Skip to main content

ALL IS WELL THAT ENDS WELL



                     ALL'S  WELL THAT  ENDS WELL

PLAY  BY  SHAKESPEARE  ( 1600)
RETOLD  BY MARY LAMB  (1800)
ADAPTED AND TRANSLATED  BY  RSR IN THAMIZH
=========================================
COPY RIGHT  MATERIAL.
==========================================
https://comediesmarylamb.blogspot.com/2020/03/alls-well-that-ends-well.html?view=flipcard


                                               நல்லதே  வெல்லும்




விதேஹ  நாட்டின்  மன்னன் , கீர்த்திசேகரன்..   தனது ஆருயிர்  நண்பன் ஜெயதேவன்  எதிர்பாராத விதமாக  இளம் வயதிலேயே  பிரிந்து விட்டதை  நினைத்து,,  ஜெயதேவனின்  மகனை அரசவைக்குக் கொண்டு   வந்து  அங்கு ஒரு   முக்கிய  பதவியில்  அமர்த்த நினைத்து,   அவனை  அழைத்து   வர , மிகவும்  அனுபவமிக்க , பண்பாளன் , கோமான்   சுதர்சனசேனனை பிரயாகை  நகருக்கு அனுப்பி    வைத்தான். 

    ஜெயதேவனின்   மகன் பெயர்   விக்ரமசேனன்..  நல்லவன் தான்  .  எனினும் தனது   உயர்குலப்  பெருமை பற்றி  சற்று   கர்வம்   கொண்டவன்..  அவன் அன்னையின்  பெயர்  அனசூயாதேவி.  மிகவும்   நல்ல  குணம்  கொண்டவள்.   அன்பே   வடிவானவள்.. 
  
     பிரயாகை  நகரில்,  சரக-வைத்யதாஸர்  என்ற  மிகவும்  புகழ்   பெற்ற   மருத்துவர்  வாழ்ந்து வந்தார்.  அவரது  ஒரே    புதல்வி,  வந்தனவல்லி. அவளுக்கு அவரது  தந்தை   செல்வம் எதுவும்  விட்டுச் செல்லவில்லை. வைத்தியர்  இறந்தவுடன்,  பெருமாட்டி  அனசூயாதேவி,   வந்தனவல்லி  மீது      பரிவும், இரக்கமும்  கொண்டு,  அவளைத்  தனது   மாளிகையில்  பணிப்பெண்ணாக  அமர்த்தி,  சிறு  வயதிலிருந்தே  வளர்த்து வந்தாள் .

       இவ்வாறு   பல ஆண்டுகளாக  , ஒவ்வொரு  நாளும்  ,   விக்ரமசேனனைக்  காண வாய்ப்பு  பெற்ற  வந்தனா   , அவன்  மீது உயிரையே  வைத்திருந்தாள் .   ஆனால்,   தான்  ஒரு  சாதாரணக்  குடும்பத்து  ஏழைப்   பெண்,  விக்ரமனோ   பிரபு வம்ச இளைஞன்.    அவனைத்  திருமணம்  செய்து கொள்வது  ,   என்றும் நடக்கப்  போவதில்லை.   இந்த நினைவு   கூடத் தவறு.   வெளியே யாருக்கும்  தெரிந்தால்,  அவமானம்  ஆகிவிடும் என்று   அவள் தனது  நேசத்தை   நெஞ்சில்  பூட்டி வைத்து  தனக்குள்ளேயே  தினமும்  ஏங்குவதைத்  தவிர  வேறு வழி  எதுவும்  அறிந்திலாள் .

   இந்த  நிலையில்,    அரசர் கீர்த்திசேகரன்,  விக்ரமனை  மிதிலாபுரி அரசவைக்கு வர   ஆணையிட்டு,  சுதர்சனப் பிரபுவை  அனுப்பி வைத்தவுடன்,  அனசூயா  தேவிக்கு தனது   மகனைப்  பிரிவது தவிர வேறு  வழி  இல்லை.  அவள்  சுதர்சனப் பிரபுவிடம் தனது  மகனை    ஒப்படைத்து,  "  இவன்  இளைஞன்.  அரசவையில் எப்படிப்   பழகவேண்டும் என்பதெல்லாம்  அறியாதவன்.   எனவே தாங்கள்  அவனைப்    பாதுகாத்து வழிகாட்டுங்கள்  "  என்று    வேண்டினாள். 

   சுதர்சனசேனருக்குப்   பெருமாட்டி மீது   மிகுந்த  மரியாதை .   அவர்
 "  நீங்கள்  கவலையே   படவேண்டாம்.  நமது மன்னர்   சிறந்த   பண்பாளர்..  உங்கள் மகனை  அவர்   சொந்தத்  தந்தை போல    பார்த்துக்கொள்வார்.   மன்னருக்கு  சில  மாதங்களாக   ஏதோ ஒரு   பெரும் வியாதி  வாட்டுகிறது. அவரது நண்பரின் மகன்   அவருடன்  ,இருந்தால் அவருக்கு   ஆதரவாக இருக்கும்  "  என்று    கூறினார்.  

