Skip to main content

CYMBELINE ( IN TAMIL)


                                                         CYMBELINE
  by WILLIAM SHAKESPEARE  ( 1610)
TALE  RETOLD  BY  MARY  LAMB   ( 1800)
in Tales  from Shakespeare with  her younger  brother Charles Lamb
TAMIZH  TRANSLATION  BY  RSR
begun  on 11-3-2020...........Completed  on
EARLIER  POSTS  IN THE  SERIES  AT                   INDEX-PAGE 
                        https://shakespeare4tamils.blogspot.com/p/index-page.html

https://comediesmarylamb.blogspot.com/2020/03/cymbeline.html?view=flipcard


-----------------------------------------------------------
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

                                                    வனஜவல்லி


 உத்கல நாட்டின் மன்னனாக , சிம்மபாலன் என்ற மன்னன்  ஆண்டு  

 வந்தான். அவனது  முதல்   மனைவி, உடல்  நிலை   சரியில்லாமல்  

 இறந்து விட்டாள் அவள்   மூலம்,  சிம்மபாலனுக்கு   மூன்று குழந்தைகள்  

 பிறந்தனர்.   முதலில் ஒரு  பெண் குழ்நதை. அவளது   பெயர் 

வனஜவல்லி     வனஜா . மிகவும்  அழகும், துறுதுறுப்பும்   மிக்கவள்.. 

 இரண்டு    ஆண்டுகள்  சென்ற பின்  இளையவர்களாக , முதலில் ஒரு 

 மகனும், பிறகு  இரண்டு  ஆண்டுகளுக்குப்  பின்   மற்றொரு மகனும்   

 பிறந்தனர்.  ..   அவர்களும்,   மிகவும்   லக்ஷணமான    குழந்தைகள்.. 

 கடைசிப் பையனுக்கு  ஒரு  வயது  கூட நிரம்பாத   நிலையில்

அவர்களின் தாய் ,  அரசி  குணவதி இறந்து விட்டாள் .  அப்போது  

வனஜாவுக்கு  நான்கு  வயதுதான். 



        அந்த   நாட்டில், மங்களேசன்  என்ற  ஒரு  தளபதி,  அரசனுக்கு  



 எதிராக ஒரு  சதித்  திட்டத்தில் முனைப்பாக   இருந்தது,   மன்னன் ,  


 சிம்மபாலனுக்கு தெரிந்து போய்விட்டது..  அதனால், மன்னன் , 

மங்களேசனை   நாடு கடத்தி, '  உன்னை  இந்த நாட்டில்   எங்கேயாவது 

கண்டால்,  உடனடியாக   தலையை   வெட்டிவிடுவேன்..தப்பித்துப் போ!

என்று  விரட்டி  விட்டான்.  மங்களேசன் ,  மன்னனைப்  பழி  

 வாங்குவதற்காக ,  மன்னனின், இரண்டு    பச்சிளம்   பாலகர்களையும்

திருடி   எடுத்துக் கொண்டு  மலைக்காட்டுக்குள்   சென்று, ஒரு   

 குகையில்  பதுங்கி  வாழ்ந்து வந்தான்.  


     இரண்டு   குழந்தைகளும் மிகவும்   அழகானவர்கள் . கள்ளமறியாத 

 பாலகர்கள், கெட்டிக்காரர்கள்.  .அதனால்,   மங்களேசனுக்கு அந்த   

 சிறுவர்களிடம் மிகவும் பாசம்   தோன்றியது. அந்த   இரு சிறுவர்களையும் 

 தனது  சொந்தக் குழந்தைகளாகக்  கருதி , மிகவும்   பிரியத்துடன்   

 வளர்த்தான்.. தனக்கு  தெரிந்த அனைத்து  யுத்தக் கலைகளையும்  

 அவர்களுக்கு   சிறு வயதிலேயே  பயிற்றுவித்தான்.  காட்டில்  

 வேட்டையாடிக்   கிடைத்தவற்றையும்,   காய்கனிகளையும்   உண்டு அந்த 

 மூவரும்  ,  குறை எதுவும்   உணராமல்,  இன்பமாகவே வாழ்ந்து  

 வந்தனர்.


      சிறுமி வனஜா  மட்டும் , தனது  இரண்டு   சின்னச்சிறு  தம்பிக்  

 குழந்தைகளைக்  காணாமல் சில  ஆண்டுகள்    வருந்தினாள்.. ஆயினும், 

 நாளடைவில்  அவளுக்கு  அந்த   நினைவு  மங்கி மறைந்து விட்டது.


    வனஜாவுக்கு   பாடம் சொல்லித்   தர,  அரசன் சிம்மபாலன் , ஒரு  

நல்ல  ஆசிரியரை   ஏற்பாடு செய்தான்.   அரசனது இறந்து  போன் 

நண்பன்  ஒருவனின் மகன்    வல்லபதேவன்.. அவனும்  மிகவும்   .

கெட்டிக்காரன்., அழகன்.  நல்லவன்...அவனும்   அதே  ஆசிரியரிடம் , 

வனஜாவுடன் சிறு  வயது   முதலே  கல்வி   கற்றான்..  இவ்வாறு  பல 

ஆண்டுகள்,  ஒன்றாகக் கல்வி   கற்று,  ,  அரட்டை அடித்து ,  தோட்டத்தில்

ஓடி  விளையாடி  வளர்ந்த இந்த  இருவரும்,,,  இயல்பாகவே ,  ஒருவர்  

மீது ஒருவர்   ஆழ்ந்த  நேசம் கொண்டிருந்தனர்..  பருவ  வயது வந்தவுடன் ,

அரசனுக்கு  தெரிந்தால் அனுமதிக்க  மாட்டார் என்று  

பயந்து,  ரகசியமாக ஒரு   ஆலயத்தில்  மாலை  மாற்றித்  திருமணம்  

செய்து  கொண்டனர். அப்போது  சிறுமி  வனஜாவுக்கு  ,    வெறும்  

பதினான்கு  வயது  தான்!.


        இதற்குள், அரசன்  சிம்மபாலன்  , கேகயி  என்ற   வேறு ஒரு 

பெண்ணை  மறுமணம் செய்து    கொண்டான்..  அந்தக் கேகயிக்கு  

ஏற்கனவே நடந்திருந்த திருமணம்  மூலம்  ஒரு  பையன்    இருந்தான்..

கேகயியின்  கணவன் இறந்து   விட்டதால்,  அவள்  மறுமணம்  செய்து 

கொண்டாள் .  


