என்னை சிறையில்  தள்ளி  விடுவார்கள்.  உதவுங்கள் என்று  கூறினான்.  ஹேமகுப்தனுக்கு  கோபம் வந்துவிட்டது. "  உன்னிடம் எப்போது  நான்  தங்க  சங்கிலி  வாங்கினேன்?  ஏன்  இப்படிப் பொய்   சொல்கிறாய் ? என்று   கத்தினான்.  ஆசாரி  " ஏனய்யா ! சற்று   முன் தானே  உங்களிடம்  கொடுத்தேன்!  இப்படிக்கூட  பொய் சொல்வது  உண்டா? நான்  பொய்யனா ?  அல்லது நீங்கள்  பொய்யனா?" என்று  திரும்ப திரும்ப  இருவரும்   சண்டை  போட்டார்கள்.  காவலர்களுக்கு பொறுமை  தீர்ந்து   விட்டது.உங்கள்   இருவரையும் சிறையில்    போடுகிறோம். பிறகு   நீதிபதியிடம் உங்கள்   சச்சரவை தீர்த்துக்கொள்ளுங்கள்  ! என்று   கூறி   சிறையில்  தள்ளி  விட்டார்கள்.
     போகும்  வழியில், ஹேமகுப்தன்,  அனுஜனைப் பார்த்தான்.  அவன்   தனது  வேலையாள்  சகாயன்   என்று  நினைத்து  அவனிடம் " டே! நீ உடனடியாக   வீட்டுக்குப் போய்   எஜமானியிடம்  அவசரமாக  எனக்கு   பத்தாயிரம் பணம் வேண்டும்  என்று  சொல்லி  உடனே  வாங்கி கொண்டு வந்து   என்னிடம் கொடு   "என்றான்.   அனுஜன்க்கு இப்போது  குழப்பம் ! "என்னடா இது!   !இப்போதுதான்  இங்கிருந்து   தப்பவேண்டும்  கப்பல் ஏற்பாடு  செய்  என்று    சொன்னார். நானும் ஏற்பாடு  செய்து விட்டேன்.  ஆனால்  இப்போது அதே      வீட்டுக்கு  போகச்  சொல்கிறார்!.. " என்று  நினைத்துக்கொண்டு   எதோ  சொல்ல   வாயெடுத்தான்.   ஆனால்  காவலர்கள்  , ஹேமகுப்தனைக்  கொண்டு    போய்விட்டார்கள்.. அனுஜனும்,  "  வேலைகாரன்  விதி ! ஏன்  என்ன என்றெல்லாம்  கேட்காமல்  எஜமான் சொல்வதைக்  கேட்பதுதான்' ..."அந்த சமையல்காரியிடம்  மீண்டும் சிக்க பயமாக இருக்கிறது ' என்று   புலம்பிக்கொண்டு ,  குஞ்சலாவிடம் பணம்   வாங்கிக்கொண்டு  திரும்பி வந்து கொண்டிருந்தான்.  . .
       அனுகுப்தனுக்கு  இன்னமும்   பல ஆச்சர்யமான  அனுபவங்கள்   காத்திருந்தன.
ஹேமகுப்தன்  அந்த   நகரில் பெரும்புள்ளி.    அவனுக்கு   நிறைய  நண்பர்கள்,  அன்பர்கள்,   தொண்டர்கள்,  எனப்  பலர் உண்டு!  அனு குப்தன்    நடந்து   வரும்போது , அவனை ஹேமகுப்தன் என்று   நினைத்துக்கொண்டு போவோர் வருவோரெல்லாம்  வணக்கம்  செலுத்தினர். ஒரு  சிலர்  அவர்கள்    வாங்கியிருந்த கடனை   திருப்பிக்    கொடுத்தனர்.சிலர்   தங்களது  இல்லத்திற்கு வந்து  சாப்பிடக்  கூப்பிட்டனர்! சிலர்  அவன்  செய்த  உதவி களுக்கு    நன்றி   தெரிவித்தனர்.  திடீர் என்று  ஒரு  தையல் காரன்   ஒரு   விலை உயர்ந்த    பட்டுத்   துணி கொண்டுவந்து அவனது    உடல்  அளவை எடுத்துக் கொண்டு  ஒரு   அருமையான ஆடை  தயார்  செய்யப்  போகிறேன் என்றான்!
  அனுகுப்தன்  , தான்  ஒரு   வினோத  நாட்டில் வந்து  சிக்கிக்  கொண்டதாக   .  உணர்ந்தான்.   போதாக்குறைக்கு,  அனுஜன்  அங்கு வந்து  " நீங்கள்   எப்படி  பொலிஸிடமிருந்து  தப்பி வெளியே    வந்தீர்கள்? குஞ்சல   எஜமானி  இந்தப்  பணத்தை உங்களிடம்  தரக்  கொடுத்தார்கள் என்று   சொன்னான்.   அனுகுப்தன்  மேலும் குழம்பி  "  இந்த  அனுஜன்   பயலுக்கு பைத்தியம்  பிடித்துவிட்டது!  என்னை  எப்போது  போலீஸ்  பிடித்தது? இதென்ன திடீரென்று  குஞ்சல  குமாரியிடம் இருந்து  பணம் கொண்டு  வந்து   தருகிறான்?     தெய்வங்களே!   எனக்கும் பைத்தியம்  பிடிக்கும் முன்னால்   நான்  இந்த   ஊரிலிருந்து  தப்பிக்க அருள்   செய்யுங்கள் ' என  வேண்டினான். 
    