 அப்போது   பெருமாட்டி அனசூயா    அதுகேட்டு   வருத்தத்துடன், "  எங்கள்  நகரின்    மருத்துவர் ,  சரக-வைத்தியதாசர்   இப்போது  உயிருடன் இல்லை.    இருந்திருந்தால்,   அவர்    நோயைத்  தீர்த்து    வைத்திருப்பார்.  இதோ என்   அருகில்  நிற்கும்  இந்தப் பெண்  வந்தனவல்லி  , அவரது    மகள்தான். அவர்    ,தனது  ஒரே   மகளை    என்னிடம்  ஒப்படைத்து  மறைந்து விட்டார் . இந்தப்  பெண்  ஒரு   அருமையான  குணவதி.   தனது   தந்தையின் நல்ல    பண்புகள்    அவ்வளவும்,  இவளிடம்   வாய்த்துள்ளன. எனக்கு  கிடைத்த  பொக்கிஷம் இவள்  !   கணவனும், மகனும்     இல்லாத மாளிகையில்,  வந்தனாதான் எனக்கு  ஒரே   துணை !  " என்று    கூறினாள் . அப்போது  வந்தனா   கேவிக்கேவி    அழுது கண்ணீர்    சிந்தியபோது, "   செல்வமே!    நீ  .  இப்படி வருந்துவது   எனக்கும்   துக்கம்  தருகிறது.    நான்  இருக்கிறேனா இல்லையா!  அழாதே ! " என்று    தேற்றினாள்.    உண்மையில்,வந்தனா   கண்ணீர்  சிந்தியது,  தனது   தந்தையை நினைத்து  மட்டுமல்ல!  தனது  ஆருயிர்   விக்ரமனைப் பிரிவது  பற்றி  என்று   அந்தப் பெருமாட்டி  அப்போது  அறியவில்லை!
 இப்போது  சுதர்சனர் , தலைநகர்  மிதிலாபுரிக்கு  விக்ரமனை   அழைத்துச் சென்றார்.   போகும்போது,  விக்ரமன்   வந்தனாவிடம் ,  அன்பாக ஒரு   வார்த்தை  கூடப்   பேசவில்லை.  " என்   தாயாரை கவனமாகப்   பார்த்துக்கொள் என்று  மட்டும்   சொல்லிவிட்டு அகன்று   சென்று விட்டான். 
11pm  16-3-2020 monday
============================================     
17-3-2020  Tuesday 11  am
   வந்தனாவின்   தந்தை , மிகச்  சிறந்த மருத்துவர். ஏராளமான பண்டைய கால ஓலைச் சுவடிகளைப்    படித்து, நீண்ட கால   அனுபவத்தின்  மூலம் மிகவும் சிறந்த  ஒளஷதங்களைத்  தானே   தயாரித்துப்  பயன்படுத்துவதில்   நிபுணர்.  ஆயினும், அவர்  தனது வைத்திய   அறிவைப்  பணம்  சேர்ப்பதில்   பயன்படுத்தவில்லை..  ஏழை  எளியோருக்குப்  பெரும்பாலும் இலவசமாகவே  அவர்   மருத்துவம் பார்த்தார்.  அதனால், அவர்  இறக்கும்போது,   அவரிடம்  செல்வம்  எதுவும்   இல்லை.  அவர்  தனது  செல்வ    மகள்   வந்தனாவை ,  அழைத்துத் ,  தானே  தயாரித்த ஒரு   அபூர்வ  ஒளஷதத்தைக்   கொடுத்து      ," மகளே!  இது மிகவும்   விசேஷமான   அருமருந்து. எந்தவிதக்  கொடுமையான நோயிலிருந்தும் , நிவாரணம்   தரும்! .  . இது   ஒன்றுதான் நான்  உனக்கு  விட்டுச் செல்லும்  செல்வம்! .  பத்திரமாகப்   பாதுகாத்துத்  தக்க  நேரத்தில் பயன்படுத்திக் கொள் "  என்று  கூறி  இறந்துவிட்டார்.
      வந்தனவல்லி  ,   விக்ரமனைப் பார்க்க முடியாதது பற்றி   ஏங்கி , தன  மனதிற்குள் "  உங்களை மணாளனாகப்  பெற  எனக்கு ஒரு   தகுதியும் இல்லை.  எனக்கு  அது  நன்றாகத்  தெரியும்   ஆனால், வாழ்நாள்  முழுவதும்   தங்கள்  அருகில்   இருந்து,  பணிவிடைகள்   செய்து, ,   தங்களின்  அழகுமுகம் கண்டு,   இனிய  குரல்   கேட்டு, அதிலேயே  நான்    இன்புறுவேன். எனக்கு  அது  போதும்.  அதற்கும்   இப்போது வழி   இல்லாமல்   போய்விட்டது." என்று  வருந்திக்  கொண்.டிருந்த வேளையில் ,  திடீரென்று  மின்னல்  போல ஒரு   யோசனை   தோன்றியது. "  அரசருக்கு  ஏதோ    தீராத நோய்  என்று   சொன்னார்களே!  எனது தந்தை   கொடுத்த அபூர்வ   மருந்தை எடுத்துக்   கொண்டு ,  அரசரைச்  சந்தித்து  அதை  முயற்சி  செய்தால்  என்ன?    விக்ரமனைப் பார்க்க  ஒரு    அருமையான  வாய்ப்பு  !கிடைக்குமே ! " என்று  மிகுந்த   நம்பிக்கை   அடைந்து,   வாய்விட்டு  " ஆம்!  அதுதான்  சரி.   எனது  அன்பர்  விக்ரமனின் அருகில்  இருக்க  அது  ஒன்றுதான்  வழி"  என்று  சொல்லிக் கொண்டாள்  .
இவ்வாறு வந்தனா  வாய்விட்டு    அரற்றியது,.  அவளுடைய  அறைக்கு  வெளியே சென்று கொண்டிருந்த   பணியாளர்  ஒருவரின் காதில் விழுந்து   விட்டது. உடனே அவர்,  பெருமாட்டி  அனசூயாவிடம் சென்று   தெரிவித்தார்.
     பெருமாட்டி,  எதுவும்    கூறாமல்   அவரை   அனுப்பிவிட்டு, வேறொரு   பணிப்பெண்ணிடம், "  நீ உடனே  சென்று  , வந்தனாவை   இங்கு  வந்து  என்னைப்   பார்க்கச்  சொல்"  என்று கூறி   அனுப்பினாள் 
      தானும் தனது   இளம்  வயதில்,   விக்ரமனின் தந்தை   ஜெயதேவனிடம்  இதுபோல  நெஞ்சம்  நிறைந்த  நேசம் கொண்டிருந்த  நினைவுகளை   அவள்  மனம் அசை   போட்டது. " இளம்   வயது,   ஒரு   அழகிய ரோஜா  மலர்   போன்றது. நேசம் என்ற   முட்களும் நிறைந்த  பருவம்.   அந்த  வயதில்  நேசிப்பதில்   என்ன  தவறு என்றுதான்  நினைக்கின்றோம். நிறைவேற  நேர்ந்தால்  மகிழ்கிறோம்.  இல்லாவிடின், அனைத்தையும்   இழந்து  பரிதவிக்கிறோம்!" என்று "   நினைத்துக் கொண்டாள் .

     வந்தனா  வந்தவுடன்பெருமாட்டி அவளிடம்  " வந்தனா! நான் உனக்குத் தாய்  போன்றவள்  என்பது நீ    அறியாததா?"   என்றாள் 

" தங்களது  அன்பினால் ,னக்குத் தாய்  போன்றவர்  !   தாங்கள் எனக்கு   எஜமானி! !"  என்றாள் ,   வந்தனா .

