Skip to main content

MEASURE FOR MEASURE ( IN THAMIZH)





              MEASURE  FOR MEASURE  
- PLAY  BY  SHAKESPEARE (1600)
RETOLD  BY  MARY  LAMB -1800 ( in Tales  from Shakespeare)
ADAPTATION / TRANSLATION  BY  RSR ( MARCH  2020) IN THAMIZH
-----------------------------------------------------------------------------------
BEGUN  ON 14-3-2020 -  10 AM
COMPLETED  ON 14-3-2020   11 PM
-------------------------------------
COPY  RIGHT  MATERIAL
EARLIER  POSTS  IN THE  SERIES  AT                   INDEX-PAGE 
https://shakespeare4tamils.blogspot.com/p/index-page.html

--------------------------------------
https://comediesmarylamb.blogspot.com/2020/02/measure-for-measure.html?view=flipcard

                                       சட்டமும், அதிகாரியும்


மாளவ நாட்டின் மன்னன் ராஜசிம்மன். .தனது குடிமக்கள்  யாருக்கும்  சிறு குற்றங்களுக்காக,  கடுமையான தண்டனை  எதுவும்  தருவதில்லை.  பெரும்பாலும்,, மன்னிப்புக்  கொடுத்து,  எச்சரித்து   அனுப்புவதே  அவனது வழக்கம்.  இத்தகைய  ஆட்சி  முறையால்,  மக்களிடையே ஒழுக்கம்  குறைந்து விட்டது.  சட்டம் பற்றிய  அச்சம்  மறைந்து விட்டது.  
    முறையான திருமணம் செய்து   கொள்ளாமல்எந்த ஒரு  ஆணும் , ஒரு   கன்னியுடன் எந்த  விதத்திலும்  தனிமையில் நெருங்கிப்   பழகுவது பெருங்குற்றம்  எனவும் அத்தகைய  குற்றத்திற்கு மரண  தண்டனை  தரப்படும்  என்றும் ஒரு  சட்டம்  அந்த  நாட்டில்   இருந்தது.  அதை  அரசன்  பயன்படுத்தி,   யாரையுமே   தண்டிக்காததினால்,  இளைஞர்களுக்கு,   பயம் போய்விட்டது.   இளம்  பெண்களை   இனிமையாகப் பேசிக்   கவர்ந்துபெற்றோர்களுக்குத்   தெரியாமல்,  தனிமையில்  சந்திக்கச்  செய்வது  அவர்களுக்கு   எளிதாகிவிட்டது.  இது  பற்றி  பாதிக்கப்பட்ட   பெற்றோர்கள், அரசனிடம்  முறையிடுவது அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது.  இதற்கு  ஒரு  முற்றுப்புள்ளி வைக்க  அரசன்  விரும்பினான்.   எனினும் , இத்தனை    நாளும், மெத்தனமாக   இருந்துவிட்டு,   திடீர்  என்று  கடுமையான மரண  தண்டனை  எல்லாம்    விதித்தால்,  தனக்கு  மக்களிடம் கெட்ட  பெயர்  வந்துவிடும் என்று  கருதி,  அரசன்,   சில   நாட்கள்,  வெளி  நாடு  செல்வதாகவும்,  அப்போது ஒழுக்கமும்  கண்டிப்பும்  மிக்க ஒரு  கனவானிடம்  ஆட்சிப்  பொறுப்பை   ஒப்படைத்து,   அவன்    மூலம், மக்களிடையே   மீண்டும்  நல்லொழுக்கம்   மலரவைக்க  அவன்  திட்டமிட்டான்.  தனது   ஆலோசகர்களுடன் ,  யாரிடம் பொறுப்பை   அளிக்கலாம் என்று   . யோசித்தான். அப்போது   எல்லோரும் ஒரு  மனதாக, அந்த  நாட்டின்,   குணசீலன்   என்ற கடுமையான    ஒழுக்கமும்,  நேர்மையும்  கொண்ட  அதிகாரியிடம் பொறுப்பை   ஒப்படைக்க   அறிவுறுத்தினார்கள். அரசனும் அந்த   அறிவுரையை ஏற்று,   குணசீலனை    அழைத்து, "  நான் சில  நாட்கள்   வெளிநாடு   செல்கிறேன்.  நீ  சட்டம்,  ஒழுங்குத்  துறையின் பொறுப்பேற்றுக்கொள்.   யார்  எந்தக் குற்றம்  செய்தாலும்,  தயவு   தாட்சண்யம் பார்க்காமல்,   சட்டப்படி  தண்டனையை     நிறைவேற்று." என்று   கூறி  அவனுக்கு  அதிகாரம்  அளித்தான். 