அவளுக்கு நல்ல  மனது  கிடையாது.  சிறுமி  வனஜாவிடம், அவளுக்கு 

சிறிதும்  பிரியம் கிடையாது.  அவள்   மனதில் ஒரு   திட்டம் இருந்தது. 

வனஜாவை , தனது  முதல்  கணவன்  மூலம்   பெற்ற   பையனுக்குத் 

திருமணம்  செய்து    வைத்தால், சிம்மபாலன்  மறைந்த   பிறகு, ,தனது  

அசட்டுப் பையனை  அரசனாக்கி, அவன் மூலம், தனக்கு   முழு அதிகாரம் 

கிடைக்கும்  என்று  அவள் திட்டம்  போட்டிருந்தாள் 


       எனவே வனஜா  என்ன   செய்கிறாள், எங்கே    போகிறாள்,  

யாருடன்  பழகுகுகிறாள்  என்பவை  அனைத்தையும்,  ஆட்கள்   வைத்து

அவள்   வேவு  பார்த்துக்கொண்டே இருந்தாள் . வல்லபதேவனும் 

வனஜாவும்,  மாலை  மாற்றித்  திருமணம்    செய்துகொண்ட  விஷயம் 

அவளுக்கு  தெரிந்து  விட்டது.  உடனே  அவள்  அரசன்   சிம்மபாலனிடம் , 

உடனடியாக கோள்     சொல்லிவிட்டாள்   அரசனுக்கு  கடும் சினம்  

வந்துவிட்டது.   தனது   மகள் மிகவும்   சிறியவள்.  இந்த  

வல்லபதேவன்  என்ற   நன்றி  மறந்த   சாதாரண குல்த்து  இளைஞன் 

எனது   மகளை   ஏமாற்றி,,  எனது   ராஜ குடும்ப கௌரவத்தைக்  கெடுத்து 

விட்டான்.   தீராத  அவமானம் தந்து விட்டான் என்று   கோபம் கொண்டு 

 '  நீ இந்த   நாட்டிலிருந்து உடனடியாக  வெளியேற  வேண்டும்.! உடனே

 போய்விடு!    இல்லையானால், உன்னை   சிரச்சேதம் செய்து  விடுவேன்! 

 "  என்று  நாடு   கடத்தி விட்டான்.  


     பாவம்,  வனஜா.! சிறுமி ! என்ன   செய்வாள்? பிரிவதற்கு   முன்னர் 

இருவரும் , ரகசியமாகச்     சந்தித்து,  ஒருவரை ஒருவர்  ஒரு   நாளும் 

மறப்பதில்லை என்று   சத்தியம் செய்து கொண்டனர்.  அப்போது   

வல்லபதேவன்   வனஜாவுக்கு  ஒரு   தங்க   வளையல்  நினைவுப  

பரிசாக   அளித்து, அதை ஒரு நாளும்    தவறாமல், அணிந்து வரப் 

பணித்தான்.  அதுபோல வனஜாவும், தனது   அன்பன், 

வல்லபதேவனுக்கு ஒரு  மோதிரம்  தந்து,   இதை ஒரு  நாளும் தங்கள் 

விரலிலிருந்து அகற்றக் கூடாது   என  அன்புக் கட்டளை இட்டாள்.  

இவ்வாறு   அவர்கள்  பிரிய நேரிட்டது.  வல்லபதேவன்   , இப்போது

உத்கல    நாட்டை விட்டு  வெளியேறி, காந்தார சாம்ராஜ்யத்தின்   

தலைநகரம்   புருஷபுரம்  சென்றடைந்து , ஒரு   போர்  வீரனாக  பணி

ஆற்றி வந்தான்.  
       
   புருஷபுர   நகர ராணுவப்   பாசறையில்,   வீரர்கள்,  தத்தமது 

மனைவியர்  பற்றி  பெருமையாகப்  பேசிக்கொண்டிருந்தனர்..   அவர்களது, 

அழகு, மற்றும் கற்புக்கு  இணையே  கிடையாது  என்று  ஒவ்வொருவரும் 

கூறும்போது, ஒரு  காந்தார நாட்டு  வீரன் தனது  மனைவி  காந்தார

சாம்ராஜ்யத்தின் புகழ் பெற்ற   எழிலரசி.,  ஈடு இணையற்ற  கற்புக்கரசி 

என்று  பெருமையாக    கூறினான்.   அப்போது, வல்லபதேவன், " 

அழகியரும்,  கற்புடை  மங்கையரும்,  காந்தார சாம்ராஜ்யத்தில் 

மட்டும்தான்   உள்ளார்களா?    நான்  உத்கல தேசத்தில்   இருந்து  

வருகின்றேன். எந்த   ஒரு  பெண்ணும், என்  மனைவி   போல கற்பில் 

சிறந்த எழில்  மங்கையாக இருக்க முடியாது"  என்றான்..  உடனே காந்தார 

நாட்டு  வீரன் , "  நமக்குள் ஒரு   பந்தயம் வைத்துக்  கொள்வோமா

நான்  உனது நாட்டிற்கு சென்று உனது   மனைவியை மனம்   மயக்கி , 

அவளிடமிருந்து ஒரு   அன்புப்  பரிசைக் கொண்டுவந்து  .  காட்டட்டுமா?

நான்  சவாலில்  தோற்றால்,  உனக்கு  எவ்வளவு  பணம் 

வேண்டுமானாலும்  தருகின்றேன்.. மாறாக நான்   வென்றால், நீ  எனக்கு

என்ன  தருவாய்?" என்று   கேட்டான்.  அந்த  காந்தார வீரனின்  பெயர், 

விராகன் .  அப்போது   விராகனுக்கு   பதிலளித்து, வல்லபதேவன்  "

உனது   முயற்சி  எதுவும், என்  அன்பு  மனைவி   வனஜாவிடம்  

பலிக்காது..  நான்   இங்கு வர  புறப்பட்டபோது,    அவள் எனக்கு  நான் 

அணிந்திருக்கும்  இந்த வைர   மோதி.ரத்தை   கொடுத்து, ஒரு   போதும் 

அதை இழக்கக்  கூடாது  என்றாள் .   நானும்  அதுபோல ,  அவளுக்கு 

அழகிய ஒரு தங்க    வளையல்  அணிவித்து, அதை   எந்நாளும் 

அணிந்திருக்க   பணித்தேன்.   நீ  இந்தப்  போட்டியில் வென்றால், எனது 

உயிரை விட  உயர்ந்த இந்த  மோதிரத்தை உனக்கு   தந்து  

விடுகிறேன்!" என்றான்.