  அந்த  நேரம்  பார்த்து வேறு  ஒரு  அழகான பெண், அங்கு  வந்து,
 அனுகுப்தனிடம் " ஐயா ! தாங்கள்  தருவதாகச்  சொன்ன , தங்கச்    சங்கிலியை  தாருங்கள்   என்றாள் !  "  ஐயோ!ஐயோ!  நீங்கள்  யார்? நான்  எப்போது    உங்களுக்கு தங்கச்  சங்கிலி  தருவதாகச் சொன்னேன்? " என்று
 அனுகுப்தன் பதறினான்.  அதற்கு  அந்தப் பெண்  'என்ன  இப்படிச்  சொல்கிறீர்கள்! நீங்கள்  சற்று  முன்னால்    என்னுடன்   உணவருந்தும் போது  தங்கச் சங்கிலி    பரிசு தருகிறேன் என்று  சொல்ல  வில்லையா?" என்றாள் .  அனு குப்தன் "  நீங்கள்  யாரோ , நான்  யாரோ!  நீங்கள்  ஒரு   மயக்கும் வேஷக்காரி, " என்றான்.  அப்போது  அந்தப்  பெண்  , ' சங்கிலி தராவிட்டாலும்  , நான் தந்த  என்னுடைய  மோதிரத்தையாவது எனக்கு  திருப்பித்  தாருங்கள். " என்றாள் ! .   அனு குப்தன்   எரிச்சலும்  பயமும்  அடைந்து " உன்னிடம்  எப்போது  நான்   மோதிரம் பெற்றேன்!   அவ்வளவும் பொய் !" என்றான்.   அந்தப்  பெண்  , அவனுக்கு  பைத்தியம்  பிடித்து விட் டது  . அதனால்    தான்   சற்று   முன் நடந்ததைக்  கூட  அவனால்  நினைவில் கொள்ள  முடியவில்லை என்று   முடிவுக்கு வந்து  , குஞ்சலகுமாரி  மாளிகைக்கு   சென்று  'ஹேம குப்தனுக்கு பைத்தியம் ,  கவனியுங்கள்'  என்று   தெரிவித்தாள் .