     அந்த  நாட்டின்  தலைநகரில்,  சுகப்ரியன் என்று ஒரு   இளைஞன்   இருந்தான். அவன்   மாலதி என்ற  இளம்   பெண்ணிடம் நெருங்கிப்   பழகி   வந்தான்.. இது   மாலதியின் தகப்பனாருக்குத் தெரிய  வந்து அவர்,  அதிகாரி  குணசீலனிடம் முறையிட்டார்.
     குணசீலன்  உடனடியாக,  .  சுகப்பிரியனை  கைது செய்து  , சட்டப்படி  அவனுக்கு   விரைவில் மரண  தண்டனை  விதிக்க  ஆணையிட்டான்.   காவலர்கள், சுகப்பிரியனை  கைது  செய்து  சிறையில்   அடைத்தனர்.
   சுகப்ரியனுக்கு ,  சௌந்தர்யா  என்ற   அழகும், நற்பண்புகளும் நிறைந்த ஒரு   தங்கை  இருந்தாள் .   அவளுக்கு,  தான் ஒரு   தேவாலயத்தில்  ஒரு  கன்யாஸ்திரீயாக  வாழவே  விருப்பம்.  எனவே   அவள்,  அங்கு  இருந்த  மடாலயத்தில்   சென்று,  விரதம்  இருந்து  வாழ்ந்து  வந்தாள் 
     சுகப்ரியன்  , தனது  நண்பன்  வினோதனிடம்,  " நண்பா! நீ  எப்படியாவது,   எனது தங்கை  சௌந்தர்யாவை  மடத்தில்   சென்று சந்தித்து,  எனக்கு மரண  தண்டனை  விதிக்கப்  பட்டிருக்கும் செய்தியைச்   சொல்லி, அவளை அதிகாரி,   குணசீலனைப்  பார்த்து ,  எனக்காக வாதாடி  ,  எனது  விடுதலைக்கு ஏற்பாடு  செய்யச்   சொல்."  என்று   அனுப்பி  வைத்தான்.
    மாலதியை   ,  சௌந்தர்யாவுக்கு நன்றாகத் தெரியும்.   சுகப்ரியனும் மாலதியும்   ஒருவரை  ஒருவர்   நேசிப்பதும்,  பெற்றோ  சம்மதத்துடன்  அவர்கள் விரைவில்  திருமணம்  செய்து   கொள்ள  இருப்பதும்  அவளுக்குத் தெரியும்.  விநோதன்   அவளிடம்  செய்தியைக் கூறியதும்,  மடத்தின்  தலைவியிடம்   அனுமதி  பெற்று , குணசீலனிடம்  சென்று,  தனது   அண்ணனும்  மாலதியும் விரைவில்  திருமணம்  செய்து  கொள்ள   உள்ளார்கள்   என்றும்  அவன்   மேல்  கருணை   கொண்டு,  அவனை  இந்த ஒரு  முறை  மன்னித்து விடுங்கள்.  இந்தத்  தவறு இனி   என்றுமே  நடக்காது .   மேலும், இது  போன்ற சிறு   தவறுக்காக  மரணதண்டனை  என்பது   இதுவரை  இல்லாத  கடும் தண்டனை  " என்று    மன்றாடினாள்.
 குணசீலன்   மசிவதாக  இல்லை. எனினும்  ,  சௌந்தர்யாவின்  அபூர்வ   அழகு, அவனை   மயக்கி விட்டது.  "  பெண்ணே! சட்டம்     எப்போதும் தனது   கடமையைச் .  செய்யத்தான் வேண்டும்.   இதில்  நான்  தலையிட்டு  உனக்கு  உதவ   இயலாது..   இருந்தாலும், நீ   இன்று  இரவு எனது   மாளிகைக்கு ரகசியமாக வந்து  தங்க   முடியுமானால், நான்   உனக்காக உனது  அண்ணனை  மன்னித்து   விடுக்கிறேன்.  நன்றாக  யோசித்து நல்ல முடிவெடுத்து,    உனது  அண்ணனைக் காப்பாற்று"  என்று   வெட்கமில்லாமல் அந்த அதிகாரி, இழிந்த  முறையில் தனது  கெட்ட   எண்ணத்தை   வெளியிட்டான்.. 


இது   கேட்டு  வெகுண்ட  சௌந்தர்யா  "  சீ  ! இவ்வளவுதானா உன்னுடைய   யோக்கியதை!  அப்பழுக்கற்ற குணசீலன்  என்று   ஊரில்   பேசிக்கொள்கிறார்கள். ,ஆனால்   உண்மையில் ஒரு   கபட வேஷதாரி.! பெண்   பித்தன்..!  இதை நான்   ஊரார்  முன்னிலையில் கூறி,     உன்  மானத்தை வாங்குகிறேன் பார்! " என்று    சீறினாள்..