       இப்போது , அந்த   காந்தார நாட்டு  விராகன், அந்த மோசமான 

போட்டியில்    வெல்வதற்காக, உத்கல     நாட்டின்  அரசவைக்கு சென்று

இளவரசி  வனஜாவை   சந்தித்து, தான்   அவளது  கணவன் வல்லபனின்

நண்பன் என்று  கூறி,  அவளிடம்   பழகினான்.  .தனது   

கணவனின்  நண்பர்  என்பதால்,   வனஜாவும்,  அவனுடன்    பேசினாள் .


    சில  நாட்கள், சென்ற  ,பின்னர்  , விராகன்  , வனஜாவிடம் 

 தகாத  முறையில்  ஆசை  வார்த்தைகள்  பேசினான்.. அந்த 

 நொடியிலேயே , வனஜா  அவனை வசை  பாடி,  வெறுத்து   ஒதுக்கி, "  

 இதுதான் எனது   கணவரிடம் நீ  கொண்டுள்ள   நட்பின்  லட்சணமா

 துரோகி! இனி என்   முன்னால்  நீ   வராதே! எங்கேனும்   தொலைந்து  

 ஒழிந்து  .போ !" என்று   சொல்லி அவனை   விரட்டி  விட்டாள் . 


      வனஜாவின்  உதவிப்  பெண்கள் சிலருக்கு  பணம் கொடுத்து, ஒரு 

பெட்டிக்குள் விராகன் பதுங்கிக்கொண்டு, வனஜா இல்லாதபோது , அவளது 

அறைக்குள்  அந்தப்    பெட்டியை   வைக்கச்  சொல்லி உள்ளே  புகுந்து 

விட்டான்.  இதெல்லாம்  அறியாத   வனஜா  ஆழ்ந்து   உறங்கும்போது

அவளது   கழுத்தின் முன்புறம்   இருந்த மச்சத்தைக்  குறித்துக்  கொண்டு

மிகவும் கவனமாக அவளது   கையில் அவள்   அணிந்திருந்த     தங்க 

வளையலை மெதுவாக  உருவி எடுத்து விட்டான். அந்த   அறையின்  

அமைப்பையும், அலங்காரச் சிலைகளையும் கவனமாக நினைவில்   குறித்து 

வைத்துக் கொண்டு, மீண்டும் அந்தப்  பெட்டிக்குள்    . பதுங்கிக்  கொண்டான்.


    மறுநாள்   காலையில்,  வனஜா   அறையை  விட்டு வெளியே சென்ற  

நேரத்தில், விராகன்  பணம் கொடுத்து  வைத்திருந்த   அந்த   கெட்ட 

வேலைக்காரிகள்,   பெட்டியை  எடுத்து   தோட்டத்தில்   வைத்தனர்.

உடனே,  விராகன்    பெட்டியை விட்டு  வெளியே  வந்து , அவசரம்  

அவசரமாக  , அரண்மனையில்    இருந்து   தப்பி  , ஓடி, விரைவில் தனது 

நாட்டின் புருஷபுரம்  நகரத்தை   அடைந்தான்..
12-3-2020  


புருஷபுரம்  சென்றடைந்த   விகாரன்,,வல்லபதேவனிடம்  தனது 

பந்தயத்தில் வென்று விட்டதாகக் கூறி,   இளவரசி,  வனஜவல்லியின்  

படுக்கை  அறையை துல்யமாக   வர்ணித்து,  அவளது  முன்கழுத்தில்  

இடதுபுறம் தான் கண்ட   பெரிய  மச்சம் பற்றியும் குறிப்பிட்டு

இறுதியாக     தனக்கு  அவள் பரிசாகத் தந்தாள்  என்று  கூறி  வல்லபன் 

கொடுத்திருந்த  வளையலைக் ,  காண்பித்தான். வல்லபன்  தனது 

மனைவியின்  துரோகத்தை  நினைந்து மனம்   உடைந்து , 

அவமானத்தில், தான்   அணிந்திருந்த மோதிரத்தைக்  கழற்றி விகாரனிடம்

கொடுத்துத்   தோல்வியை ஒப்புக்  கொண்டான்.  


   
 உடனடியாக,  அவன் தனது   நெருங்கிய நண்பன் 

சிநேகதேவனுக்கு  ஒரு   கடிதம்  எழுதினான்.  அதில், " என்  அருமை 

நண்பா!  எனது மனைவி  வனஜவல்லி   எனக்கு  துரோகம் செய்து விட்டாள்
நான் கொடுத்திருந்த  பரிசு வளையலை  அவளது கள்ளப்  புருஷனுக்குக் 

கொடுத்து விட்டாள் .  அவள்   வாழ்வதற்குத் தகுதி   இல்லாத ஒரு  நீசப் 

பெண். நான்   அவளைச் சந்திக்க   வருவதாக , நமது   நாட்டின் 

எல்லைக்கு கொண்டுவந்து,   அவளைக்  கொன்று விடு.  அதுவரை  எனது 

மனதிற்குச்  சற்றும்  நிம்மதி  இருக்காது." என்று    எழுதியிருந்தது.


 அதே  போல வல்லபன்,  வனஜாவுக்கு ஒரு  கடிதம் எழுதினான். "  


 அன்பே! 

உன்னைக்  காணாமல் எனக்கு   வாழ்க்கையில்  பிடிப்பே இல்லை.  என்ன

நேர்ந்தாலும்  சரி என்று   துணிந்து, உன்னை  ஒரு   தடவை காண நமது 

நாட்டின்  வடக்கு  எல்லையில்,  காத்திருப்பேன்.  நீ  சினேகனுடன் 

புறப்பட்டு அங்கு  வந்து    சேர்வாய்"என்று   எழுதினான்.


     சினேகன்   , வனஜவல்லி   அப்படி  எல்லாம்  முறை தவறி 

நடப்பவள்   அல்ல என்று   கருதினான்.  எனினும் , வல்லபன்  உன்னை 

காண வந்துள்ளான்  நாட்டிற்குள்  வர   முடியாது   என்பதால்,அவன் 

நாட்டின் எல்லையில்   காட்டுப்  பகுதியில் வந்து    காத்திருக்கிறான். 

நாம்   போகலாம் வா!  என்று   வனஜவல்லியை  அழைத்துக்கொண்டு ,

நாட்டின்  எல்லைக்குச்    சென்றான். 