   ( நாமும் குழம்பக் கூடாதல்லவா! உண்மையில் நடந்தது  என்ன என்று  பின் நோக்கிப் பார்ப்போம்.  . குஞ்சலகுமாரியின் மாளிகையில் உள்ளே செல்ல முடியாமல் ஹேமகுப்தன்    வருத்தத்துடனும், அவமானத்துடனும்,  சந்தேகத்துடனும்   வீதியில் வந்தபோது,  அவனுக்கு   இதுவரை  இல்லாத பழக்கமாக , வேறு  ஒரு  இளம் பெண்   வீட்டிற்கு உண்மையிலேயே  சென்று   பழகி ,குஞ்ஜலாவைப்  பழி வாங்கினால்  என்ன என்று    தோன்றியது. உடனே  அவன்  ஒரு  கேளிக்கை   விடுதிக்கு சென்று  அங்கு     மாலினி     என்ற ஒரு பெண்ணுடன்  விருந்து  உண்டு ,  அரட்டை அடித்து   சற்று   நிம்மதி  அடைந்தான்.. அந்த மயக்கத்தில்,  அவளுக்கு ஒரு  தங்கச்   சங்கிலி  பரிசாகத் தருகிறேன்  என்று  கூறினான்.  தங்கச் சங்கிலி  என்றால்  அந்தப்   பெண்ணுக்கு  பிடிக்காமல் போகுமா? அவள் , தன  பங்கிற்கு,  தனது   மோதிரத்தை ஹேமகுப்தனுக்கு  பரிசாக  கொடுத்தாள் .. அதனால்,  யார்   மீதும், மாலினி     உட்பட, குற்றமில்லை.  அனைவர் கூற்றும் உண்மைதான்).
 இதெல்லாம்   அனுகுப்தன்  எப்படி அறிவான்? )

       மாலினி    இதுபோல குஞ்சலகுமாரியைச்  சந்தித்து , " உங்கள்     கணவனுக்கு  சித்த்ப்  பிரமை பிடித்துவிட்டது   கவனியுங்கள் " என்று கூறிக்கொண்டிருந்த போது  , காவலர்களின் பாதுகாப்பில்,  ஹேமகுப்தன் அங்கு  வந்து    சேர்ந்தான்.. அதற்கு  முன்  அவன்,   தன்னைச்  சிறையில்  தள்ளிய காவலர்களிடம்,  'என்னை  என்   மாளிகைக்கு கொண்டு    செல்லுங்கள். நான்   அந்த  ஆசாரி  கேட்கும் பணத்தை  ( அவன்  எனக்கு  தங்க சங்கிலி  தராவிட்டாலும்)  தந்து விடுகிறேன்.  என்று  கூறி  அங்கு  வந்து  சேர்ந்தான்.

                     இப்போது  குஞ்சலகுமாரி  , காவலர்கள்  கேட்ட  பணத்தைக் கொடுத்து,    அவர்களை   அனுப்பிவிட்டு, தனது   வேலையாட்களைக்  கூப்பிட்டு ஹேமகுப்தனை   கட்டிப்போட்டு ,  ஒரு   வைத்தியன்  யாரையாவது உடனடியாக  வரச்  சொல்லி ஏற்பாடு    செய்தாள் .  தான்  அவனை  வெளியே  பார்த்தபோது     அவன்  தன  கணவன் இல்லை  என்று  மீண்டும் மீண்டும்  சொன்னது, சற்று  முன்  உணவருந்தும் போது  அவன்  தன  கணவன் இல்லை  என்று    சொன்னது,  மாலினி  சொன்னது   எல்லாவற்றையும் இணைத்து ப் பார்த்த்து,  கண்டிப்பாக   தனது  கணவன்  ஹேமகுப்தனுக்கு  மன நோய்  என்று  அவள்   முடிவு செய்தாள் .
-------------------------------------
   தனது ஆட்களைக்  கூப்பிட்டு  ,  ஹேமகுப்தனை  கயிற்றால் கட்டி  எங்கும்   தப்பிவிடாமல்  ஒரு  இருட்டு அறையில் போட்டுப் பூட்டி  விடக்  கூறி   அவசரமாக ஒரு   வைத்தியரைக்  கொண்டுவர ஆள்   அனுப்பினாள் . 
    ஒரு  ஐந்து நிமிஷம்  தான்  ஆகியிருக்கும்.  அதற்குள் வேறு ஒரு பணியாளன் அவளிடம்  வந்து "  எஜமானியம்மா! நம்ம எஜமானும் 
 வேலைக்க்காரப்  பையனும், எப்படியோ  தப்பித்து  வெளியே வந்து    விட்டார்கள். அடுத்த தெருவில் இப்போது அவர்கள் இருவரையும் பார்த்தேன்"  
என்று  கலவரப்படுத்தினான்.
  அதுகேட்டு குஞ்சலம் , தனது  ஆட்களைக்  கூட்டிக்கொண்டு ,ஹேமகுப்தனை மீட்டுக் கொண்டுவர  விரைந்து   வந்தாள் .  அவளுடன்  அவளது  தங்கை  வத்சலாவும் வந்தாள் .  அடுத்த  தெருவில்  ஒரு  தேவாலயக்  கன்னிமார்கள் தங்குமிடம்   இருந்தது.  அதன்  வழியே   அனுகுப்தனும், அனுஜனும் சென்று  கொண்டிருந்தனர்.  அவர்களைக்  கண்டதும்,  குஞ்சலம்  அவசரமாக வந்து  ,' "   "நாதா! உங்களுக்கு  உடல்நிலை  சரியில்லை .  வாருங்கள் .!  வீட்டுக்குப் போகலாம். '  என்று    அழைத்தாள் ..    போகாவிட்டால், அவளுடைய ஆட்கள்   பலாத்காரம்  செய்யவும்  தயாராகி இருந்தனர் போல தோன்றியது/  