குணசீலன்   அகந்தையுடன்  நகைத்து "  பெண்ணே !  ஊரார்  அனைவரும்  நான்    உத்தமன்குறிப்பாகப்  பெண்கள் விஷயத்தில்,   துறவி  போன்றவன் என்று   என்னைப்  பற்றி  அரசனிடம்  கூறி  இந்த   அதிகாரத்தை எனக்கு   பெற்றுக் கொடுத்துள்ளார்கள்   இது  நாள்  வரை  அது  முற்றிலும் உண்மையும் கூட.! . எத்தனையோ  பேரழகிகள் என்னை   மயக்க இதுவரை  முயற்சித்துத்  தோல்வியே    கண்டுள்ளனர். அதனால்  தான்ஊர் முழுவதும்  எனக்கு  நல்ல  பெயர்!.   இவ்வளவு நாள்,   அசராமல் இருந்த  என்   மனம் உன்  அழகினால்   தடுமாறியுள்ளது.!  அது  என்   குற்றமா?  உன் குற்றமா? 
 நீ   எவ்வளவு கதறினாலும்,  ஊரார்  எவரும்   உன்னை நம்ப  மாட்டார்கள்.   வேண்டுமானால்  முயற்சித்துப் பார்! "   என்றான்..!   
    சௌந்தர்யா " நமது அரசர்.  நல்லவர்.   அவரிடம்  முறையிட்டு நான்    உன்னுடைய    வேஷத்தைக்  கலைப்பேன் "   என்றாள் .
   "  அசட்டுப் பெண்ணே!   நாளை  அதிகாலை உனது  அண்ணனின்  தலை   துண்டிக்கப்பட   இருக்கிறது.  அரசர்  வெளிநாடு    சென்றுள்ளார். திரும்பி  வர,  பல நாட்களாகும்,   அதுவரை நான்  வைத்ததுதான் சட்டம்! . மேலும்,  நான்  உனது  அண்ணனுக்காக  புதிய சட்டம்  எதுவும்    போடவில்லை. அரசர்  என்னிடம்    கூறியது  போல , ஏற்கனவே  உள்ள  சட்டத்தை  தயவு   தாட்சண்யம்  இல்லாமல் நிறைவேற்றுகிறேன் ! இதில்  என்ன    தவறு?...நீ   மனது வைத்தால்   மட்டுமே நாளைக்குக்   காலை உனது  அண்ணனின்   உயிர்   பிழைக்கும்.!  இதுதான்  இறுதி வாய்ப்பு.  உனது   முடிவை இன்று   மாலைக்குள்  எனக்கு  நீ   நேரில் வந்து   தெரிவிக்க வேண்டும்.   இனியும்   உன்னுடன் வாதாடி   என்னுடைய  நேரத்தை வீணாக்க நான்  விரும்பவில்லை.  நீ   போகலாம்.  முட்டாள்த்தனமாக  வெளியே யாரிடமும்  என்னைப்பற்றிச் சொல்லி,  கெட்ட  பெயர்   வாங்கிக்   கொள்ளாதே!  நீ  புத்திசாலி  என்று   நினைக்கிறேன்!" என்று  அவளை  வெளியே  அனுப்பி   விட்டான்.  
================================14-3-2020 - 2PM =======================
 
அரசன்  ராஜசிம்மன்,   வெளிநாடு எங்கும்  செல்லவில்லை..  ஒரு  பாதிரியாக   ,வேடமிட்டு ,  குணசீலன்  எந்த  அளவுக்கு நேர்மையாக  தனது அதிகாரத்தைப் பயன்  படுத்துகிறான்  என்று கவனித்துக் கொண்டுதான்  இருந்தான்.. அவன் பாதிரி    வேடத்தில், சிறைக்குச்  சென்று  விரைவில் மரண  தண்டனை  பெற  இருந்த  சுகப்ரியனுக்கு ,  இறுதிப்  பிரார்த்தனை நடத்தி  அறிவுரையும்,  அன்புரையும்  அளித்துக்  கொண்டிருந்த நேரத்தில்,  சௌந்தர்யா தனது   அண்ணனைக்  காண  அங்கு   வந்தாள்   உடனே பாதிரி,   வெளியே சென்று  ,சிறைக்   காவலரிடம்,  'அண்ணனும்    தங்கையும் என்ன பேசிக்கொள்கிறார்கள்  என்று  அறிய விரும்புகிறேன்.   அதற்கான  மறைவிடம் ஏற்பாடு  செய்து கொடுங்கள் ' என்று   கேட்டு  அவ்வாறே  மறைந்து  கொண்டு ,  அவர்களின் உரையாடலைக் கேட்டார்.