    அங்கு சென்றவுடன்,  " தங்கையே!   உன்  மீது எனது  நண்பன்   

வல்லபனுக்கு ,  சந்தேகம் .தோன்றிவிட்டது. உன்னைக் கொல்லச் சொல்லி 

எனக்கு   உத்தரவு கொடுத்துள்ளான்.   என்னால்  அதை  மீற முடியாது. 

ஆனால் எனக்கு   உன்மேல்  எந்த  வித ஐயமும்  சற்றும்  இல்லை.  நீ 

மிகவும்  இளம்  குழந்தை.. ஆண்   வேடம்  போட்டுக்கொண்டு ,  இந்த 

நாட்டை  விட்டுப்  போய்விடு.  நான்  உன்னைக்  கொன்றுவிட்டதாக 

வல்லபனுக்கு  பதில் கடிதம்  அனுப்பி  விடுகிறேன்..எனக்கு   வேறு  வழி 

எதுவும்   தெரியவில்லை.  என்னை மன்னித்து விடு.    வழியில்  உனக்கு 

உடல்    உபாதை  எதுவும்    நேர்ந்தால்,  இந்தக்      குப்பியில்  உள்ள 

விசேஷ  ஒளஷதத்தை   உட்கொண்டால்,  உனது  உபாதைகள்   

விலகிவிடும்.. சென்று  வா!   தேவதைகள்  உனக்கு   துணை  நின்று  

காப்பாற்றுவார்கள் " என்று  கூறி  அவளை  அனுப்பி   வைத்தான்..


தனது   எதிரிகளைக்   கொல்வதற்காக, கெட்ட  புத்தி கொண்ட கேகயி 

அரண்மனை மருத்துவரிடம் ,  கடும்  விஷம்  ஒன்று   தயாரித்துக் 

கொடுக்குமாறு   பணித்திருந்தாள். அவளது   கொடிய  சித்தம்  பற்றி  

நன்கு  அறிந்திருந்த  அந்த   வைத்தியர் ,அப்படி  எதுவும்  விஷம்   

,தயாரித்துக்   , கொடுக்காமல், அதற்குப்   பதிலாக, மிகவும்   ஆழ்ந்த 

தூக்கம்  தரும்  மருந்தை விஷம்  என்று  கூறி    கேகயியிடம்

கொடுத்திருந்தார்.   

 
வல்லப  தேவனுக்கும், வனஜவல்லிக்கும் , உண்மையான  நண்பனாக 

விளங்கிய சினேகனை , கேகயி  வெறுத்தாள் .  அதனால்  அவனை  

முன்பொருநாள்  அழைத்து, "  சினேகா!  வனஜவல்லிக்கு நீ   இவ்வளவு 

உண்மையாக  இருப்பது எனக்கு  மிகவும்  உவகையாக   உள்ளது. உனக்கு 

ஒரு  பரிசு   தர விரும்புகிறேன்.   இதோ இந்தக்  குப்பியில்  மிகவும் 

அபூர்வமான   மருந்து உள்ளது.  எந்த  ஒரு   வியாதியும்  இதனால்  

பறந்து   ஓடிவிடும். தேவைப்  படும்போது நீ  இதை  பயன்படுத்திக்கொள் !:

என்று  கபடமாக  சினேகனுக்கு  அந்தக்  குப்பியை   அளித்தாள்  மருந்து  

என்று   எண்ணி அவன்  அதை   அருந்திச்   சாகட்டும் என்ற கெட்ட 

எண்ணத்தில் அளித்தாள்   சினேகனுக்கு    அது   பற்றிய  உண்மை 

தெரியாது.அந்த மருந்தை  சினேகன் ,  நல்ல எண்ணத்தில்

வனஜவல்லிக்கு  கொடுத்தான்.


  12-3-2020  11 am
--------------   
ஆண்    உடையில், இவ்வாறு  வனஜவல்லி  , காட்டுப்    பாதையில்,

காந்தார  நாட்டை  எப்படியாவது   சேர்ந்து , தனது   அன்பன் வல்லபனை 

பார்த்து   உண்மையை விளக்க  வேண்டும் என்று  கிளம்பி,  திசை  

தெரியாமல்  தடுமாறி ,  பசியால் வாடி, பயணித்த போது ,   ,நாட்டின்  

எல்லையில்   இருந்த  மங்களேசன்  வசித்து வந்த மலைக்   குகையைக் 

கண்டாள் . அந்த  குகையில்  எதோ உணவு   வாசம்   இருந்ததால்,  

உள்ளே  நுழைந்து   பார்த்தால். அங்கு   யாருமே இல்லை.  ஆனால்  

அங்கு   ஏற்கனவே இருந்த   பழைய   உணவை அமிர்தம்  என நினைத்து 

பசி   ஆறினாள் . 

     அந்தி  சாய்ந்த நேரத்தில்,  மங்களேசன்  தனது   இரு  வளர்ப்பு 

மகன்களுடன்  தனது  குகைக்கு   திரும்பினான்.  முதலில்  குகைக்குள் 

நுழைந்த  அவன் "  பிள்ளைகளே!   வெளியிலேயே   நில்லுங்கள். 

குகைக்குள்  எதோ  ஒரு  ஜீவன்  நமது  உணவை  உண்டு கொண்டுள்ளது.

தேவதை  போல  உள்ளது."   " . அப்பா! என்ன  விஷயம்?  " என்று 

மகன்கள்   கேட்டபோது, அவன்  மீண்டும் " உள்ளே  ஒரு  தேவலோக 

வி  உள்ளது  போல   நினைக்கிறேன்! அபாயம்!" என்றான்!  

ஆண்   உடையில்  வனஜவல்லி   அவ்வளவு  வனப்புடன்  ஜொலித்தாள்.


    பேச்சுச்  சத்தம்  கேட்டு வனஜா  வெளியே  வந்து "   ஐயா!  என்னை 

மன்னித்து  விடுங்கள்.  நான்   திருட   வரவில்லை. பசி   தாங்க 

முடியவில்லை.   அதனால்,  நீங்கள்   வைத்திருந்த உணவை    

உண்டுவிட்டேன். அதற்கான  பணத்தை  இப்போதே கொடுத்து  விடுகிறேன். 

என்னை   ஒன்றும் செய்து   விடாதீர்கள் " என்று   கைகூப்பி  

வேண்டினாள்.