--------------------------------------
    அனுகுப்தன்  மனம்  கலங்கிய நிலையில்  இருந்தான். "   காலையில், ஒரு ஆசாரி  ஒரு  தங்கச் சங்கிலியை, தான்  வேண்டாம் என்று  சொன்ன
 போதும்      இனாமாகக்  கொடுத்தான்!  அந்த  சங்கிலி   இன்னமும் எ ன் கழுத்தில்    இருக்கிறது! பிறகு   அவனைப்  பார்க்கவே முடியவில்லை!  
 இப்போதோ இந்த   குசலகுமாரி  நான்  அவள்  புருஷன் -  எனக்குப்  பைத்தியம்  என்று   கூவிக்கொண்டு   அவளது  ஆட்களுடன் என்னை  கட்டிப்போட  துரத்தி வருகிறாள்.  இந்த    ஆட்கள்,என்னை   அடித்தாலும் அடித்து  விடுவார்கள் " 
 என்று    பயந்து, அந்த  'கன்யாஸ்திரீ-   மடத்துக்குள்'  புகுந்து   கொண்டான். அவனுடன் அனுஜனும்  மடத்தில்  பதுங்கினான் . 
=====================
  இப்போது அந்த  கன்யாஸ்திரீ- மடத்தின்,  தலைவி  வெளியே  என்ன  கூச்சல்  குழப்பம் என்று   விசனப்பட்டு ,  விசாரிக்க வந்தாள்  .  அனுகுப்தன் அவளது  காலில்  விழுந்து   தனக்கு புகலிடம்   தந்து   காப்பாற்றக்    கெஞ்சினான்.அந்த   பெருமாட்டி , மிகவும்   கனிவும், அறிவும்,கௌரவமும்  கொண்ட    நல்லவள்..   அவள்  மடத்து வாசலுக்கு  வந்து  'என்ன 'விஷயம்?   என்று    குஞ்சாலாவிடம்   விசாரித்தாள்    குஞ்சலம்    அவளிடம், தனது   புருஷன் மன நிலை   சரில்லாதவர் .  வீட்டிலிருந்து தப்பி வந்து  இந்த கன்னியாஸ்திரீ   மடத்திற்குள் புகுந்துவிட்டார் ..  அவரை  வெளியே  அனுப்பி வையுங்கள்   நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். என்றாள் .    அப்போது,அந்த  தலைவி '  என்ன  காரணத்தினால உன்னுடைய  புருஷனுக்கு இந்த  மன   நோய்  வந்தது?  எதுவும்  வியாபாரத்தில் பெரும்  நஷ்டம் வந்து  விட்டதா? அல்லது  அவருக்குப்  பிடித்த  உறவினர் அல்லது   நண்பர்  யாராவது  இறந்து  விட்டார்களா?" என்று   கேட்டாள் .  அதற்கு  குஞ்சலம்   " அப்படியெல்லாம்   ஒன்றும்  இல்லை" என்றாள் . . அதற்கு  அந்த  பெருமாட்டி  " ஒரு   வேளை ,   ,வேறு  ஒரு   பெண்ணிடம் மனதைப்   பறிகொடுத்து   விட்டானா?" என்று  கேட்டாள் ..
==================
29-2-2020  -----3pm
===================
resuming at  8pm
------------------------------
 அதற்கு ,  குஞ்சலம், " அவர்  அடிக்கடி வீட்டை  விட்டு  காணாமல்   போய்விடுவார்.  எனக்கும்  அந்த சந்தேகம் உண்டு"   என்றாள் . (  உண்மையில், ஹேமகுப்தன் இவ்வாறு  அடிக்கடி  காணாமல்    போனது,   தனது மனைவி  குஞ்சலாவின் ஓயாத  சந்தேக  நச்சரிப்புதான்!!),
 இதை  யூகித்த அந்தப் பெருமாட்டி,  "  நீ  அவரிடம் இது பற்றி  பேசியிருக்க வேண்டும்" என்றாள் . .குஞ்சலம்  அப்போது "  நான் அடிக்கடி  பேசத்தான் செய்தென்" என்றாள் .
  "   அப்படியானால், நீ   எச்சரித்தது போதவில்லை போலும்.!  இன்னும்  அதிகமாக பேசியிருக்க வேண்டும். " என்றாள்   பெருமாட்டி .வேடிக்கையாக !
குஞ்சலம்  , அந்தப்   பெருமாட்டியிடம்  " நான் பேசாத  நேரமே கிடையாதம்மா !!   படுக்கையில்    தூங்கவிடாமல் பேசுவேன்! சாப்பிடும்போது  , சாப்பிட  விடாமல் பேசுவேன் !.  தனியாக  இருக்கும்போதும் இதுதான் பேசுவேன்.  மற்றவர்கள்  இருந்தாலும் இது பற்றி  மறைமுகமாக பேசுவேன்!  என்னை   விட  அழகான  பெண்ணிடம்  இவர் எப்படிப்   பழகலாம்? "  என்று நான்   சண்டை போடாத நாளே கிடையாது! என்றாள் !
    இவ்வாறு ,  குஞ்சலாவின் வாயிலிருந்தே   உண்மையை  வரவழைத்த பெருமாட்டி "   உன்   கணவரின் மன நோய்க்கு   அது தான் காரணம்.!. .  முகாந்திரம்  எதுவும் இல்லாமல்   வீண்   சந்தேகத்தில்,ஒரு  பெண்டாட்டியின்   நச்சரிப்பு , ஒரு  வெறி  நாயின்  விஷக்கடியை விட   கொடியது..  உன்னுடைய   புலம்பல்  அவரது  தூக்கத்தைக் .  கெடுத்து விட்டது.
சரியாகத்   தூங்காவிட்டால் , மூளை பாதிப்படையாமல் என்ன  செய்யும்! உண்ட உணவு , உன்னுடைய   காரமும்  சேர்ந்து  மிகவும்  காரமாகி   அஜீரணம் உண்டாக்கி  இந்தக் காய்ச்சலுக்கு காரணம்    ஆகிவிட்டது.
தனது   நண்பர்களுடன்    மகிழ்ச்சியாக   நேரம்  செலவழிக்க நீ   விடாததால்,அவர்   மனம்  சோர்ந்து மூளை    பாதிப்பாகிவிட்டது.    உன்னுடைய  பொறாமை தான் அவரது  மனநலனை கெடுத்து  விட்டது. " என்று   பொரிந்து தள்ளினாள்  அந்தப் பெருமாட்டி. !
வத்சலா , தனது   தமக்கை , கணவனிடம் என்றும் கடுமையாகப்  பேசமாட்டாள் என்று  பதில் கூறி,   குஞ்சலத்திடம் " நீ   ஏன்   மறுப்பு  எதுவும்   சொல்லாமல்  இப்படி  ஊமையாகிவிட்டாய்?" என்றாள் . ஆனால்,  குஞ்சலத்திற்கு அந்தப் பெருமாட்டி   சொன்னது    சரிதான் எனப் பட்டது.