  பெருமாட்டி   அனசூயா  மீண்டும் " நான்  உனக்குத்  தாய்.  நீ  எனக்கு  மகள்.  இவ்வாறு  நான்   கூறுவது கேட்டு   உன்   முகம் ஏன்   வாடுகிறது   "  என்று   கேட்டாள் . 
 " .
மன்னியுங்கள்,  பெருமாட்டி.!  தாங்கள்   எனக்குத் தாயார் இல்லை.  விக்ரம  பிரபு எனக்கு     சகோதரன் இல்லை.  நான்  உங்கள்  மகளும்  இல்லை.  எனது   அந்தஸ்து எனக்கு  நன்றாகத் தெரியும்" என்றாள் 

    " சரி!  அப்படியே இருக்கட்டும்! ஆனால்  நீ  எனது மகளாக  இருப்பதற்குப்  பதிலாக  எனது  மருமகளாக   இருக்கலாமே!  நீ  எனது   மகனை " நேசிக்கிறாயா?  " என்று  கேட்டாள்   அந்தப் பெருமாட்டி.

   " என்னை  மன்னியுங்கள்,பெருமாட்டி " என்றாள்  வந்தனா.

" இது  என்ன  பதில்? உன்  மனதில்  உள்ளதை உண்மையாகக் கூறு! நீ  எனது  மகனை   நேசிக்கிறாயா?"

   " நீங்களும் தான்   நமது விக்ரம  பிரபுவிடம்  அன்பாக இருக்கிறீர்கள்!" என்றாள்   வந்தனா. 
    "   இப்படியெல்லாம்  மழுப்பலாகப்  பேசவேண்டாம்..  உனது உள்மனம் எனக்கு  தெளிவாகத்  தெரிந்து விட்டது"  என்றாள்  பெருமாட்டி.

    இனியும்  தப்பிக்க  முடியாது என்று  உணர்ந்து,  வந்தனா.  , பெருமாட்டி   அனசூயாவின்  பாதங்களைப்  பணிந்து,   " என்னை   மன்னித்து விடுங்கள். நான்  விக்ரம பிரபுவை   நேசிப்பது  உண்மைதான்.  ஆனால்  அவருக்கு  எனது   நெஞ்சம்  பற்றி  எதுவும்   தெரியாது. எனக்கு     சமூக அந்தஸ்து   கிடையாது என்று  நான்   நன்றக   அறிவேன். ' ஒரு   இந்தியன் தினசரி  சூர்யனைப்   பார்த்து  வணங்குவது போல  உங்கள்  மகனைப்  பார்த்து    சேவிக்கிறேன்.  சூரியனுக்கு  தன்னை  வணங்கும்  இந்தியனைப் பற்றி  என்ன   கவலை?" அது  போன்றதுதான் எனது    பிரேமை.. என்னை  மன்னியுங்கள்  " என்றாள்  
   பெருமாட்டி   முகத்தில்  எந்த ஒரு   உணர்ச்சியும்   காட்டாமல், " நீ   மிதிலைக்கு  செல்ல திட்டம் போட்டிருக்கிறாயா? “  என்றாள்

    "  ஆம்!   சுதர்சனப் பிரபு   அரசரின் நோயை பற்றி  அன்று கூறியபோது  எனக்கு  என் தந்தையின்  அருமருந்து  பற்றி  யோசனை தோன்றியது. "
  " அது  மட்டும்தானா?  உண்மையைச் சொல்  என்றாள்  பெருமாட்டி.
  "  உண்மை  அதுவும் தான்.  ஆனால்    அதுமட்டுமல்ல.  விக்ரமப்ரபு   இங்கே   இருந்தால்,    எனக்கு  அந்த   யோசனையெல்லாம் வந்திருக்காது. "  என்றாள்  வந்தனா  

  இப்போது  பெருமாட்டி " வந்தனா! நீ   உண்மையிலேயே அரசரின்  நோயைத்   தீர்த்து  வைக்க முடியும்  என்று  நம்புகிறாயா? " என்று   வினவினாள்.
  அப்போது,  வந்தனா தனது  தந்தை   மரணப்    படுக்கையில்     இருந்தபோது தன்னிடம்  கூறியவற்றையும்  ,அவர்  தந்த   விசேஷ  ஒளஷதம்  பற்றியும் விவரமாக  பெருமாட்டியிடம் விளக்கினாள் 
இப்போது  ,   பெருமாட்டி  வந்தனாவின்  திட்டத்தை   அங்கீகரித்து,  பிரயாணத்திற்கு  வேண்டிய  அனைத்து  ஏற்பாடுகளையும் ,  விரைவாகச்  செய்து   கொடுத்தாள் . 

" யார்    கண்டது!  வந்தனாவுக்கு ஒரு    வேளை  அதிர்ஷ்டம்  இருந்தால்,  அரசரின்  நோய்  தீர்ந்துவிடும். அதன்   பலனாக  அவளது  நேசமும்  வெற்றி பெற   வாய்ப்பு   உள்ளது." என்று  அந்தப்  பெருமாட்டி  மனதிற்குள்  நினைத்துக்  கொண்டு வழி   அனுப்பி  வைத்தாள் .      

மிதிலாபுரிக்கு  வந்து  சேர்ந்த  வந்தனா ,   நேராக  சுதர்சனப்  பிரபுவின் மாளிகைக்கு   சென்று   நடந்த  நிகழ்வுகள் அனைத்தையும்  கூறி,   மன்னரின் நோயைத்  தீர்க்க  தனது  தந்தையின்    அருமருந்தை   முயற்சி  செய்ய வாய்ப்பு   வேண்டினாள்.   சுதர்சனப் பிரபு ,  ஏற்கனவே  பெருமாட்டி   அனசூயாவினால், சகர-வைத்தியதாசர் பற்றியும்,  வந்தனா பற்றியும்  அறிந்திருந்தார்.   எனவே அவர்   தயக்கம் ஏதும்  இன்றி , வந்தனாவை  அரசவைக்கு   இட்டுச் சென்று  ,  மன்னரிடம்  அவளது  நல்லெண்ணம் பற்றிக்   கூறினார். "  பெண்ணே!  உனது புகழ்  பெற்ற  தந்தை  சகர-வைத்தியரை பற்றி   நானும்  நன்கு அறிவேன்.    ஆனால், நீ  ஒரு   சிறுமி அல்லவா?  உன்னால் எப்படி,   பெரிய பெரிய   மருத்துவர்களெல்லாம் தீர்க்க  முடியாத எனது  நோயைத் தீர்க்க  முடியும்? "  என்று  அரசர்    ஐயப்பட்டார். 
  "  அரசே!  இந்த  மருந்து எனது   தகப்பனார் ,  இறக்கும்  தருவாயில்  என்னிடம் தந்த   மிகவும்  சிறப்பான மருந்து.   கண்டிப்பாக  பலன் தரும்   என்பது எனது   உறுதியான   நம்பிக்கை.. சிகிச்சை   தொடங்கிய  இரண்டு   நாட்களுக்குள்,   தாங்கள்   குணமடையாவிட்டால், எனக்கு   நீங்கள்  மரண தண்டனை   தரலாம்!. என்  மீது நம்பிக்கை   வைத்து  தங்களுக்கு  சேவை செய்ய , ஒரு  வாய்ப்பு   . தாருங்கள்.! எனது  அருமைத் தந்தையின்   ஒளஷதம்  ஒருக்காலும்  தோல்வியுறாது." என்று  வந்தனா தன்னம்பிக்கையுடன் தெரிவித்தாள் .  எனவே  அரசரும் ,  மகிழ்ந்து அவளது  சிகிச்சைக்கு  உடன்பட்டார்.  