   " அருமைத் தங்கை   சௌந்தர்யா! நீ   இன்று  காலை  அதிகாரி குணசீலனை  கண்டு   எனது உயிரைக்  காப்பாற்றக்  கோரிக்கை  வைத்தாயா?  அவர்  அதற்கு என்ன   சொன்னார்? 



        "அண்ணனே!  நான்  அதிகாரியைப்  பார்த்துக்   கெஞ்சினேன்.  ஒரு பலனும்   இல்லை.. அவன்    அயோக்கியன்..  உன்னை  விடுவிக்க , எனது   கற்பை  விலை  கேட்கிறான்..  நான்   அதற்கெல்லாம் உடன்படமுடியாது.   உனக்கும்  அது  பெருமை இல்லை  என்பதால்,   நமது குடும்ப கொரவத்தை    இழந்து,   நீ   உனது உயிரைக்  காப்பாற்றிக்கொள்ள விரும்ப  மாட்டாய் என்று  நான்   அறிவேன்.. இன்று   மதியம் நான்   அவனை  மீண்டும்  சந்தித்து எனது  முடிவைக்     கூறவேண்டும்.  முடியாது என்று  சொல்லப்   போகிறேன்.. எனவே  நீ   இறுதித்  தண்டனைக்கு  மனதைத் தயார் செய்துகொள்   அதைத்  தெரிவிக்கவே நான்   இங்கு   வந்தேன்." என்றாள்  சௌந்தர்யா. 

   "  சொந்த அண்ணன்   என்  மீது  இவ்வளவுதானா  உன் அன்பு!   என்னுடைய  உயிரைவிட    உன்னுடைய வறட்டுக் கற்புக்கௌரவம்தான் உனக்கு  பெரிதா,? நான்  அப்படி  என்ன   பெரிய குற்றம்   செய்துவிட்டேன்?  கல்யாணம் செய்து   கொள்ள  இருக்கும் எனது  மணப்பெண்  மாலதியை  அவளும்  விரும்பித் தனிமையில்   இனிமையாகப்  பேசுவது  அவ்வளவு பெரிய   குற்றமா?   இது  என்ன    சட்டம்?   என்னை  பிழைக்க வைக்க  வேண்டியது உனது     கடமை  இல்லையா?" என்று   பிதற்றினான் 

   " .அண்ணனே!     உயர்குலத்துப்  பெண்களுக்கு  உயிரைவிட  , கற்பும்   குலப்பெருமையும்தான்  உயர்ந்தது..   அதைப்பற்றி  இவ்வளவு  தாழ்வான  கருத்து  உன்னிடமிருந்து வருவது   எனக்கு  மிகவும் அதிர்ச்சியாகவும்,   வியப்பாகவும்  உள்ளது.   தங்கையின் கற்பைக்  காப்பாற்ற  உயிரையும்  கொடுக்கும்  அண்ணன்மார்கள்   எங்கே!  உன்னைப்போல்  தங்கையின் கற்பை  விலை   வைத்துப் பிழைத்துக் கொள்ள   விரும்பும் கௌரவம் இல்லாத  மனிதன் எங்கே! உன்னை   நினைத்து எனக்கு  வெட்கமாக  உள்ளது.   நான்  எனது   மானத்தை   இழந்தால்,   நீ  இன்னும்  சில  ஆண்டுகள்  வாழ்ந்திருப்பாய்!  அதில் என்ன  பெரிய கௌரவம்? நான்    ஒருபோதும்,  எனது  கற்பை   இழக்க முடியாது.  நீ   நாளை ,  மரணத்தை    ஏற்கத் தயார்  ஆவது  ஒன்றே   வழி..  உயிர் அப்படி  ஒன்றும்  .  மேலானதல்ல,"  என்று  சௌந்தர்யா  ,அவனுக்கு   இடித்துரைத்தாள் .