,கடைசியில்  , குஞ்சலம் "  நீங்கள்  கூறுவது சரியாகவே  இருந்தாலும், எனது  கணவரை  என்னிடம்  ஒப்படையுங்கள். அவரை  நான்  கவனிக்க வேண்டும்" என்றாள் .  ஆனால்,  அந்தப்  பெருமாட்டி  அதற்கு    ஒப்பாமல், "  அது சாத்தியம்   இல்லை..  உடல்  நிலை  நன்கு  தேறிய பிறகு நீ  வந்து  கூட்டிக்கொண்டு  போகலாம்.  இப்போது இல்லை  "  என்று  கூறி, கன்யாஸ்திரீ    விடுதியின் கதவுகளை  மூடிவிட்டு   உள்ளே சென்று விட்டாள்
--------------------------
இவ்வளவு  மாபெரும்  குழப்பங்கள் நடந்த அந்த  நாளின் ,  கதிரவன் மறையும் மாலைப்  பொழுது  மிகவும்   நெருங்கி  விட்டது.  சூரியன்  மறைவதற்கு   முன்னால் , கோடி பணம்   தராவிட்டால், கனக குப்தன் தலை போகப்போகும்   நேரம் நெருங்கி  வந்தது.   கடைசி   நேரத்தில்,ஏதேனும்   அதிசயம்  நிகழ்ந்து,   தண்டனையிலிருந்து  கனககுப்தன்  தப்ப இடமிருந்தால்,  அதை   அனுமதிக்க , அரசன்  ரத்னசேனன்  அந்த   இடத்திற்கு வந்து    சேர்ந்தான்.  அது    கன்யாஸ்திரீ  விடுதிக்கு  மிக அருகாமையில்  இருந்தது.
 அரசனைப் பார்த்ததும் ,  குஞ்சலம்  அவனிடம் சென்று "  இந்த  தேவாலய  மடத்தின் பெருமாட்டி,   எனது  கணவனை உள்ளே  வைத்துக்  கொண்டு  என்னுடன்   அ னுப்ப    மறுக்கிறாள் .  நீங்கள்  தலையிட்டு  எனக்கு  நீதி  கிடைக்கச்   செய்ய வேண்டும்  "  என்று   முறையிட்டாள்.
  அதே நேரத்தில், ஹேம குப்தனும்,    அங்கு வந்து,  "  எனது மனைவி ,  எனக்கு   வேண்டுமென்றே  பைத்தியம் என்று  பட்டம் கொடுத்து,  என்னை     ஒரு  இருட்டறையில் கட்டிப்  போட்டுவிட்டாள் !  கஷ்டப்பட்டு தப்பி   வந்துள்ளோம். எனக்கு  நீதி  வழங்குங்கள்"  என்று  வேண்டினான்.! 
 குஞ்சலாவுக்கு  பயங்கர   அதிர்ச்சியாகிவிட்டது.' இது என்ன   குழப்பம்?  மடத்தில் உள்ளே  இருந்தவன்   எப்போது  எப்படி  வெளியே வந்தான்? என்று  குழம்பித்  திகைத்தாள்.