  அரசர்    மகிழ்வுற்று, " பெண்ணே !  உனது  தன்னம்பிக்கை எனக்கும்  நம்பிக்கை    தருகிறது..  எனது ஆரோக்கியம் ,  நீ  கூறுவது   போல, இரண்டே  நாட்களில் மீண்டு  விட்டால்,   இந்த  ராஜ்யத்தில்  உள்ள  திருமணம்   ஆகாத  உயர்குலத்து   இளைஞர்கள்  அனைவரையும்  அரசவைக்கு   வரவழைத்துஉனது   தந்தையின்  நினைவாக,  உனக்கு சுயம்வரம்  நடத்துகிறேன்.  நீ  உனது   மனதுக்குப்  பிடித்த மணாளனைத்  தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்..  அவனுடன் உனது   திருமணத்தை நான் நடத்தி   வைக்கிறேன்..  இது  சத்தியம் "  என்று  உறுதி  அளித்தார்.

என்னே! வியப்பு!   அரசரின் நோய்    குணமாகிவிட்டது..  வந்தனா ஏழைதான்   ஆனால் அழகியும்   கூட.!. அரசர்  அவளுக்கு  மிகவும்   விலை  உயர்ந்த   ராஜமுத்திரை  பதித்த  மோதிரம் ஒன்றைப்  பரிசளித்து,    "  நீ  இதை  , யாரிடமும்   தரக்கூடாது. மிகவும்   அவசரமான ,  சிக்கல் எதுவும் நேர்ந்தால்,  நீ   இதைப்    பயன்படுத்தி ,  ராஜ்ய  உதவியை  உடனே பெறலாம்.  மறந்து  விடாதே! "  என்று கூறினார்.    

  சுயம்வரத்தில்,  விக்ரமனும்    இருந்தான்.  அதனால், வந்தனா  நேரடியாக அவனிடம்   சென்று, "  பிரபுவே!  என்னைத்  தங்களது  அடிமையாக   ஏற்றுக்கொள்ளுங்கள்." என்று  வரித்தாள். .    அரசரும்"  விக்ரமா! இந்தப்   பெண்ணை  மனைவியாகப்   பெறுவாய்..  உடனடியாக  திருமணத்திற்கு  ஏற்பாடு செய்கிறேன் "   என்றார்.  

 ஆனால்,விக்ரமன்  "  அரசே!  எனக்கு  இந்தப்  பெண்ணை   மனைவியாக  ஏற்பதில் இஷ்டம் இல்லை.   இவள் மிகவும்  வறிய     குடும்பத்தவள்..   எங்கள்  வீட்டில்  வேலைக்காரியாக  பல  ஆண்டுகள்   பணி  செய்து  வருபவள். எனது  தாயாருக்கு  பணிப்பெண்..கௌரவம்  மிக்க   உயர் குடும்பத்தை சேர்ந்த  நான்,  இவளை  எப்படி    மணக்க  முடியும்? "  மன்னியுங்கள்." என்று  மறுத்தான். அரசருக்கு   அவன்  தன்னை  எதிர்த்துப் பேசுவதாகக் கோபம்  வந்தது.
      வந்தனாவுக்கு   தாங்க முடியாத  துயரம் ஆகிவிட்டது.  " அரசே!   அவரை  வற்புறுத்த   வேண்டாம்.. நான்   வந்த  காரியம் ,  நலமாகவே   முடிந்துள்ளது.  தாங்கள்  உடல்  நலம்  பெற்றுள்ளதே  எனக்குப்  போதும்." என்று    கூறினாள்   
      ஆனால்,  அரசர்  தனது  ஆணையை  நிறைவேற்றி , கட்டாயத் திருமணம்  செய்து  வைத்தார்.   விக்ரமன்,   முதல்  வேலையாக வந்தனாவிடம் " நீ  அரசரிடம் சென்று , நான் இந்த  அரசவையில்  இருந்து  அகல  அவரது  அனுமதி  பெற்றுக்கொண்டு  வா! " என்றான்.   வந்தனா  அதுபோல அனுமதி  பெற்றுக்கொண்டு  வந்தாள். 
    உடனே,விக்ரமன்,  நான்   இப்போது  வேறு  நாட்டிற்கு  செல்கிறேன். நீ   நேராக  பிரயாகை   நகரில்,எனது   தாயை  முன்பு போல   கவனித்துக்கொண்டு   ஒரு பணிப்பெண்   ஆக  இரு.  என்னுடன்  வராதே! எனக்கு   உன்னுடன்  வாழப்   பிடிக்கவில்லை. என்று   கூறினான்.  வந்தனா மனம்    உடைந்து, " எனது பிரபுவே!   உங்களுக்கு  மனைவியாக   இல்லாவிடினும்,  உங்களது  வேலைக்காரியாக  உங்களுடன்  வர அனுமதி   தாருங்கள்." என்று    கெஞ்சினாள். ஆனால்   விக்ரமன்  மனது  இரங்கவில்லை. அவளிடம்  சொல்லிக்கொள்ளாமல், . வேகமாக வெளியேறிவிட்டான்.
    வேறு   வழி   இல்லாமல்,  வந்தனா தனது   விதியை  நொந்துகொண்டு,  மீண்டும்,    பிரயாகை நகரில்,   அனசூயாவின் மாளிகைக்குத்    திரும்பினாள். 
       பெருமாட்டி அனசூயா தேவி மிகவும்  அன்புடனும்,   மகிழ்ச்சியுடனும்,  வந்தனாவை   வரவேற்று  இனிமையாகப்   பேசினாள் . "  அருமை வந்தனா! உன்னைப்  பற்றி  எனக்கு  மிகவும்   பெருமையாக உள்ளது!   மன்னரின் ஆரோக்கியத்தை  நீ   கூறியபடியே மீட்டுக் கொடுத்துள்ளாய்.  இப்போது   உன்  மனதில்  நிறைந்து  நிற்கும் எனது    மகனையும் உனது   மணாளனாகப்  பெற்று விட்டாய்!  இனி  எப்போதும் நீ  என்னுடனேயே    இருக்கப்போகிறாய்!  எனக்கு  மிகவும்   மகிழ்ச்சியாக உள்ளது  " என்று  மனதார  வரவேற்றாள்.
  ஆனால்,   வந்தனாவின்  முகத்தில்  மகிழ்ச்சி இல்லாததைக்     கவனித்து,"  ஏன்  இப்படி  சோகமாக  இருக்கிறாய்? "  என்று   கேட்டுத் , தெரிந்துகொண்டு  தனது  மகனின்  அற்பச்   செயலுக்கு   வருந்தினாள்.   " வந்தனா! எனக்கு  மகளாக இரு.   உன்னுடன்   வாழ எனது   மகனுக்கு  கொடுப்பினை இல்லை.  உனது    அழகுக்கும்,  பண்புக்கும்,  புத்தி  கூர்மைக்கும் ,  ஒன்றல்ல ,  இருபது   விக்ரமன்   இணையாக   மாட்டார்கள்." என்று   பலவாறு   ஆறுதல்  வார்த்தைகள் கூறி தேற்றினாள்.  