     இதுவரை மறைந்திருநது    இவர்களின்  உரையாடலைக்  கேட்டுக்கொண்டிருந்த   பாதிரியார் வேடத்தில்  இருந்த  அரசன், " உன்  தங்கை   சொல்வதுதான் சரி" . நீ  தயாராக  இரு  ன்று சொல்லிவிட்டு,  சௌந்தர்யாவிடம்   தனியாக  "  நான்  ஒரு  வழி  சொல்கிறேன்!  அதன்படி   நடந்தால், உனது  அன்பு   அண்ணனின் உயிரும்  காப்பாற்றப்   படும்.  நீயும் உனது   கௌரவத்தை இழக்க  வேண்டியதில்லை.    செய்வாயா?" என்று  கேட்டார்.
  சௌந்தர்யா அவரிடம் "  கௌரவக்குறைவில்லாத  எந்த  ஒரு  காரியத்தையும்   நீங்கள்  சொலவ்து  போல நான்  செய்கிறேன். "  என்றாள்.
   அப்படியானால்,, நீ  உடனே  குணசீலனிடம் , போய் " நான்  இன்று   இரவு  உங்களது   மனையில் உங்களை  சந்திக்கிறேன்.  அதற்கு   ரகசியமான வழியும்  சாவியும்  தாருங்கள்.  ஒரு  நிபந்தனை, !  நான்  வாய்   திறந்து ஒரு   வார்த்தை  கூட பேசமாட்டேன்.  விரதத்தில்   உள்ளேன்.  அதனால்  என்   முகத்திரையை  ஒரு   போதும்  அகற்ற  மாட்டேன்."  என்று    கூறி, அவனிடமிருந்து  சாவியை வாங்கிக்கொண்டு   வந்து  விரைவாக என்னை   தேவாலயத்தில் வந்து  பார்.  நான்   பிறகு என்ன  செய்ய வேண்டும்  என்று  விரிவாகத்     தெரிவிக்கிறேன " என்றார்..  
 சௌந்தர்யாவும்  அதுபோல  குணசீலனைச்   சந்தித்து,  அவனது  ரகசிய    வீட்டுக்கு  வழியும்,  அதற்குச்  சாவியும் வாங்கிக்  கொண்டு   பாதிரியாரிடம்  கொடுத்தாள் 

 . அப்போது பாதிரியார், " நீங்கள்   எல்லாரும்  நினைப்பது போல  , இந்த குணசீலன்,   திருமணம்  ஆகாதவன் இல்லை.   அவனுக்குப்   பல  ஆண்டுகளுக்கு  முன்பே ஒரு  செல்வந்தக்  குடிப்பெண்ணுடன் திருமணம்  ஆகிவிட்டது.  அவளுக்கு  ஸ்த்ரீதனமாக ,  அவளது அண்ணன்  ஒரு    கப்பலில் ஏராளமாக  நகைகளும் , பரிசுகளும்  கொண்டுவந்தான்.    எதிர்பாராமல், அந்தக் கப்பல்   கடலில்  மூழ்கி விட்டது.  நகைகளோடு,   அந்த  அண்ணணும் கடலில்  மூழ்கி   இறந்து விட்டான்.    இதனால், இந்தக் கயவன்  குணசீலன்,  தனது  மனைவியைப்    புறந்தள்ளி,  தவிக்க விட்டுள்ளான். இது    பற்றி, சில   நாட்கள்   முன்புதான், அவள்  மூலமாகவே   எனக்குத்  தெரிய   வந்தது.. இன்று  இரவு  நீ  குணசீலன்  இல்லத்திற்குப்    போகவேண்டாம்.      நீ  இப்போது,  குணசீலன்    மனைவி
 சாந்தகுமாரியைப்   பார்த்து,  அவளிடம்   முகவரி,  சாவி   இரண்டையும்   கொடுத்து, உனக்குப்   பதிலாக  அவளைப்  போகச்  சொல்.   இதில் ஒரு  தவறும்  இல்லை.  எதுவும்  பேசக்கூடாது  என்றும் அவளிடம்   கவனமாக    இருக்கச் சொல்.   இதன்   மூலம் ,உன்  அண்ணனின் உயிரும்,  உனது  கௌரவமும்    காப்பாற்றப்படும்." என்றார்.
      சௌந்தர்யாவுக்கு இதில்  எந்த   மாற்றுக  கருத்தும் இல்லை.  பாதிரியார்   சொன்னபடியே அவள்,  சாந்தகுமாரியைப் பார்த்து,   கவனமாக  அனைத்து  விஷயங்களையும் கூறி   அவளை   இரவில்  அனுப்பி  வைத்தாள் 
    பாதிரியார் , தனது   கைப்பட  சிறை  அதிகாரிக்கு சுகப்பிரியனை   விடுதலை  செய்யச் சொல்லி  ஒரு   கடிதம், அதை   அரசர் கொடுத்து   அனுப்பினார் என்று  கூறி,  அவனை  விடுவித்துக்  கொண்டு  சென்றுவிட்டார்.
     அதற்குள்,  குணசீலன், நடு  இரவில்,  தனது   காரியம்  முடிந்த
கையோடு,   மறுநாள் காலை  வரை  காத்திராமல்,  உடனடியாக   சுகப்ரியனின்  தலையை வெட்டித்   தனக்கு அனுப்பி வைக்க   உத்தரவு   போட்டான்.  சிறை  அதிகாரி அப்போது,  ஏற்கனவே  இறந்த ஒருவனின் தலையை  அனுப்பித்துத்  தப்பித்துக்   கொண்டான்.