"  சே! அதெல்லாம்  ஒன்றும் வேண்டாம்  பையா"  என்று   அவர்கள் 

மறுத்த போது   " என்  மேல்  மிகுந்த   கோபத்தில் உள்ளீர்கள்.  நான் 

எதையும் திருட    வரவில்லை.  தரை  முழுதும்  தங்க  காசுகள்  

இறைந்திருந்தாலும் நான்   அவற்றை  தொட்டிருக்க   மாட்டேன். எனக்கு 

வேண்டியிருந்தது  சிறிதளவு உணவு.  அவ்வளவே!"  என்றாள் . நீங்கள் 

என்னைக் கொன்றாலும்,  அதற்கு  முன்பே  பசியால்  நான்   

இறந்திருப்பேன் என்றாள்" 


  " பையா!  நீ    யார்?  எங்கிருந்து   வருகிறாய்? எங்கே   போகிறாய்?" 

 உன் பெயர்  என்ன? "என்று மங்களேசன்    கேட்டான்..   

     
 " ஐயா! என்  பெயர்,   விமலன். எனது   உறவினர் ஒருவர்  என்னை  

 காந்தார  தேசத்துக்கு  கூட்டிச்  செல்ல   இருந்தார். அவரைத்  

 தவறவிட்டு   விட்டேன். வழி  தெரியாமல்,   இங்கு வந்து  விட்டேன்"  

 என்றாள் .

   மங்களேசன்   அப்போது," பையா!    பயப்படாதே! அப்படி  ஒன்றும் 

பெரிய   தவறு எதுவும் நீ  செய்து  விடவில்லை.   நாங்கள் குகையில் 
   
வசிப்பதை  வைத்து  நாங்கள்  காட்டுமிராண்டிகள்  என்று  நினைத்து  

பயப்படாதே!  உன்னை  நாங்கள்  ஒன்றும்  செய்துவிட மாட்டோம்.  

இருட்டி   விட்டது. நீ   இங்கேயே  தங்கி  இளைப்பாறி பிறகு  உனது  

பயணத்தை தொடங்கலாம்.!    பையன்களா!   புதுப்  பையனுக்கு நல்வரவு  

சொல்லுங்கள்   என்றான்.   பிறகு   அன்று  வேட்டையாடிக்  கொண்டு 

வந்திருந்த ஊண்   வகைகளை  சமைக்க , தொடங்கினார்கள்..  நமது  

வனஜா ( ஆண்    வேடத்தில்)  கை   தேர்ந்த சமையல்காரி,  ( அந்தக்  

காலத்தில்,  பெரிய   செல்வந்தக்  குடும்பத்துப் பெண்கள்  கூட  , 

தாங்களே   சமையல்  கலையில்  கை   தேர்ந்தவர்களாக  இருந்தது  

வழக்கம்.).  வனஜா  செய்த சமையல்  ,  அபாரமாக மணத்தது.  பாவம்!  

அரை குறையாக  எதையோ  உண்டு  காலத்தைக்   கழித்த யுவர் 

இருவருக்கும்,  அவளது  சமையல்   தேவாம்ருதம் போல  இருந்தது. 

அவர்களுக்கே   தெரியாத  ரத்த   உறவினால், அந்த    சிறுவர்கள், 

தங்களது  தமக்கை  வனஜா மீது   பார்த்த  உடனேயே பாசம்  கொண்டு 

விட்டனர்.    வனஜாவும், அந்த  இரு   சிறுவர்களும் தனது  

தம்பிகள்தான் என்று  தெரியாமல்,   அவர்களை அவளது   இதயத்தில் 

ஏற்று,  தப்பிக்க  முடியாத   வகையில்,பூட்டி  வைத்துக் கொண்டாள்


   
  அடுத்த நாள் , மங்களேசனும்,  அவனது வளர்ப்புப் பிள்ளைகளும்  

காலையில் வேட்டைக்கு கிளம்பியபோது,  விமலன் ( வனஜா) அவர்களுடன்
செல்ல  முடியவில்லை.  தனது கணவன் பற்றிய துயரம் மற்றும்   பயங்கர 

உடல்  அசதியினால்   அவள்  குகைக்குள்ளேயே தங்கிவிட்டாள் . " சரி!  நீ 

இங்கேயே  இருந்து  போதிய ஒய்வு எடுத்த்துக்கொள் "  என்று  கூறி மற்ற 

மூவரும்  வழக்கம்  போல வேட்டைக்கு சென்றனர்.  போகும்  வழி 

முழுதும், அவர்கள்  விமலனின்  முகத்து  அழகு, நல்ல குணம்

அருமையான  காரிய நேர்த்தி  பற்றி பேசிக்கொண்டும் வியந்து கொண்டும் 

சென்றார்கள். 


அவர்கள்   சென்ற சிறிது  நேரத்தில்,  வனஜா , உடல்   அசதி  

அதிகமாக   இருந்ததால், சினேகன்  தந்திருந்த  குப்பியில்  இருந்த 

மருந்தை  அருந்தினாள் அதன் விளைவாக,   மிகவும்  ஆழ்ந்த  உறக்கத்தில் 
மயக்கம்  உற்றாள் .


இருட்டுவதற்கு   சற்று முன்பாக,  மங்களேசனும்,   இரண்டு   

பையன்களும்,  குகைக்குத்   திரும்பி     வந்தார்கள்.. அயர்ந்து உறங்கும்,  

விமலனின்   நித்திரையைக்  கெடுத்து   விடாமல் , மிகவும்  ஓசைப்  

படாமல் அவர்கள்   குகைக்குள்  நுழைந்தார்கள்..   ஆனால்,  வெகு நேரம் 

ஆகியும்  எவ்வளவு சத்தம்  போட்டு    கூப்பிட்டாலும், விமலன் 

அசையாமல் இருந்ததால், அவள்  இறந்து   போய்விட்டாள் என்று  

அறிந்து,  அவளது இரண்டு   இளவல்களும்  (  தாங்களே   அறியாமல்) 

மிகவும்  துயரம்  உற்று    கதறினர்.  மங்களேசனும்,   அந்த புதுப் 

பையன்   விமலனை ,  காட்டிற்கு  கொண்டு  சென்று ,  புதை  குழி  

வெட்டி, அவனது  உடலை  குழிக்குள்   இறக்கி,   காட்டில்  கிடைக்கும் 

இலைகள்,தழைகள்,   மலர்கள்  அனைத்தையும் அந்தப்    பொன்னுடல் 

மீது போர்த்தி   மறைத்து,   அவர்களின் வழக்கம்  போல்  ,     சோக 

கீதங்கள்   பாடி,  மிகுந்த  துக்கத்துடன்  குகைக்குத் திரும்பினர்.  