 அப்போது   வந்தனாவுக்கு  விக்ரமனிடமிருந்து ஒரு   கடிதம்  வந்தது.    "  எனது   விரலில் உள்ள   மோதிரத்தை நீ   எப்போது  பிரித்து எனக்கு  காண்பிக்க  முடியுமோ   அப்போதுதான்,  நான்  உன்னை   மனைவியாக ஏற்க  முடியும்" என்று  இருந்தது. அது   எப்படி   சாத்தியம்?   இந்தக்  கடிதத்தை வந்தனா  பெருமாட்டியிடம்  கண்ணீர்  வழியக்     காண்பித்தாள்.. " எனது    கணவனுடன் வாழ  எனக்கு   என்றுமே  வாய்ப்பு இல்லை    போலும்" என்று    கதறினாள்.    பெருமாட்டி,  "  அப்படி  ஒன்றும் நடக்காது.   பொறுமையாக இரு.   அவனே   சில நாட்களில்  தனது தவறையும்  உனது   பெருமையையும்  உணர்ந்து,,     இங்கு  . வந்து    சேருவான் . கவலைப் படாதே!  தைரியமாக இரு! "   என்றாள்
---------------..    
18-3-2020  2pm
----------------

  " நீ அங்கிருக்கும்  வரை, நான் விதேஹ நாட்டிற்கு வருவதாக இல்லை" என்றும் ,  இரக்கமில்லாத விக்ரமன்,  வந்தனாவுக்கு  எழுதியிருந்தான்.  இதையும் வந்தனா  ,  பெருமாட்டியிடம் காண்பித்து  வருந்தினாள்.  


    அடுத்த நாள்  அதிகாலையில்,  வந்தனா    தனது  அன்பிற்கும்,  மரியாதைக்கும்  உரிய  அனசூயா  பெருமாட்டிக்கு   ஒரு  கடிதம் எழுதி   வைத்துவிட்டு,   நாட்டை  விட்டு அகன்றாள். "  தாயே! நான்  விதேஹ  நாட்டில்   இருந்தால்,   தங்களது அருமைப்  புதல்வன் , தங்களிடம்  கூட  இருந்து .  உதவமாட்டார்.   இந்த   நிலை  என்னால்  ஏற்பட்டது.  இதற்குப்   பரிகாரமாக,   நான் புத்தகயா  துறவிகளின்  விஹாரத்திற்கு சென்று ,  அவர்களது  அனுகிரஹத்தைத்  தேடிச் .செல்கிறேன்.  தாங்கள்  இந்த  விஷயத்தை  தங்கள் புதல்வருக்குத்   தெரிவித்தால்,  அவர்  தங்களுக்கு உதவியாக  பிரயாகை  நகருக்கு வந்துவிடுவார்.  நான்  எதுவும்   தவறிழைத்திருந்தால், என்னை  தயை  கூர்ந்து மன்னித்து விடுங்கள். " என்று   அந்தக்  கடிதத்தில்   கூறியிருந்தது.



       கயா  நகரைச்  சென்றடைந்த  வந்தனா ,  அங்கு  இருந்த  சுமதிதேவி  என்ற உயர்குலப்  பெண்மணியைச்   சந்திக்க  நேர்ந்தது..  சுமதிதேவியின்  கணவர்   இறந்துவிட்டார்.  சுமதிதேவி   இரக்கமும் , ஒழுக்கமும்    கொண்டவள்.  அவளுக்கு  ரஞ்சிதம் என்று  ஒரு   அழகான  மகள் இருந்தாள் 


  கோசல  ராஜ்யத்தை விட்டு    அகன்ற, விக்ரமன்,   அண்டை  நாடான் மகத  ராஜ்யத்திற்குச்    சென்று , தனது  போர்த்   திறமையினால், புகழ்  பெற்ற  தளபதியாக   விளங்கினான்.. கயா  நகரம்   முழுவதும் ,   பிரசித்தி  பெற்ற  ரஞ்சிதத்தின்  அழகுருவம்  பற்றி    அறிந்திருந்தது..  சுமதிதேவியின்   கட்டுப்பாடும், கண்ணியமும்   மிக்க வளர்ப்பு  முறையால்,  ரஞ்சிதம்   எளிதில்  மயங்காத , நெருங்க முடியாத  எழில்   மங்கையாக   விளங்கினாள்.  அவளைப்  பற்றிக்    கேள்விப்பட்ட விக்ரமன்,   அவளை  எப்படியாவது சந்தித்து  அவளைத்   திருமணம் செய்து கொள்ளத்    துடித்தான்.   ஆனால், சுமதிதேவிக்கு , விக்ரமன்  கோசல   நாட்டவன்,,  ஏற்கனவே  வந்தனா என்ற  பெண்ணை  கோசல  மன்னரால், திருமணம்  செய்துவைக்கப்பட்டவன் , தனது   மனைவியைப்  பிரிந்து  வாழ்பவன் என்ற   விபரங்கள்  அனைத்தும்   தெரியும்.   அதனால்,  அவள்  விக்ரமனை  வீட்டிற்குள்   அனுமதிப்பதில்லை.
சுமதிதேவியைச்   சந்தித்து, வந்தனா ,  தான்தான் விக்ரமன்  கைவிட்டுள்ள   மனைவி என்று    தெரிவித்து,  தனக்கு சுமதிதேவி  உதவ முடியும் என்று   கூறினாள் 

      வந்தனாவிடம்  மிகுந்த  அனுதாபம்  கொண்ட சுமதியும்  அவளது  அழகு மகள்  ரஞ்சிதமும்,"  எங்களால்  முடிந்த  அளவு  உனக்கு உதவ      விரும்புகிறோம் . நாங்கள்  என்ன  செய்ய வேண்டும்? " என்று   கேட்டார்கள்.