      இரவோடிரவாக, அரசன்   குணசீலனுக்கு ஒரு   கடிதம்  அனுப்பினான்." நான்  எனது   வெளிநாட்டுப்  பயணத்தைச்   சில  காரணங்களால்  ரத்து செய்து  விட்டேன்!  நாளை   அதிகாலையில் ,நான்  நமது   நகருக்குள்   வருகின்றேன்..  குடிமக்களுக்கு  ஏதும்  குறை  இருப்பின்   அவர்கள் என்னை  நகர்  நுழைவு  வாயிலேயே  சந்தித்து,   நிவாரணம் பெறலாம்.  அதற்கு  விரைவாக  ஏற்பாடு செய்"  என்று  எழுதினான்.       
-------------------

   எதோ ஒரு  காரணத்தோடு,    பாதிரியார், சௌந்தர்யாவிடம்,   அவளது   அண்ணனை ,  குணசீலனின்    ஆணையால், சிறை   அதிகாரிகள்,  கொன்று     விட்டார்கள் என்று    கூறினார். மேலும்,  " சௌந்தர்யா!  நாளைக்  காலை ,  அரசர்   நகருக்குள்   வரும்போது,  நீ    அவரிடம், குணசீலன்  உன்னைக்  கெடுத்தது  போதாது என்று  உன் அண்ணனைக்  கொன்று விட்டான் "  என்று   கூறி  நீதி கேள்! "  என்று   சொல்லி வைத்தார்.  குணசீலனின்    கபட  வேஷத்தை  ஊரறிய வெளிப்படவைக்க  நினைத்து  அவ்வாறு  அவளுக்கு கூறினார்.   அதுபோலவே , அரசன்  நகருக்குள்  வந்தவுடன்,  சௌந்தர்யா அரசனிடம்  "   அரசே!  இவரது  ஆசைக்கு  இணங்கி இவ்ரூடைய  ரகசிய  அறைக்கு  நான்  நேற்று  இரவு   சென்றேன்..   பதிலுக்காக  எனது அண்ணனை   விடுக்கிறேன் என்று   சொன்ன  இந்த குணசீலன்,   கொடுத்த வாக்குறுதியைக்   காப்பாற்றாமல், எனது  அண்ணனைக்  கொன்று   விட்டார்.  எனக்கு நீதி  வேண்டும்!  எந்தக்  குற்றத்திற்காக எனது  அண்ணனைக்  கொன்றார்களோ  ,  அதே   குற்றத்தை  இழைத்த இந்த   குணசீலனுக்கும்    தாங்கள்  மரண தண்டனை   விதித்து நீதியை   நிலை நாட்டை வேண்டும் "  என்று   கோபமுடன்   கேட்டாள் .  அப்போது   அங்கிருந்த குணசீலனின்  மனைவி  சாந்தகுமாரி,     "  அரசே!  நான்  குணசீலனின்  மனைவி. .  இந்தப் பெண் சௌந்தர்யா  கூறுவது  போல நேற்று  இரவு  எதுவும்    நடக்கவில்லை..  நானல்லவா  அங்கு  சென்று   வந்தேன்!  எனவே எனது   கணவரை ஒன்றும்   செய்து  விடாதீர்கள் என்று    கெஞ்சினாள். அப்போது,  அரசன்,  "குணசீலா !  இந்த   இரண்டு       பெண்களில்  யார் கூறுவது   உண்மை என   என்னால்   கண்டு பிடிக்க  முடியவில்லை   எனவே,   நீயும்  மற்ற பிரபுக்களும்,   விசாரித்து முடிவு    சொல்லுங்கள்  . நான்   சிறிது  நேரத்தில்   வருகிறேன் என்று  சொல்லி   அகன்றான். .   பின் அரசன்  பாதிரியார்    உடையில், அங்கு   வந்து, குணசீலன்   செய்த  அக்கிரமங்களை  பட்டியல்  இட்டு   மக்களிடமும், மற்ற   பெரியவர்களிடமும்     வெளிப்படுத்தினான் .  உடனே   குணசீலனும்,  மற்ற  பிரபுக்களும்,  இந்தப்    பாதிரி  வேண்டுமென்றே ,  நமது  அதிகாரிகளைப்   பழித்து ,   ராஜ்யத்தின்  அமைதியைக்  கெடுக்க வந்துள்ளான்.  இவன்தான்,  இந்த  இரண்டு    பெண்களையும்   இதுபோல பேசச்  சொல்லிக்   கொடுத்துள்ளான்.  இதோ அரசர்   இன்னும்  சிறிது நேரத்தில்  வந்து  விடுவார்.  அவர்  வந்தவுடன்   முதல்  வேலையாக இந்தத்   திருட்டுப்  பாதிரிக்கு மரண   தண்டனை  விதிக்கச்  சொல்லுவோம்    என்றனர்.. அப்போது,  பாதிரி  ,  தனது அரச  உடையில்   தோன்றி . "   பொய்யர்களே! அரசன்   எங்கும் போகவில்லை.   இங்குதான்  இருக்கிறேன்!   குணசீலனுக்கு மரண  தண்டனை   விதிக்கிறேன்!"    என்றான்.    சௌந்தர்யாவும், ,சாந்த குமாரியும்   ,இந்த  இரண்டு   நாட்களாக  தங்களுக்கு  உதவிய பாதிரியார்,   உண்மையில்,   மாளவப்  பேரரசின்  மாமன்னன் ராஜசிம்மன்  என்று   அறிந்து மிகவும்   உவகை  கலந்த  வியப்பு   அடைந்தார்கள்.   இப்போது, சாந்த குமாரி   மீண்டும் அரசனின்   காலில் விழுந்து  தனது  கணவனுக்கு   உயிர்ப்பிச்சை  கேட்டு   கதறினாள். அப்போது  அரசன்,  சௌந்தர்யாவின்  சகோதரன்  மரணம்   மட்டும்,  லேசானதா?  இதே  குற்றத்திற்காகத்  தானே  அவன் கொல்லப்   பட்டுள்ளான்!  உனது கணவனுக்கு  மட்டும்  நான்,  தண்டனை   தராமல்  இருந்தால், நீதி   பிழறாதா? எனவே  சௌந்தர்யா  கேட்டுக்   கொண்டால் தான்,உனது   கணவனை  நான்  மன்னிக்க   முடியும். அவளது  எண்ணம்  என்ன  என்று  கேள்!  என்று   கட்டளை    இட்டான்.