   கனககுப்தனுக்கு  ,  ஹேமகுப்தனைப் பார்த்ததும்,  அவன்  தான் தனது  மூத்த மகனாக இருக்க வேண்டும்  என்று    புரிந்தது.  அரசனிடம் இவ்வளவு   நெருக்கமாகப் பேசுபவன்   செல்வந்தனாக  இருப்பான் என்று   நம்பி , அவன் " எனது   செல்வ   மகனே! நீதான்  எனக்கு  கோடி பணம் கொடுத்து  என்னைக்
காப்பாற்ற வேண்டும் !" என்று ! .கெஞ்சினான் .  ஆனால்  ஹேமகுப்தன்,  கப்பல்  விபத்து  நடந்த  பிறகு தனது   தந்தையைப்  பார்த்ததே இல்லை.
    அவன் " நீங்கள்   யார்? எப்படி  நான் உங்கள்  . மகனாவேன்? "  என்று
 அவனைக் ,கவனிக்கவே இல்லை.   ஒரு வேளை    தன்னைத்    
தெரியும்  எனக்காட்டுவது  அவமானம் என்று   நினைக்கிறான் போலும்  என்று  கனக குப்தன்  செய்வதறியாது சிறுத்துப் போனான்.
 இந்தக் குழப்பம்    நேரும்போது, மடத்தின்  பெருமாட்டி, அனுகுப்தன் ,  அனுஜன்   மூவரும் மடத்தின்  கதவைத்  திறந்து கொண்டு  வெளியே    வந்தார்கள்..  குஞ்சலம்  அப்போது  தன முன்னே  இரண்டு ஹேமகுப்தன், இரண்டு   சகாயன்   நிற்பதைக்  கண்டு   திகைத்து ,மலைத்துத்   தடுமாறினாள்.