  அப்போது,  வந்தனா , "  நீங்கள்   இன்னும்  சில நாட்களில்  அந்தி சாயும்  நேரத்தில், விக்ரமனை   உங்கள்  இல்லத்தில்   அனுமதித்துஒரு   விருந்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். ரஞ்சிதத்தின் பெயரில், முகத்திரை   , அணிந்துரஞ்சிதத்திற்குப்  பதிலாக நான்  விக்ரமனுடன்  ,   உரையாடி, அவன் மனதைக் கவர்ந்து  ,  திருமண ஏற்பாடாக   மோதிரம்  மாற்றிக்கொள்ள   ஏற்பாடு  செய்யுங்கள்.  அதற்கு  முன்னர் நான்  இறந்து  விட்டேன் என்ற   செய்தியையும்  பரவலாகப்  பரப்பி,,  விக்ரமனுக்கும் தெரியப் படுத்துங்கள். அப்போதுதான், அவன்  தங்கள்   மகளை   தயக்கமில்லாமல் திருமணம்  செய்ய   முடிவு  செய்வான்."  என்று    வேண்டினாள்.  

                 இந்த  ஏற்பாடு,  சுமதி   தேவிக்கும்,  ரஞ்சிதத்திற்கும்   பிடித்திருந்தது.   கல்மனம் கொண்ட   விக்ரமனை  மணக்க ரஞ்சிதம்   விரும்பவில்லை.  ஏற்கனவே  திருமணம்   ஆன விக்ரமனுக்கு  தனது   அழகுமகள்  ரஞ்சிதத்தை  விவாகம்  செய்துகொடுக்க சுமதிதேவிக்கும் . விருப்பமில்லை.

  ஆனால்    வந்தனாவின், ஏற்பாடு  வெற்றி    பெற்றால்,  விக்ரமன்  போன்ற   அதிகாரம்   படைத்த  தளபதியின்  தொந்தரவிலிருந்து   தப்பிக்கலாம்அதே நேரத்தில்,  வந்தனா போன்ற  நல்ல   பெண்ணுக்கு  உதவியதாகவும்  அமையும் என்று  கருதி,  இதைத்   தாயும் மகளும்  நிறைவேற்ற  இசைந்தார்கள்.

      நகரம்  முழுவதும்,  விக்ரமனின் மனைவி  இறந்து  விட்டாள்  என்றும்,  அதனால்,   சுமதிதேவி  மனம்    மாறி, விக்ரமனைத்  தனது   மருமகனாக  ஏற்றுக்கொள்ளத்  தயாராகிவிட்டாள்  எனவும்  செய்தி பரவியது. (பரப்பப்பட்டது !).  விக்ரமனுக்கு   மிகவும் சந்தோஷமாகிவிட்டது. 

 அவன்    கேட்டபடி, ஒரு  நல்ல நாளில்,  சுமதியின் இல்லத்தில்   அவனுக்கு  வரவேற்பு    நடந்தது..  மங்கிய முன்    இரவில்,  முகத்திரை  அணிந்து,   ரஞ்சிதத்தின்  பெயரில்,  வந்தனா ,  அவனுடன்  தனிமையில் .  உரையாடினாள்   

    பிரயாகை    நகரில், விக்ரமனின்  இல்லத்தில், வந்தனா  பணியாற்றிய   நாட்களில்,  விக்ரமன்    இருந்தால்,   மரியாதையினால்,  அவன்  முன்பு வந்தனா  பேசியதே   கிடையாது. அவளது   பேச்சின் அறிவு,   பண்பு,  இனிமை   எல்லாம், பெருமாட்டி  அனசூயா  மட்டுமே அறிவாள் .  இப்போது மிகவும்   எளிதாக தனது   இனிமையான  உரையாடல்   மூலம்வந்தனா , விக்ரமனை   முழுதும்    அடிமையாக்கிவிட்டாள்  

    ரஞ்சிதம்  என்று   நினைத்துக் கொண்டு,  விக்ரமன்   தன்னிடம் இருந்த  திருமண  மோதிரத்தை ,  வந்தனாவின்   விரலில்   அணிவித்தான்.   பதிலுக்கு, வந்தனாவும் ,   அரசர் தனக்கு   பரிசாக  அளித்திருந்த  கோசல நாட்டு  முத்திரை  பதித்த  விசேஷ மோதிரத்தை  ,  விக்ரமனுக்கு    அணிவித்தாள்   இவ்வாறு   வந்தனா-விக்ரமன்  திருமண   நிச்சயதார்த்தம்   'இரண்டாவது'  முறையாக நடந்தேறியது!   இனிய   கனவுகளுடன்,விக்ரமன்   விருந்து உண்டு விட்டு   வெளியேறினான்.
===========================================