  அப்போது   சௌந்தர்யாவும்  மன்னனின் காலில்  பணிந்து, " அரசே!  எனது  சகோதரன்  இப்போது    இல்லை.. இந்த  குணசீலனின்   உயிரை   எடுப்பதால், எனது  சகோதரன்   மீண்டு  வரப்   போகிறானா? இல்லை. !   ஆனால்,சாந்தகுமாரி,   அன்று   இரவில், எனக்குப்    பதிலாகச்  சென்றதினால்தான்,  எனது    கௌரவம் காப்பாற்றப் பட்டுள்ளது.   தாங்கள்  தயை கூர்ந்து,   குணசீலனை  சாந்தாவுடன்  சேர்த்து  வைத்து அவளுக்கு  நீதி  வழங்குங்கள் "  என்று    வேண்டினாள்..   அரசன்    ராஜசிம்மன்," நீ  முகத்தில்  மட்டுமல்ல,   அகத்திலும், அறத்திலும் பேரழகி.  நீ   வேண்டும்படியே ,   குணசீலனை மன்னித்து  ,   அவன்  தனது   மனைவியுடன்  சேர்ந்து ,  நல்லவனாக வாழ  ஆணை இடுகின்றேன்.  "  என்றான்.

    பிறகு "    சௌந்தர்யா    தேவியே! உனது  சகோதரன்   உயிருடன்  தான்   உள்ளான்.  துயரம் வேண்டாம்" என்று   கூறி,   சுகப்பிரியனையும்  அவனது நேசப்பெண்  மாலதியையும்,  அவளது   பெற்றோர்களையும்   வரவழைத்து, திருமணத்திற்கு  அனுமதி   கொடுத்து  ஆசி   .தந்தான்
     .  இறுதியில்.  சௌந்தர்யாவை நோக்கி, " இணையற்ற அழகு,  அன்பு இதயம்,  அசைக்க  முடியாத அற    நெறியும்  கற்பும்  கொண்ட , நீ   என்னை வாழ்க்கைத்  துணையாக  ஏற்று  அருள் புரிவாய்! "  என்று   வேண்டி,  அவளை  மணந்து  கொண்டு  இன்பமாக  வாழ்ந்தான்.
     தங்களது  இணையற்ற  அரசி   சௌந்தர்யாவின் குண   நலன்களை முன்மாதிரியாகக் கொண்டு,   மாளவ  சாம்ராஜ்யத்தின்  பெண்டிர்  அனைவரும் தாங்களும்,  ஒழுக்கத்தில்   சிறந்தவர்களாக  வாழ்ந்து வையப்புகழ்  பெற்றனர்.  தங்கள்    மாமன்னன்  ராஜ   சிம்மனின்,   அறிவு, நேர்மை,  பெண்களிடம்  பரிவு,   மரியாதை   இவற்றைப்   பின்பற்றி மாளவ  நாட்டின்  ஆண்களும், .ஒழுக்க  சீலர்களாக   வாழ்ந்தனர்.
                  மன்னர்   எவ்வழி-  மக்கள்  . அவ்வழி.
                                 சுபம். 
                                      
 
          
       
          
       
          


Popular posts from this blog

MERCHANT OF VENICE ( in THAMIZH)

                                                        MERCHANT OF  VENICE                                                PLAY  BY  SHAKESPEARE  ( 1600) TALE     RETOLD    BY  MARY  LAMB ( 1800) ( Tales  from Shakespeare) Adaptation/ Translation  in Thamizh  (   தமிழ் ) by RSR =============================== This  is  the  tenth  tale   in the  proposed  10  tales. ------------------------------------------------------ ------------------------------------------------ INDEX TO THE OTHER TALES  IN THAMIZH AT https://shakespeare4tamils.blogspot.com/p/index-page.html original play by the BARD