போவதற்கு   முன்னர்,"  எமதருமை விமலனே !  ஒவ்வொரு நாளும்  

நாங்கள்   வந்து,   உனது  அழகிய முகம் போல      மலர்களும், உனது 

நாளங்களில்  தெரியும்  நிறத்திற்கு  ஏற்ப   இலை மலர்களும், உனது  

மொழி  போன்ற  இனிமையான  பச்சிலைகளையம்   இங்கு   நிறைத்து

நாளும்  உனது  நினைவைப்   . போற்றுவோம்..  பனி  பொழியும் 

காலத்திலும்,   தூய பனித்   துளிகள்   தெளித்து,  உன்னை  நினைவு 

கொள்வோம் " என்று   பலவாறாக  புலம்பி அந்த   இடத்தை   விட்டு 

சற்றும்  மனமில்லாமல்  அகன்றனர்.  
------------------- ---------------------------


    அடுத்த நாள்  அதிகாலையில்,  வனஜா  மயக்கம்  தெளிந்து   எழுந்தாள்.
தனது  உடலின் மீது  இருந்த  இலைகள்,  தழைகள், மலர்களை   எளிதாக 

உதறிவிட்டு,  "  இது  என்ன வினோதம்?   நான் ஒரு  குகையில் 

அல்லவா  இரு  சிறுவர்களுடன்  இருந்தேன்! இங்கு  எப்படி  வந்தேன்? 

எது  நிஜம்? இது  கனவா என்று  குழம்பி,  குகைக்குச்  செல்லவும்   வழி

தெரியாமல், ,   சிறு பெண் தானே!   பல நூறு  காதங்கள்  தள்ளி 

இருந்த     காந்தார  நாடு, எதோ  அடுத்த  ஊர்   என்ற  நினைப்பில் தனது 

கணவனைத்  தேடி  தனது   பயணத்தைத்  தொடங்கினாள்.  



    அவளது   நல்ல  நேரமோ  அல்லது கெட்ட  நேரமோ,  அந்த 

நாளில்,காந்தார   நாட்டின்    சைன்யம் , உத்கல  நாட்டின்  மீது 

படையெடுத்து அந்தக்   காட்டின் வழியே  வந்தது.   அந்தப் படையின் 

யவனத் தளபதி,  விமலனைப்  பார்த்து,  தனது   உதவியாளனாக 

சேர்த்துக்கொண்டான்... அந்தப்    படையில்,  வனஜாவின் கணவன் 

வல்லப  தேவனும் இருந்தான்.   எப்படியாவது தனது  நாடு  கண்டு,

தனது   நாட்டைக்  காப்பாற்ற யுத்தத்தில்   உயிர் விட்டோ,  அல்லது 

அரசனின்  தண்டனை  பெற்றோ , உலகை  விட்டு   நீங்க  உறுதியுடன்

அவன் அந்த   படையெடுப்பில் பங்கேற்று  அங்கு வந்திருந்தான்..  தானே 

உத்தரவிட்டிருந்த  படி, தனது   நண்பன்  சினேகன்  வனஜாவைக்

கொன்று   விட்டான்.  பிறகு  நான்  உயிருடன்   இருந்தால் என்ன 

இல்லாவிட்டால் என்ன  என்று  வல்லபன்   ,  மனம் வாடி  அந்த 

முடிவெடுத்து போர்  முனைக்கு   வந்திருந்தான்.. 
------ 


   .    
  இப்போது , உத்கல நாட்டின்   படைகளும்,  மன்னா சிம்மபாலனின் 

தலைமையில்,  காந்தார  நாட்டின்  சேனையுடன்  மோதின. மங்களேசன் 

முன்னரே  ராணுவ  தளபதியாக  இருந்தவன்.   மேலும்,தான்  தனது 

அரசனுக்கு  செய்த  மாபெரும்  தவறை  மனமார  உணர்ந்து , வருந்தி 

பிராயச்சித்தமாக ,  கடும். போர்   புரிந்தான்  வல்லப  தேவனும் 

ஆக்ரோஷத்துடன் , காந்தார  நாட்டின்   சேனைக்கு   எதிராக போர் 

புரிந்தான்.. 


மங்களேசன்து  இரண்டு  வளர்ப்புப்  பிள்ளைகளும்,   தங்களது  

வெற்றிக்காகப் தந்தையின்  ராஜ்ய படையில்  போர்  புரிகிறோம் 

என்பதெல்லாம் அறியாமல்,  தீரத்துடன்  போர்   புரிந்து , அரசனின் 

உயிரையும்  காப்பாற்றி ,  போரில்  வெற்றி பெற்றுத்   தந்தனர் 

இவ்வாறு ,

காந்தாரத்தின் யவனத் தளபதி, அவனது  உதவியாளன் விமலன், 
  
வல்லபதேவன்,  போரில்  சாகசங்கள்   நிகழ்த்திய மங்களேசன், அரசனின் 

இரண்டு  புதல்வர்கள்,(  அவர்களுக்கும்  தெரியாது- அரசனுக்கும் 

தெரியாது! )

வல்லபனின் நண்பன்  சினேகன், காந்தார  படையுடன்  வந்திருந்த

விராகன் என்று   அனைவரும் , மன்னா  சிம்மபாலன் முன்பு கொண்டு 

வரப்பட்டனர்.


     காந்தாரத்தின் யவனத்   தளபதிதான்  முதலில்  பேசினான். "  அரசே!  

நீங்கள்  எனக்கு என்ன  தண்டனை கொடுத்தாலும்  ஏற்றுக் கொள்கிறேன். 

ஆனால்  , இந்த   எனது  இளம் உதவியாளன்  விமலனை  விடுவித்து 

விடுங்கள்.  அவனை இப்போதுதான்   இங்கு  இரண்டு  நாட்களுக்கு 

முன்னால்தான்  கண்டெடுத்து  எனது  படையில்   சேர்த்துக்   கொண்டேன்

அவன்  மிகவும்  இனியவன்.  மேலும்   உங்கள் நாட்டின்    பிரஜை.