18- march-2020
6pm
  வந்தனா இறந்துவிட்ட செய்தியை   அறிந்து, மன்னர்  கீர்த்திசேகரன்,  தனது அருமை நண்பரின்  மனைவி  பெருமாட்டி அனசூயாதேவியின்  மாளிகைக்கு அவரது பரிவாரங்களுடன்  வருகை   தந்தார்.   வந்தனாவின்   மருத்துவத்தால் அன்றோ  அவர் தனது   ஆரோக்கியத்தை மீண்டும்   பெற்றார்!  வந்தனாவை அனுப்பி  வைத்தது  அனுசுயா தேவி  அல்லவா!  அது மட்டும்    இல்லாமல், அனசூயாதேவி வந்தனா  மீது எவ்வளவு   பிரியம்  வைத்திருந்தாள் என்பதும்   அவருக்கு சுதர்சனப் பிரபு  மூலம் தெரியும்.   எனவே பெருமாட்டியை   நேரில்  சந்தித்து   அவளது துக்கத்தைப்  பகிர்ந்து  கொள்ள அவர்  நேரில்   ப்ரயாகைக்கு   வந்திருந்தார். தாயாரைக் காண விக்ரமனும் அங்கு    வந்திருந்தான்..  அரசர், அனசூயாதேவியைப்  பார்த்தவுடன்,  விக்ரமனின்   அக்ரமத்தினால்தான் வந்தனாவின்  உயிர் பிரிந்துவிட்டது  என்று  வருந்தினார்.  எனினும்   நடந்தது நடந்ததுதான். என்று    சமாதானம்    கூறினார். விக்ரமனும்   ஒப்புக்கு  நான்  தவறுதான்  செய்துவிட்டேன் என்று  கூறினான்.  ஆனால்,   கூட  இருந்த சுதர்சனப் பிரபுவுக்கு   இவ்வளவு எளிதாக,  வந்தனாவின்  மரணத்தை . எடுத்துக் கொள்ள முடியவில்லை!  அரசே! வந்தனாவின்  மரணத்தில்,   பண்பும்,  அறிவும்,  குணமும், திறமையும்  மிகுந்த ஒரு  பேரழகியை   நமது ராஜ்ஜியம்   இழந்து   விட்டது.  இங்கு நம்  முன்  நிற்கும்  இந்த  இரக்கமில்லா  மூர்க்கன்   விக்ரமன்,  கிடைத்தற்கரிய  ஒரு ஸ்த்ரீ  ரத்னத்தை இழந்து  விட்டான்."  என்றார் 

  அரசர்  "உண்மைதான்.  விக்ரமன்  தனது   குற்றத்தை  இப்போது உணர்கிறான் என்று    தோன்றுகிறது.   பெருமாட்டிக்காக  அவனை  மன்னித்து   விடுவோம்"  என்றார். 

    ஆனால்,  அப்போது விக்ரமனின்   விரலில்  அவர்   வந்தனாவுக்கு  பரிசாக  அளித்திருந்த  விதேஹ  நாட்டின்  முத்திரை மோதிரத்தை கண்டவுடன், அவருக்கு   கடும் கோபமும்,   சந்தேகமும் வந்துவிட்டது.
'உனக்கு  இந்த   மோதிரம் எப்படிக் கிடைத்தது?  இது நான்  வந்தனாவுக்கு   அன்பளிப்பாகத் தந்த மோதிரம்  அல்லவா?  ' என்று    கேட்டார்.    .விக்ரமன்  அப்போது,  'ஒரு  பெண்   அந்த மோதிரத்தை     சாளரம்  வழியாக தூக்கிப்   போட்டாள்'   என்று   யாரும்  நம்பமுடியாத  புனைகதையைக் கூறி   உளறினான்.   அரசருக்கு கடும்  கோபம்  வந்துவிட்டது. 'அவளைக் கொன்றுவிட்டு இந்த  மோதிரத்தைக்  எடுத்துக்   கொண்டாயா?'  என்று  கூறி,  காவலர்களை  விட்டு  அவனைக்   கைது  செய்யச்  சொன்னார்..   பெருமாட்டி   அனசூயா கூட  தனது   மகன் வந்தனாவைக் கொன்றுவிட்டான்  என்றுதான்  சந்தேகப்பட்டாள் 

 .  அந்த   நேரத்தில், வந்தனா   கூறியிருந்தபடி,  சுமதிதேவி, அவளது   மகள் ரஞ்சிதத்துடன்  அங்கு   வந்து,  அரசரிடம், "  விக்ரமப்ரபு  எனது மகள் ரஞ்ஜிதத்தை  திருமணம்  செய்து கொள்வதாகக் கூறி  மோதிரம்  மாற்றிக்கொண்டு ,   மகத நாட்டின்  கயா  நகரிலிருந்து இங்கு   தப்பி வந்துவிட்டார்.   எங்களுக்கு  நீதி  தாருங்கள் என்று    முறையிட்டாள்.  அரசர்,   ரஞ்சிதத்திடம், மோதிரம்   மாற்றிக்கொண்டதாகக்  கூறுகிறாய்  !! அந்த   மோதிரம்     எங்கே!  காண்பி" என்றார்.   .  

உடனே  ரஞ்சிதம், வந்தனா அவளிடம்  கொடுத்திருந்த மோதிரத்தைக்  காண்பித்து, விக்ரம் பிரபு  இப்போது  அணிந்திருக்கும் முத்திரை  மோதிரம்   நான்தான் அவருக்கு  கொடுத்தேன்.  என்றாள். 'அது   எப்படி  உனக்கு கிடைத்தது?' என்று  கேட்டபோது,  'என்  தாயார் அதை   ஒருவரிடமிருந்து வாங்கினார்.'  என்றாள்.  'அவரைக் கூட்டிக்கொண்டு வந்து  இங்கே  காண்பிக்காவிடில்  உங்களையும்  சிறையில் தள்ளுவேன்! மரண  தண்டனை விதிப்பேன்' என்று கடுமையாக  எச்சரித்தார்..

    அப்போது,    சுமதிதேவி,  வந்தனாவை அங்கு   கொண்டுவந்து ' இந்தப்  பெண்மணிதான் அந்த  மோதிரத்தை     கொடுத்தாள்." என்றாள். 

    இறந்ததாகக்  கருதப்பட்ட வந்தனா , அங்கு   உயிருடன்  தோன்றியதில், அனைவருக்கும்  பேரானந்தம் ! அரசர்    " இங்கு   தோன்றுவது  எனது உயிர் காத்த வந்தனாதானா !  அற்புதம்! “  என்று    மகிழ்ந்தார். சுதர்சனப்  பிரபுவும், மிகவும் மகிழ்ந்தார்.  பெருமாட்டி   அனசூயாதேவிக்கு   தனது   மகனைவிட  பிரியமான, தனது  மகள்  போன்ற மருமகள்  வந்தனாவை மீண்டும்    பெற்றதில்,   மிகமிக   ஆனந்தம். 

  ஆனால்.  வந்தனா  அரசரிடம், "  ஆம் அரசே!  நான்    வந்தனாதான். ஆனால்  வந்தனாவின்   உயிரற்ற பிரதி   போன்று உள்ளேன்.  எனது  திருமணம்    நடந்தாலும்,  எனது  உயிருக்கு  உயிரான  அன்பருடன்   சேர்ந்து  வாழ நான்   இன்னமும்   பாக்கியம்   பெறவில்லை." என்றாள்.   