http://www.opensourceshakespeare.com/views/plays/plays.php http://www.opensourceshakespeare.com/views/plays/playmenu.php?WorkID=merchantvenice ------------------------------------------- The  original  text  of  the  tale by Mary Lamb  is at https://comediesmarylamb.blogspot.com/2020/02/merchant-of-venice.html?view=flipcard ------------------------------------------------- Name

ALL IS WELL THAT ENDS WELL

                     ALL'S  WELL THAT  ENDS WELL PLAY  BY  SHAKESPEARE  ( 1600) RETOLD  BY MARY LAMB  (1800) ADAPTED AND TRANSLATED  BY  RSR IN THAMIZH ========================================= COPY RIGHT  MATERIAL. ========================================== https://comediesmarylamb.blogspot.com/2020/03/alls-well-that-ends-well.html?view=flipcard                                                நல்லதே  வெல்லும் விதேஹ   நாட்டின்   மன்னன் , கீர்த்திசேகரன்..    தனது ஆருயிர்   நண்பன் ஜெயதேவன்   எதிர்பாராத விதமாக   இளம் வயதிலேயே   பிரிந்து விட்டதை   நினைத்து ,,   ஜெயதேவனின்   மகனை அரசவைக்குக் கொண்டு    வந்து   அங்கு ஒரு    முக்கிய   பதவியில்   அமர்த்த நினைத்து ,    அவனை   அழைத்து    வர , மிகவும்   அனுபவமிக்க , பண்பாளன் , கோமான்    சுதர்சனசேனனை பிரயாகை   நகருக்கு அனுப்பி     வைத்தான்.       ஜெயதேவனின்    மகன் பெயர்    விக்ரமசேனன்..   நல்லவன் தான்   .   எனினும் தனது    உயர்குலப்   பெருமை பற்றி   சற்று    கர்வம்    கொண்டவன்..   அவன் அன்னையின்   பெயர்   அனசூ

AS YOU LIKE IT (THAMIZH)

                                                                                                               Play by Shakespeare  ( 1600) Retold by  Mary Lamb   (1800)          ( Tales from Shakespeare) Adaptation/translation  by RSR  in thamizh  தமிழ்     AS YOU LIKE IT original english tale  at https://comediesmarylamb.blogspot.com/2020/02/as-you-like-it.html?view=flipcard ------------------------------------------------------ Fil m  with  subtitles at    h ttps://www.youtube.com/watch?v=u9hTxzLHU3I -------------------------------------------------------------------------- INDEX TO THE OTHER TALES  IN THAMIZH AT https://shakespeare4tamils.blogspot.com/p/index-page.html original play by the BARD http://www.opensourceshakespeare.com/views/plays/plays.php http://www.opensourceshakespeare.com/views/plays/playmenu.php?WorkID=asyoulikeit                                உ ங்கள்  விருப்பம்       நீலாம்புரம்  மிகவும்  அழகான  சிறிய ராஜ்யம்..  அடர்ந்த காட்டுப்   பகுதிய