    அரசன்  இந்த   இரட்டை ஜோடியரைக்   கண்டதும்  முந்தைய நாள், கனககுப்தன்    கூறிய  விஷயங்களை நினைவில்  கொண்டு  ,   இந்த  இருவரும்தான் கனக குப்தனின்   இரட்டைப்பிள்ளைகள் என்று   தெளிவாக  உணர்ந்தான்.  அதே போல  , சகாயனும்,  அனுஜனும்  
இரட்டைப்பிள்ளைகள் என்பதும்  தெளிவானது..!

அந்த இனிய தருணத்தில், கன்யாஸ்த்ரீ-மடத்து பெருமாட்டி, 
தன்   கணவன்  கனககுப்தனை  அடையாளம்  தெரிந்து கொண்டு      தனது  இரு மகன்களையும்  மீண்டும்  பெற்று  பரவசமானாள்  .   முன்பே   கண்டபடி,பல வருஷங்களுக்கு முன்னால் , மீனவர்கள், அவளது  குழந்தைகளை  எடுத்துக்கொண்டு  அவளை  ஆதவில்லாமல் விட்டுச்  சென்றவுடன், அவள்  ஒரு  தேவாலயத்  தலைவரைப் பார்த்து  தனது  நிலையை கூறி, உதவி  கேட்டாள் .  அவரும், அங்கிருந்த  கன்யாஸ்திரீ  மடத்தில்  சேர்ந்து   பணிபுரிய அனுமதி  கொடுத்தார்.  படிப்படியாக தனது அரும்  குணத்தாலும் ,  சேவையினாலும்,அனைவரின்
நன்மதிப்பையும்  பெற்று  , அவள்  , அப்போது  தலைமை  மேற்பார்வையாளராக இருந்து   வந்தாள்.    அவள்   அன்று காப்பாற்றியது   அவளுடைய   சொந்த மகனைத்தான்!
    தந்தையும், தாயும்,  அருமை மகன்களும், அவர்களின்   உதவியாளர்களும்  இவ்வாறு  ஒன்று  சேர்ந்த ஆனந்த   நேரத்தில், 

கனககுப்தனுக்கு  தண்டனை   நேரம் நெருங்கி விட்டது.   இப்போது  மூத்த மகன்  ஹேமகுப்தன் தனது   தந்தையின் தண்டனைப்  பணத்தை தான் தருவதாக  அரசனிடம்    கூறினான்..  ஆனால், அரசன் ரத்னசேனன் , ' நீ  இருபது ஆண்டுகளாக இந்த நாட்டின்   பிரஜை,. உனது  தாயும்  இந்த   நாட்டில் கௌரவமாக  பணியாற்றியவர்.  அதனால்,  உன்னுடைய  உறவினர்கள்  அனைவரும் இந்த  நாட்டின் பிரஜைகள் தாம் .!  எனவே நீ  ஒன்றும்  தரவேண்டாம். கனக  குப்தனை விடுவிக்கிறோம்! " என்று  கூறி, 'வாருங்கள்!  உங்கள் இனிய  நினைவுகளில்  நானும் பங்கெடுக்க விரும்புகிறேன் ' என்று   தேவாலயத்தில் அவர்களோடு சேர்ந்து கொண்டான்.
    ஸஹாயனும், அணுஜனும்    அவ்வாறே  ஒருவரை  ஒருவர் பார்த்து " எவ்வளவு   அழகாக  இருக்கிறான்! கண்ணாடியில்  காணும் பிம்பம்  போல " என்று  மகிழ்ந்தனர்.
     குஞ்சலகுமாரியும்,  தனது   மாமியாரின்  அறிவுரையை  நன்கு புரிந்து கொண்டு  ,  அதுமுதல்  ஹேமகுப்தனின் இனிய  இல்லாள்  என  மாறினாள் .
    அனுகுப்தன்,   குஞ்சாலாவின்  தங்கை  வத்சலாவைத்  திருமணம்  செய்துகொண்டு  ஆனந்தமாக  வாழ்ந்தான்.
      இவ்வாறு கனககுப்தன்  ஒரே  நாளில் மரணத்தின்  பிடியிலிருந்து தப்பி     அவனது மனைவி, மக்கள் எல்லோருடனும், ரத்னபுரியின்  பிரபல பிரஜையாக   நீண்ட காலம் வாழ்ந்து   மகிழ்ந்தான்.
   இப்படி  அதிசயமான ஆள்  மாறாட்டம் , நல்ல  படியாக , எல்லோரும்  இன்புற்று இருக்கும்படி  முடிந்தது.
                           சுபம்!     