அவன்  ஒரு   குற்றமும்   செய்யவில்லை. அவனைத்   தண்டிப்பது  நீதி 
  
அல்ல"என்று  மிகுந்த   கௌரவத்துடன்    வேண்டினான்..  அரசன்  

சிம்மபாலன் அன்று  தான்  பெற்ற வெற்றியினால் , மிகவும்  மகிழ்ச்சியான

மன நிலையில் இருந்தான்.  அவன் விமலனை   பார்த்தவுடன், தனது 

மகள்  தான்  இந்த ஆண்    உருவில் உள்ளாள்  என்பதை 
  
அறியாவிட்டாலும், "  இந்த   பையனை நான்   எங்கோ   

பார்த்திருக்கிறேன்.. இனியவனாகத் தான்   தோன்றுகிறான்.. மேலும்  எனது 

நாட்டின்  பிரஜை.    எனவே  பையா ! நீ   என்ன  கோரிக்கை  

வைத்தாலும்   அதை  உடனே  நிறைவேற்ற உறுதி    தருகிறேன். இந்த 

யவன   தளபதியின்   விடுதலையை நீ   கேட்டாலும்  அதையும்  தர 

நான் தயார்"  என்றான். 


     ஆண்  உடையில்  இருந்த   வனஜாவை , சினேகன்   மட்டுமே 

அறிந்து   கொண்டான். அதுபோல  ,  மங்களேசனும்,  அவனது  இரண்டு 

வளர்ப்புச்   செல்வங்களும்,. விமலனைப்    பார்த்த்து,வியந்து,   இவனை 

நாம்  சில நாட்களுக்கு   முன்புதான் காட்டில்   புதைத்து மலர்கள்  தூவித்

திரும்பினோம்! அடுத்த  நாள்  சென்று   பார்த்தபோது  ]அவனது  உடல் 

அங்கு  இல்லை!  அது  எப்படி  ? என்று   தங்களுக்குள்  

பேசிக்கொண்டனர். அப்போது மங்களேசன்,  "  சிறுவர்களா! நாம்   மன்னர் 

முன்னிலையில்   உள்ளோம்.  பேசக்கூடாது .  அமைதியாக  இருங்கள் 

என்று   மெல்லிய  குரலில் எச்சரித்தான்.   வனஜா , அங்கு  இருந்த  

கொடியவன் விராகன்    விரலில்,  வல்லவனுக்கு தான்   அளித்திருந்த 

மோதிரத்தைப் பார்த்த்து


   " அரசே!  இதோ இங்கு   நிற்கும் காந்தாரன் (  விராகன்)    கையில் 

அணிந்திருக்கும்  மோதிரம்  அவனுக்கு  எப்படிக்  கிடைத்தது என்பதை 

எந்த  உண்மையையும்   மறைக்காமல்,  உள்ளது  உள்ளபடி  கூற.ச் 

செய்யுங்கள் !  அதுதான் எனது   வேண்டுகோள் " என்றான் (,ள் ).  

அரசனும்,    விகாரனிடம், "  டே!  இந்தச்  சிறுவன் எதோ     சரியான 

காரணத்தோடுதான் இந்த   வேண்டுகோளை  வைக்கிறான் என்று  எனது  

உள்ளுணர்வு    கூறுகிறது!. நீ  நடந்தவை   அனைத்தயும் கூறாவிட்டால்

உன்னை  வாழ்நாள்   முழுவதும்  சித்ரவதை  செய்ய உத்தரவிடுவேன்! 

ஜாக்கிரதை!  உண்மையை  நடந்த படி  ,கூறு! " என்று    உத்தரவிட்டான்.


    அப்போது    விகாரன்,  பயத்தில்   நடுநடுங்கி,  தான்  காந்தார  

நாட்டின்   தலைநகரம் ,  புருஷபுரத்தில்,  ராணுவ  பாசறையில் 

வல்லபனோடு  போட்டி  வைத்தது,  அதில் வெற்றி  பெற  இளவரசி
 
வனஜவல்லியை சந்தித்து  

தகாத  முறையில் பேசியது,  அப்போது  இளவரசி   தன்னை  வெறுத்து

எச்சரித்தது , எப்படியும்  சவாலில்   வெல்ல,   தான்  ஒரு  பெட்டிக்குள் 

புகுந்துகொண்டு, இளவரசியின்   சயன  அறையில்   ஒளிந்திருந்து, அவள் 

உறங்கும்  போது  , அவள்  அறியாமல்  ,அவளது  கையில்  இருந்த 

வளையலை அகற்றித்  தப்பியது,   அதைக்  வல்லபனிடம்   காண்பித்து,

வனஜா  தனனிடம்  மயங்கி  அன்பளிப்பாகக்  ,கொடுத்தாள் என்று  

பொய்   சொல்லி வல்லபனிடமிருந்து  அந்த  மோதிரத்தைப்   பெற்றது 

என்ற  விவரங்கள்   எல்லாவற்றையும் கக்கினான்.  


   இவ்வாறு  வனஜா சற்றும்  குற்றமற்றவள்   என்று   அனைவருக்கும் 

தெரிந்த நேரத்தில்,  வல்லபன்  அரசன்  முன்பு  மண்டியிட்டு  " 

குற்றமே  இல்லாத  வனஜாவை  நான் சந்தேகப்பட்டுக்   கொலை 

செய்து   விட்டேன். எனக்கு   உடனடியாக  மரண தண்டனை   கொடுங்கள் 

என்று    கெஞ்சினான். தனது   ஆருயிர்  அன்பன்  வல்லபன்   இவ்வாறு 

மனம்   வருந்துவதைக் காணச்   சகிக்காத  வனஜா  தனது  ஆண் 

உடையை அகற்றி,  இளவரசி   வனஜாவாக அரசவையில்  தோன்றி 

அனைவரையும்  மகிழ்ச்சிக்கடலில்   மூழ்கடித்தாள் . இப்போது  அரசனின் 

செல்வ மகளாகவும்,    இளவரசியாகவும், தன்னைக்   காப்பற்றிய

யவனத்  தளபதியின்   விடுதலையையும்   வேண்டினாள். அரசன் 

அதையும்  நிறைவேற்றி  இனி ஒரு  காலத்திலும்  தனது   நாட்டிற்கும்

காந்தார  நாட்டிற்கும்   பகைமையும் போரும்  நடக்காது   என்று  அந்தத் 

தளபதி  மூலம் உத்தரவாதம்  பெற்றான். 


 அரசன்,  போரில்  தனது  உயிரைக்   காப்பாற்றிய   வல்லபனை 

பெருமைப் படுத்தி,  தனது   மருமகனாக  ஏற்றுக்கொண்டான்.