  பிறகு  விக்ரமன்   அளித்த  மோதிரத்தைக்  அவனிடம்  காண்பித்து,    இதோ  நீங்கள்  எனக்கு முன்பு   எழுதிய கடிதத்தின் படி,   உங்களது மோதிரத்தை   உங்கள் விரலில்   இருந்து   பிரித்து, இப்போது  காண்பித்து   விட்டேன்.  என்னை  இனியாவது  மனைவியாக  உங்களுடன்  இணைந்து வாழ    ஏற்றுக்கொள்ளுங்கள் : என்றாள்.  

   விக்ரமன்  அப்போதும் கூட,   முழுமனதுடன்  அவனது  தவறை ஒப்புக்கொள்ள   முன்வரவில்லை. '  கயா   நகரத்தில், சீமாட்டி   சுமதிதேவியின் இல்லத்தில்,   என்னுடன்  உரையாடியது  நீதான் என்று   நிரூபித்துக்   காட்டு. அந்த   நாளில்  நீ இறந்து விட்டதாக  அனைவரும்   சொன்னார்களே! '  என்றான்.

   அப்போது,    சுமதிதேவியும், ரஞ்சிதமும்   நடந்த அந்த   நாடகத்தை விபரமாக   அரசருக்கும், சுதர்சனப்  பிரபுவுக்கும், பெருமாட்டி  அனுசுயா   தேவிக்கும்  உள்ளது  உள்ளபடி  கூறினார்கள். .  

    விக்ரமன் , மனம்  திருந்தி,   ' நான்  இங்கு    வசித்தபோது,   நீ  ஒரு   பணிப்பெண் தானே என்று  உன்  முகத்தைக்கூட  சரியாக பார்த்ததில்லை.   நீயும்   பேசியதில்லை.   அதனால்தான்,  உனது திவ்யமான்   சௌந்தர்யம்,  இனிமையான  குரல்,  அதன்  சம்பாஷணை நேர்த்தி ,  அதில் இருந்த  அறிவும்,  கண்யமும்   எனது  குலப் பெருமை  பற்றிய  அகந்தை மிகுந்த   சிற்றறிவுக்கு   .  எட்டவில்லை. இப்போது  நான்  எவ்வளவு   பெரிய  பாக்கியசாலி  என்பதை உணர்ந்து  கொண்டேன்.. நான்  உனக்கு    இழைத்த  கொடுமைகளை ,  அருள்கூர்ந்து மன்னித்து என்னுடை.ய  வாழ்க்கையை  இனிமையாக்கு  என்று    வேண்டினான்.. உண்மையிலேயே விக்ரமன் இவ்வாறு  மனம்    திருந்தியதில்,  அனைவருக்கும்  பெரு  மகிழ்ச்சி  ஏற்பட்டது

  வந்தனா   பேருவகை கொண்டு,   விக்ரமனுடன், கைகோர்த்து ,  அரசர்  கீர்த்திசேகரன்,,  தனது  தாய்  போன்ற  பெருமாட்டி   அனசூயாதேவி,,  கனவான் சுதர்சனப்   பிரபு,  தனக்கு  உதவிய சீமாட்டி  சுமதிதேவி  என  ஒவ்வொருவரிடமும்  முறையாக பாதம்  பணிந்து , மெய்  மறந்த  ஆனந்தமுடன் ,அனைவரிடமும்   ஆசி  பெற்றாள்

        அரசர்   கீர்த்திசேகரனும்,  சுமதிதேவிக்கும்,   ரஞ்சிதத்திற்கும் , வந்தனாவுக்கு    உதவியதற்காக,  நன்றி  தெரிவித்து  வெகுமதிகள்  பல அளித்து ,   ரஞ்சிதத்தை   கோசல நாட்டின்  பிரபு   ஒருவனுக்கு  மணம் முடித்து  வைத்து     அருளினார்       
.
     இவ்வாறு,  வந்தனாவின்   தந்தை சரக -,வைத்யதாசரின்   ஒளஷதம் வந்தனாவின்   கனவுகள்  அனைத்தையும்   மெய்ப்பட வைத்தது..
வந்தனவல்லி  இப்போது   அவளுடைய  நெஞ்சம்  நிறைந்த விக்ரமனின்   அன்பு  மனைவி… அற்புத  குணம்  வாய்ந்த பெருமாட்டி   அனசுயாதேவியின்  செல்ல மருமகள். …  பிரயாகை  நகர    கோமாட்டி .......    வந்தனாதேவி!  

 
 
 


         

Popular posts from this blog

MERCHANT OF VENICE ( in THAMIZH)

                                                        MERCHANT OF  VENICE                                                PLAY  BY  SHAKESPEARE  ( 1600) TALE     RETOLD    BY  MARY  LAMB ( 1800) ( Tales  from Shakespeare) Adaptation/ Translation  in Thamizh  (   தமிழ் ) by RSR =============================== This  is  the  tenth  tale   in the  proposed  10  tales. ------------------------------------------------------ ------------------------------------------------ INDEX TO THE OTHER TALES  IN THAMIZH AT https://shakespeare4tamils.blogspot.com/p/index-page.html original play by the BARD http://www.opensourceshakespeare.com/views/plays/plays.php http://www.opensourceshakespeare.com/views/plays/playmenu.php?WorkID=merchantvenice ------------------------------------------- The  original  text  of  the  tale by Mary Lamb  is at https://comediesmarylamb.blogspot.com/2020/02/merchant-of-venice.html?view=flipcard ------------------------------------------------- Name

AS YOU LIKE IT (THAMIZH)

                                                                                                               Play by Shakespeare  ( 1600) Retold by  Mary Lamb   (1800)          ( Tales from Shakespeare) Adaptation/translation  by RSR  in thamizh  தமிழ்     AS YOU LIKE IT original english tale  at https://comediesmarylamb.blogspot.com/2020/02/as-you-like-it.html?view=flipcard ------------------------------------------------------ Fil m  with  subtitles at    h ttps://www.youtube.com/watch?v=u9hTxzLHU3I -------------------------------------------------------------------------- INDEX TO THE OTHER TALES  IN THAMIZH AT https://shakespeare4tamils.blogspot.com/p/index-page.html original play by the BARD http://www.opensourceshakespeare.com/views/plays/plays.php http://www.opensourceshakespeare.com/views/plays/playmenu.php?WorkID=asyoulikeit                                உ ங்கள்  விருப்பம்       நீலாம்புரம்  மிகவும்  அழகான  சிறிய ராஜ்யம்..  அடர்ந்த காட்டுப்   பகுதிய