.
  
"

  







     
   



.  
       

  




Popular posts from this blog

MERCHANT OF VENICE ( in THAMIZH)

                                                        MERCHANT OF  VENICE                                                PLAY  BY  SHAKESPEARE  ( 1600) TALE     RETOLD    BY  MARY  LAMB ( 1800) ( Tales  from Shakespeare) Adaptation/ Translation  in Thamizh  (   தமிழ் ) by RSR =============================== This  is  the  tenth  tale   in the  proposed  10  tales. ------------------------------------------------------ ------------------------------------------------ INDEX TO THE OTHER TALES  IN THAMIZH AT https://shakespeare4tamils.blogspot.com/p/index-page.html original play by the BARD http://www.opensourceshakespeare.com/views/plays/plays.php http://www.opensourceshakespeare.com/views/plays/playmenu.php?WorkID=merchantvenice ------------------------------------------- The  original  text  of  the  tale by Mary Lamb  is at https://comediesmarylamb.blogspot.com/2020/02/merchant-of-venice.html?view=flipcard ------------------------------------------------- Name

ALL IS WELL THAT ENDS WELL

                     ALL'S  WELL THAT  ENDS WELL PLAY  BY  SHAKESPEARE  ( 1600) RETOLD  BY MARY LAMB  (1800) ADAPTED AND TRANSLATED  BY  RSR IN THAMIZH ========================================= COPY RIGHT  MATERIAL. ========================================== https://comediesmarylamb.blogspot.com/2020/03/alls-well-that-ends-well.html?view=flipcard                                                நல்லதே  வெல்லும் விதேஹ   நாட்டின்   மன்னன் , கீர்த்திசேகரன்..    தனது ஆருயிர்   நண்பன் ஜெயதேவன்   எதிர்பாராத விதமாக   இளம் வயதிலேயே   பிரிந்து விட்டதை   நினைத்து ,,   ஜெயதேவனின்   மகனை அரசவைக்குக் கொண்டு    வந்து   அங்கு ஒரு    முக்கிய   பதவியில்   அமர்த்த நினைத்து ,    அவனை   அழைத்து    வர , மிகவும்   அனுபவமிக்க , பண்பாளன் , கோமான்    சுதர்சனசேனனை பிரயாகை   நகருக்கு அனுப்பி     வைத்தான்.       ஜெயதேவனின்    மகன் பெயர்    விக்ரமசேனன்..   நல்லவன் தான்   .   எனினும் தனது    உயர்குலப்   பெருமை பற்றி   சற்று    கர்வம்    கொண்டவன்..   அவன் அன்னையின்   பெயர்   அனசூ

AS YOU LIKE IT (THAMIZH)

                                                                                                               Play by Shakespeare  ( 1600) Retold by  Mary Lamb   (1800)          ( Tales from Shakespeare) Adaptation/translation  by RSR  in thamizh  தமிழ்     AS YOU LIKE IT original english tale  at https://comediesmarylamb.blogspot.com/2020/02/as-you-like-it.html?view=flipcard ------------------------------------------------------ Fil m  with  subtitles at    h ttps://www.youtube.com/watch?v=u9hTxzLHU3I -------------------------------------------------------------------------- INDEX TO THE OTHER TALES  IN THAMIZH AT https://shakespeare4tamils.blogspot.com/p/index-page.html original play by the BARD http://www.opensourceshakespeare.com/views/plays/plays.php http://www.opensourceshakespeare.com/views/plays/playmenu.php?WorkID=asyoulikeit                                உ ங்கள்  விருப்பம்       நீலாம்புரம்  மிகவும்  அழகான  சிறிய ராஜ்யம்..  அடர்ந்த காட்டுப்   பகுதிய