 இப்போது  மங்களேசன்  அரசன்  முன்  பணிந்து,   தன்னுடன்

 இத்தனை   ஆண்டுகள்  வளர்ந்து  வந்த இரண்டு   சிறுவர்களும், 

சிம்மபாலனின்   குழந்தைகள்தான் என்ற   ஆனந்தச்   செய்தியைக் கூறி 

அரசனின்    மன்னிப்பைக்  கோரினான்.  அரசன்  சிம்மபாலனுக்கு 

அளவில்லா  இன்பம் பொங்கியது.   இவ்வளவு  ஆண்டுகளும் தனது  

பிள்ளைகளை  அன்புடன்   வளர்த்து,  பெரும்  வீரர்களாக 

உருவாக்கியதற்கு   நன்றி  தெரிவித்து,   மங்களேசனை மனப்பூர்வமாக 

மன்னித்து விட்டான்.  தளபதி  பதவியையும்    மீண்டும் அளித்து 

கௌரவப்படுத்தினான்..  காட்டுக்  குகையில் தான்  கண்ட இரண்டு  

இனிய  சிறுவர்களும்  தன   இளவயதில்  காணாமல்  போன சொந்தத்

தம்பிகள் என்று  அறிந்து  , வனஜா  மாபெரும்   ஆனந்தம் அடைந்தாள். 

அதுபோல  , அன்பு  விமலன்   தமது சொந்தத் தமக்கை  வனஜா என்று  

அறிந்து  , இரண்டு  சிறுவர்களும்   பெரும்    உவகை அடைந்தனர். 


     இவ்வளவு   குழப்பத்திற்கும்  காரணமான  விகாரனைக்  கூட அரசன்

மன்னித்து,  " நீ  செய்த   குற்றத்திற்கு , மரண  தண்டனை 

தரப்படவேண்டும். இருந்தாலும்,  இந்த  மங்களகரமான  நேரத்தில் 

உனக்கு  மன்னிப்பு தருகிறேன்.   தப்பித்து உனது   நாட்டிற்கு   ஓடிவிடு 

இனி   ஒருபோதும்  இதுபோன்ற    இழிசெயல் எதுவும்   செய்யாமல் , 

திருந்தி வாழ்க்கை  நடத்து.  "  என்று   அவனையும் கூட  . 

காந்தாரத்துக்கு விரட்டி அடித்து விட்டான். 


    அரசனின்   இரண்டாவது  மனைவி   கேகயி, அவளது   மக்கு மகன் 

செய்த   அராஜகத்தினால்,  எதிரிகளால்   தண்டிக்கப்பட்டு , அவளது 

மகனுடன்   கொல்லப்பட்டாள் 


          இவ்வாறு,  அரசன்  சிம்மபாலன்  , தனது   அருமைச் 

செல்வங்கள், மருமகன்  வல்லபன்தளபதி  மங்களேசன்  , என  அனைத்து 

அன்பர்களுடனும் நண்பர்களுடனும்,  இனிதே வாழ்ந்து   இன்புற்றான்.


                          சுபம். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@

                                   .

Popular posts from this blog

MERCHANT OF VENICE ( in THAMIZH)

                                                        MERCHANT OF  VENICE                                                PLAY  BY  SHAKESPEARE  ( 1600) TALE     RETOLD    BY  MARY  LAMB ( 1800) ( Tales  from Shakespeare) Adaptation/ Translation  in Thamizh  (   தமிழ் ) by RSR =============================== This  is  the  tenth  tale   in the  proposed  10  tales. ------------------------------------------------------ ------------------------------------------------ INDEX TO THE OTHER TALES  IN THAMIZH AT https://shakespeare4tamils.blogspot.com/p/index-page.html original play by the BARD http://www.opensourceshakespeare.com/views/plays/plays.php http://www.opensourceshakespeare.com/views/plays/playmenu.php?WorkID=merchantvenice ------------------------------------------- The  original  text  of  the  tale by Mary Lamb  is at https://comediesmarylamb.blogspot.com/2020/02/merchant-of-venice.html?view=flipcard ------------------------------------------------- Name

ALL IS WELL THAT ENDS WELL

                     ALL'S  WELL THAT  ENDS WELL PLAY  BY  SHAKESPEARE  ( 1600) RETOLD  BY MARY LAMB  (1800) ADAPTED AND TRANSLATED  BY  RSR IN THAMIZH ========================================= COPY RIGHT  MATERIAL. ========================================== https://comediesmarylamb.blogspot.com/2020/03/alls-well-that-ends-well.html?view=flipcard                                                நல்லதே  வெல்லும் விதேஹ   நாட்டின்   மன்னன் , கீர்த்திசேகரன்..    தனது ஆருயிர்   நண்பன் ஜெயதேவன்   எதிர்பாராத விதமாக   இளம் வயதிலேயே   பிரிந்து விட்டதை   நினைத்து ,,   ஜெயதேவனின்   மகனை அரசவைக்குக் கொண்டு    வந்து   அங்கு ஒரு    முக்கிய   பதவியில்   அமர்த்த நினைத்து ,    அவனை   அழைத்து    வர , மிகவும்   அனுபவமிக்க , பண்பாளன் , கோமான்    சுதர்சனசேனனை பிரயாகை   நகருக்கு அனுப்பி     வைத்தான்.       ஜெயதேவனின்    மகன் பெயர்    விக்ரமசேனன்..   நல்லவன் தான்   .   எனினும் தனது    உயர்குலப்   பெருமை பற்றி   சற்று    கர்வம்    கொண்டவன்..   அவன் அன்னையின்   பெயர்   அனசூ

AS YOU LIKE IT (THAMIZH)

                                                                                                               Play by Shakespeare  ( 1600) Retold by  Mary Lamb   (1800)          ( Tales from Shakespeare) Adaptation/translation  by RSR  in thamizh  தமிழ்     AS YOU LIKE IT original english tale  at https://comediesmarylamb.blogspot.com/2020/02/as-you-like-it.html?view=flipcard ------------------------------------------------------ Fil m  with  subtitles at    h ttps://www.youtube.com/watch?v=u9hTxzLHU3I -------------------------------------------------------------------------- INDEX TO THE OTHER TALES  IN THAMIZH AT https://shakespeare4tamils.blogspot.com/p/index-page.html original play by the BARD http://www.opensourceshakespeare.com/views/plays/plays.php http://www.opensourceshakespeare.com/views/plays/playmenu.php?WorkID=asyoulikeit                                உ ங்கள்  விருப்பம்       நீலாம்புரம்  மிகவும்  அழகான  சிறிய ராஜ்யம்..  அடர்ந்த காட்டுப்   பகுதிய